Posts

Showing posts with the label பிள்ளையின் கற்கை முறைகள் (Methods Of Child Study)

பிள்ளையின் கற்கை முறைகள் (Methods Of Child Study)

Image
  இன்றைய நவீன கல்விச்சிந்தனை போக்குகளில் சிறப்பான கல்வியை வழங்குவதற்கு கற்றல் கற்பித்தலுடன் தொடர்பான முக்கிய விடயங்களை சரியாக இனங்காண்பது அவசியமாகும் . இதனடிப்படையில் இன்று கல்விச்செயற்பாடுகளில் பிள்ளைகளை முழுமையாக விளங்கிக்கொள்வது இன்றியமையாததாகும் . ஆசிரியரின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைவதற்கும் பிள்ளைகளை விளங்கிக்கொள்வதற்கும் பிள்ளை ஆய்வு முறைகள் பற்றிய விளக்கம் பிரதானமாதாகும் . பிள்ளைகளை விளங்குவது என்பது பிள்ளையின் அறிவுமட்டம் மனப்பாங்குகளின் தன்மை , திறன்களின் வெளிப்பாடுகள் , குடும்பப்பின்னணி , சுகாதார நிலை , ஆளுமைக்கோலம் , நுண்ணறிவுமட்டம் ,  ஆன்மீக ஈடுபாடு , ஒழுக்கப்பண்பாடுகள் , தனியாள் வேறுபாடுகள் , விசேட தேவைகள் , குறைபாடுகள் போன்ற அனைத்தையும் விளங்கிக்கொள்வது இன்றியமையாததாகும் . முதலில் ஒவ்வொரு ஆசிரியரும் தன்னை முழுமையாக அறிந்துகொள்ளல் வேண்டும் . தன்னுடைய கல்வி அறிவு , திறன்கள் , பழக்கவழக்கங்கள் , தொடர்பாடல் , உளவியல் அறிவு , போதனா அறிவு , பிள்ளைகளை புரிந்துகொள்ளும் ஆற்றல் என்பவற்றில் தெளிவு ஏற்படவேண்டும் ...