Posts

Showing posts with the label கல்விக்கான கோட்பாடுகளும் அவற்றிற்கான பிரயோகங்களும்

இலங்கையின் கல்வி வளர்ச்சியில் கல்விக்கான கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகங்களும் செல்வாக்கு செலுத்தும் விதம்

Image
கல்விக்கான பரந்துபட்ட வரைவிலக்கணங்களை வரிசைப்படுத்தி அவை ஒன்றில் இருந்து ஒன்று மாற்றமடைவதற்கான காரணிகளில் கல்விக்கான கோட்பாடுகளும் அவற்றிற்கான பிரயோகங்களும் செல்வாக்கு செலுத்தும் விதத்தினை இலங்கையின் கல்வி வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு ஆராய்க. மனிதனுடைய நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவது கல்வியாகும். அந்த வகையில் கல்வி என்பது குழந்தைகளை உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன்  வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பாகும் . கல்வி என்ற சொல்லிற்கான ஆங்கிலச்சொல்  Education  என்பதாகும். இந்த சொல்  Educatio  என்ற இலத்தின் மொழிச்சொல்லில் இருந்து தோற்றம் பெற்றதாகும். இந்த   Educatio  என்பது வளர்த்தலைக் குறிக்கின்றது. இது கற்பித்தல்,பயிற்றுவித்தல் எனும் பொருளைத்தரும்  ; Educo  என்ற சொல்லை அடிப்படையாகக்  கொண்டது. இதற்கு ஒத்த சொல்லாக வெளிக்கொணரல், உயர்த்திவிடல், முன்னேற்றி விடல் என்பன உள்ளன. எனவே, கல்வி என்பது  தகுந்த சூழ்நிலையை உருவாக்கி மனிதர்களின் உள்ளார்ந்த தகுதிகளை வெளியில் கொண்டு வருவது எனலாம். கல்வி என்பதற்கான வரை...