கல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மையை ஏற்படுத்தும் காரணிகளை உமது பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்க.
ஒரு நாட்டில் நிலவி வரும் நிலைமையின் சமூக, பொருளாதார, அரசியல், கல்வி ஆகிய துறைகளில் ஏற்படும் சிறந்த அதே போல அளவு ரீதியான மாற்றங்கள் அல்லது முன்னேற்றம் என்பதனை “அபிவருத்தி” எனலாம். இந்த வகையில் நாட்டின் அபிவிருத்தியில் கல்வி அபிவிருத்தியானது மிகவும் முக்கியமானதாகும். கல்வி அபிவிருத்;தி என்பது “கல்வி மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் மற்றும் வளங்கள் மீது முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கல்வியை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்வதாகும்”. சமமான வளப்பகிர்வு, பொருளாதார அபிவிருத்தி, மற்றும் சரியான திட்டமிடல் போன்றனவற்றின் ஊடாக அபிவிருத்தி அடைந்த நாடுகள் கல்வியை அபிவிருத்திக்குட்படுத்துகிறது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பின்னடைவில் இருப்பதற்கு காரணம் தங்களது நாடுகளில் கல்வித் துறையை அபிவிருத்தி செய்யாமையே ஆகும். அதாவது பொருளாதாரம், அரசியல், சமூகம் என்பவற்றை அபிவிருத்தி செய்ய கல்வி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். பொருளாதார அபிவிருத்தியின்மை, வளப்பகிர்வு ச...