Posts

Showing posts with the label மனிதவள அபிவிருத்தி

கல்வியும் மனிதவள அபிவிருத்தியும்

Image
  ஒரு ஒழுங்கமைப்பின் அல்லது ஒரு நிறுவனத்தின் மனித வளம் ஏனைய அனைத்து வளங்களையும் விட விசேடமானதும் முக்கியமானதும் ஆகும். ஒரு நிறுவனத்தின் ஏனைய வளங்கள் கையாளப்படுவது மனித வளங்களினாளாகும். இதனை உள்ளார்ந்த மனித வளங்கள், வெளி வாரியான மனித வளங்கள் என பிரித்து நோக்கலாம். உதாரணமாக பாடசாலையை எடுத்து நோக்குவோமாயின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் போன்றோர் உள்ளார்ந்த மனித வளங்கள் எனவும், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், உயர் கல்வி அதிகாரிகள், சமூக அமைப்புக்கள் என்பன வெளி வாரியான மனித வளங்கள் எனவும் குறிப்பிடலாம். மேற்கூறப்பட்ட மனித வளங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற கருத்தாடல் அதிகமாக உள்ளது. அந்த வகையில், மனித வள அபிவிருத்தி என்பது தொடர்பான பல ஆய்வுகள் இடம் பெற்று வந்துள்ளதை காணமுடிகிறது. இவற்றில் அபிவிருத்தி என்பதற்கு பலதரப்பட்ட விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. அபிவிருத்தி என்பது பெரிய பரந்த பரப்பு ஆகும் இதற்கு மாற்றம் போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகிறது. தனிமனிதன் தன்னைத் தானே தனது ஆற்றல்களை வளர்த்துக் கொண்டு போதல் அபிவிருத்தி என்று சுருக்கமாக கூறினாலும், ...