Posts

Showing posts from January, 2022

“எதிர்காலத்தில் வளங்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சாவால்களும் அதற்கான தீர்வுகளும்”

Image
  சமூகத்தில் வாழும் மனிதர்களின் தேவை அளவற்றது, பலதரப்பட்டது. அதனைப்பெற்றுக்கொள்ள பொருட்களும் சேவைகளும் அவசியம். மனிதர்களின் சகல தேவைகளையும்  முற்றுமுழுவதுமாக பெற்றுக்கொள்வதற்கான அளவு பொருட்களையும் சேவைகளையும் எந்தவொரு சமூகத்தினாலும் நிறைவேற்ற முடியாது. இதற்கான காரணம் உற்பத்தி வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டமை மற்றும் வளப்பற்றாக்குறையின் காரணமாகவே பொருட்கள் சேவைகள் உற்பத்தியில் பல ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றது.  வளங்கள் என்பது புவியிலிருந்து  இயற்கையாக கிடைக்கும் பயனுள்ள மூலக்கூறுகள்  வளம் எனக்கூறப்படுகிறது. வளங்கள் பிரதானமாக இரண்டு வகைப்படுத்தப்படுகிறது.  1. மனித முயற்சியின்றி கிடைக்கும் வளங்கள்  2. மனித முயற்சியினால் கிடைக்கும் வளங்கள்  மனித முயற்சியின்றி கிடைக்கும் வளங்கள் என்பது மனிதனது எவ்விதமான தலையீடுகளுமின்றி கிடைக்கும் வளங்களாகும். இவ்வளங்களினை பெறுவதற்காக எவ்வித தடைகளும் காணப்படாது. இவ் வளங்களுக்கு உதாரணமாக சூரிய ஒளி காற்று மற்றும் நீர் ஆகியவற்றை குறிப்பிடலாம்.  மனித முயற்சியினால் கிடைக்கும் வளங்கள் என்பது மனிதனது அறிவு திறன் அனுபவம் என்பவற்றை பயனபடுத்தி இயற்கையிலுள்ள வளங்களை பெ