பாடசாலையில் அபிவிருத்தி செய்யப்படவேண்டிய விடயங்கள்
பா டசாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை கற்றல், கற்பித்தலை வினைத்திறனாக்கும் வகையிலான பாடசாலை மேற்பார்வைகள், அவற்றின் மீளா ய்வுகளும் பின்னூட்டலும் மேற்கொள்ளல் ஆகிய விடயங்கள் தொடர்பாக வலயக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று வருடாந்த அமுலாக்கல் திட்டம் தயாரிக்கப்படுகிறது. இது தேசிய கல்விக் கொள்கையின் நோக்கங்களை அடையும் விதமாக பாடசாலை மட்டத்தில் தயாரிக்கப்படுகிறது. இத்தகைய வருடாந்த அமுலாக்கல் திட்டம் பாடசாலையில் அபிவிருத்தி செய்யப்படவேண்டிய பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக காணப்படும் அவற்றை ஆளணி வளம், பௌதிக வளம், மாணவர்களின் கணிப்பீடு மற்றும் மதிப்பீடு செயற்பாடுகள், இணைப்பாடவிதான செயற்பாடுகள் என்றவாறு வகைப்படுத்தி கூறலாம் ஆளனி வளம் எனும்போது போதும் மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் போன்றோர் இத்தகைய ஆளணி வளத்துக்குள...