Posts

Showing posts with the label தேசிய நல்லுறவுக்காக கல்வி

தேசிய நல்லுறவுக்காக கல்வி

Image
தேசிய நல்லுறவு என்பது தனிமனிதன், சமயம், இனம் குலம், கோத்திரம், கலாச்சாரம் ஆகிய பேதங்களை பாராமல் மக்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக வாழ்ந்தல் ஆகும். இதனை ஏற்படுத்துவதில் இன்று கல்வி மிகப்பெரிய பங்கினை வகிக்கின்றது. தேசிய நல்லுறவுக்காக கல்வி பூகோளமயமாதலின் காரணமாக பல கலாச்சாரத்தினை கொண்டவர்களும் ஒன்றாக வாழ வேண்டிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொருவரும் ஏனையோரின் கலாச்சாரத்தினை ஏற்றுக்கொண்டு அவற்றினை முடியுமானவரை சகித்துக்கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வாழ்வதற்கான மனநிலையை வழங்குவதாக கல்வி அமைகிறது. இங்கு கல்வியானது, பல்வகைமையை ஏற்றுக்கொள்ளவும் சகிக்கவும் பல்கலாசார மக்களும் பிரச்சினையின்றி வாழ்வதற்கான ஆற்றலையும் வழங்குவதாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தேசிய ஒருமைப்பாட்டுக்கான ஜனநாயக ரீதியான தலைமைத்துவம் உருவாக்கப்படுவதற்கு கல்வி அவசியமானதாகும். கல்வி மூலம் இதனை ஏற்படுத்துவதற்காகவே இலங்கையில் 1992 ஆம் ஆண்டு தேசிய கல்வி ஆணைக்குழு பல்வேறு குறிக்கோள்களை உருவாக்கியிருந்தது. அந்த வகையில், மனித கௌரவத்தை கண்ணியப்படுத்துதல் எனும் எண்ணக்கருவுக்குள், தேசிய பிணைப்பு, த...