கல்வியும் நவீனமயமாக்கலும்
நவீனமயமாதல் அல்லது நவீன மயமாக்கல் என்பது மாற்றம் என்பதோடு தொடர்பு கொண்டது. மக்கள் நவீன வாழ்க்கை முறைகளையும் மதிப்புகளையும் பின்பற்றும் செயல்பாடுதான் நவீனமயமாதல் ஆகும். மேலும் நவீனமயமாதல் என்பது, ஒரு சமூகம், அறிவியல், தொழில்நுட்பம், பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்றும் வேறு வகையில் கூறமுடியும். இந்த நவீனமயமாதலினால் கல்வியில் ஏற்பட்டுள்ள தாக்கங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் எண்ணங்களையும் உயர்த்தும் ஓர் ஊடகமாக விளங்குதல். நவீனமயமாதலானது கல்வியின் குறிக்கோளையும் தற்காலத்திற்கு ஏற்றவாறு நவீன கலை திட்டத்தையும் பள்ளி-கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் புகுத்தி மாணவர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்க காரணமாக உள்ளது கல்வியானது இன்று ஏற்றத்தாழ்வுகளை கடந்து அனைவருக்கும் கல்வி நிலை உருவாக காரணமாக உள்ளது. மாணவர்கள் தானே கற்றல் அல்லதுசுயகற்றல் முறைகளுக்கு வழிவகை செய்கின்றது. கல்வியறிவு அதிகரிக்க நவீனமயமாக்கல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதாவது இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் இன்றி ...