இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்புத் திட்டமிடலை மேற்கொள்ளும் போது கல்வித்திட்டமிடலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் தொடர்பில் வியாக்கியானம் செய்க.
இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்புத் திட்டமிடலை மேற்கொள்ளும் போது கல்வித்திட்டமிடலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் தொடர்பில் வியாக்கியானம் செய்க . உலகில் உள்ள நாடுகளானது, “அபிவிருத்தி அடைந்த நாடுகள், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள்” என்றவாறு நோக்கப்படுகிறது. இந்த வகையில், அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பெண்கள் சுய தொழில் வேலை வாய்ப்பானது அதிகளவில் காணப்படும் அதே வேளை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் குறைவாகவே காணப்படுகிறது. மதவாதம், ஆணாதிக்கம் மற்றும் அடக்குமுறை போன்றவற்றால் பெண்கள் வேலை வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இருப்பினும் தற்காலத்தில் கல்வியறிவு அதிகரித்து வருகின்றமையால் அந் நிலைமை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். வியாபார சந்தர்ப்ப சூழ்நிலைகளை இனங்கண்டு நிச்சயமற்ற தன்மைகளையும் இடர்களையும் எதிர்கொண்டு வளங்களை வினைத்திறனாகவும் காலம், செல்வம், திறமை போன்றவற்றை பயன்படுத்தி புதியன புனைதல் மூலம் மாற்றங்களை கொண்டு வந்து மனித தேவைகள் விருப்பங்களை திருப்தி செய்வதற்கும் தேசிய உற்பத்திக்கு பெறுமதி சேர்க்கவுமே பெண்களுக்கான ச...