Posts

Showing posts with the label கலைத்திட்ட அபிவிருத்தி

பாடசாலையில் வினைத்திறனான கலைத்திட்ட அபிவிருத்தி

Image
கற்றலுக்கு உரித்தானவற்றுக்கான ஒரு திட்டமே கலைத்திட்டமாகும். பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை அதாவது முறைசார்ந்த கல்வியிலும் முறைசாராத கல்வியிலும் உள்ள கற்றல் கற்பித்தல் செயன்முறை தொடர்பாக காணப்படும் முறையான திட்டமே கலைத்திட்டம் எனலாம். இது ஒழுங்கமைந்த கல்வி தொடங்கிய காலத்திலிருந்தே மனிதனுடன் இணைந்தவாறு தோற்றம் பெற்று விட்டது. பாடசாலையின் வடிவங்கள் ஆரம்ப காலத்திலிருந்து மாற்றமடைந்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் கலைத்திட்டமும் மாற்றமடைகிறது.  கலைத்திட்டத்துக்கு ஆங்கிலத்தில் Curriculum எனப்படுகிறது. Curriculum என்ற ஆங்கிலப் பதத்துக்கு ஈடாக பல தமிழ் பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில், “ கல்வித்திட்டம், கல்வி ஏற்பாடு, பாடஏற்பாடு, பாடவிதானம், கலைத்திட்டம்” போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். எமது நாட்டில் கலைத்திட்டம், பாடவிதானம் எனும் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. Curriculum என்ற ஆங்கிலப்பதம் ; Currere எனும் லத்தீன் சொல்லில் இருந்து மருவியது. லத்தீன் மொழியில் Currere  என்பதற்கு, “ஓடுதல் அல்லது ஓடிக்கொண்டிருக்கும் நடவடிக்கை( Action of running ), நடவடிக்கை( Course of Action ...