சிறந்த ஆலோசகர் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய பண்புகள்
ஆலோசனை நாடிகளின் பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு மதிப்பிட்டு பொருத்தமான பதில் மொழிகளை அளிப்பவராகவுள்வறே ஆலோசகர் ஆவார். இவரது பணி, “ஆலோசனை நாடிகள், இவர்களை சந்திக்க வருகின்ற போது குழப்பமாக சுயமதிப்பீடு குறைந்து தங்களது ஆற்றல்களை புரியாமலேயே வருகின்றனர். இத்தகைய பிரச்சினை பற்றிய தெளிவையும் தீர்வுகள் பற்றிய அறிவும் இல்லாதவர்களாகவே வருகின்றனர். இவர்களுக்கான தீர்வுகளை எடுக்கக்கூடிய ஆற்றல்களை ஆலோசனை நாடியிடம் ஏற்படுத்துவதே ஆகும்”. இத்தகைய சேவையை வழங்கும் ஆலோசகர்கள் சிறந்த பண்புகளை கொண்டிருக்க வேண்டும். அவற்றைக் கீழே விரிவாக நோக்கலாம். ஆலோசனை வழங்கும் நபர் உண்மையில் முன்மாதிரியான தன்மைகளை கொண்டிருத்தல் வேண்டும். அறிவில் தெளிவு மிக்கவராகவும், சக்தி உடையவராகவும், நெகிழ்வானவராகவும் உதவி அளிப்பவராகவும் இருத்தல் வேண்டும். மனித உறவுகளை உறுதி செய்பவை மனநிலையாகும். நாம் கொண்டிருக்கும் எண்ணங்களை ஒருவரிடம் கொண்டுள்ள உறவின் தன்மையையே நிர்ணயிக்கின்றன. ஆலோசனையில் ஈடுபடும்போது உதவி பெறுபவர் குறித்து கொண்டுள்ள எண்ணங்கள் வழிகாட்டலில் வெற்றியை நிர்ணயிக்கின்றன. ஆலோசனை வழிகாட்டல் துறையில் புலமை பெற்றவர...