Posts

Showing posts with the label ஆலோசகராக செயற்படும் ஒருவருக்குரிய உளவியல் அறிவு

ஆலோசனை கூறல் சேவையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஆலோசகராக செயற்படும் ஒருவருக்கு உளவியல் அறிவு மிகவும் அவசியமாகும். இதற்கான காரணங்களை குறிப்பிடுதல்.

Image
  தனியாள் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் அனைத்து தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பங்களிலும், உரிய முறையில் அவற்றிற்கு முகங்கொடுக்கும் சக்தியை அவரிடம் கட்டியெழுப்ப உதவும் ஒரு செயல்முறையை ஆலோசனை கூறலாம். இத்தகைய ஆலோசனை கூறல் சேவையினை மேற்கொள்வோர் சாதாரணமானவர்களாக இருக்க முடியாது. அவர்கள் பல்வேறு தகுதிகளையும், பல்வேறு விடயங்கள் பற்றிய அறிவினையும் கொண்டவர்களாக காணப்பட வேண்டும். அந்த வகையில், உளவியல் அறிவு தொடர்பாக  கட்டாயம்         அறிந்திருக்க வேண்டும். உளவியல் அறிவு எனும்போது, மனதை ஆய்வு செய்வதையும், புரிந்து கொள்வதையும், பகுப்பாய்வு செய்வதையும் நோக்கமாகக் கொண்ட துறையே உளவியலாகும். இத்தகைய உளவியலானது, பல வகைகளைக் கொண்டது. இத்தகைய உளவியல் அறிவினை ஆலோசனை மேற்கொள்ளும் ஆலோசகர் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். இதற்கான காரணங்களை கீழே சுருக்கமாகக் குறிப்பிடலாம். ஆலோசனைக்காக நாடி ஆலோசகரிடம் வரும்போது, பல்வேறு பிரச்சினைகளை மனதில் வைத்துக் கொண்டு வருவார். அவ்வாறு வருகின்றவர்கள் பொருளியலாளர், வைத்தியர், மாணவர் என வித்தியாசமான தொழிலை செய்பவர்களாக காணப்படுகின்றனர். இவர...