பாடசாலையில் ஆலோசனை சேவையில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஆற்றவேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் தற்கால பாடசாலைகளில் காணப்படும் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு விபரிக்குக.
ஏனைய நாடுகளில் காணப்படுவதைப் போலவே இலங்கையிலும் சமுதாய ரீதியிலான, பாடசாலை ரீதியிலான, காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தமது மனவெழுச்சி சார் தொந்தரவுகளில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும், பொருத்தமான மனப்பாங்குகளையும் நடத்தைகளையும் கற்றுக் கொள்வதற்காகவும் பாடசாலை அமைப்பில் உருவாக்கப்பட்ட அமைப்பே வழிகாட்டல், ஆலோசனை சேவையாகும். இத்தகைய சேவையை மேற்கொள்வதற்கு 300 மாணவர்களிற்கும் மேற்பட்ட மாணவரை கொண்டுள்ள ஒவ்வொரு 1AB, 1C பாடசாலையிலும் ஒரு முழுநேர பாடசாலை ஆலோசகரும் 300க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்டுள்ள 1AB, 1C பாடசாலையிலும் ஒரு பகுதி நேர பாடசாலை ஆலோசகரும் இருக்க வேண்டும், என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை(2001/06) குறிப்பிடுகின்றது. இந்த வகையில், பாடசாலையில் இத்தகைய சேவையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன அவற்றை கீழே விரிவாக நோக்குவோம். ஒரு பாடசாலையில் தலைமைத்துவமாக உள்ள அதிபரின் ஒத்துழைப்பின்றி ஆசிரியர்கள் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது. அவ்வாறே அதிபரும், ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவரா...