கல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மையை ஏற்படுத்தும் காரணிகளை உமது பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்க.

ஒரு நாட்டில் நிலவி வரும் நிலைமையின் சமூக, பொருளாதார, அரசியல், கல்வி ஆகிய துறைகளில் ஏற்படும் சிறந்த அதே போல அளவு ரீதியான மாற்றங்கள் அல்லது முன்னேற்றம் என்பதனை “அபிவருத்தி” எனலாம். இந்த வகையில் நாட்டின் அபிவிருத்தியில் கல்வி அபிவிருத்தியானது மிகவும் முக்கியமானதாகும்.

                                     
கல்வி அபிவிருத்;தி என்பது “கல்வி மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் மற்றும் வளங்கள் மீது முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கல்வியை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்வதாகும்”. சமமான வளப்பகிர்வு, பொருளாதார அபிவிருத்தி, மற்றும் சரியான திட்டமிடல் போன்றனவற்றின் ஊடாக அபிவிருத்தி அடைந்த நாடுகள் கல்வியை அபிவிருத்திக்குட்படுத்துகிறது.


அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பின்னடைவில் இருப்பதற்கு காரணம் தங்களது நாடுகளில் கல்வித் துறையை அபிவிருத்தி செய்யாமையே ஆகும். அதாவது பொருளாதாரம், அரசியல், சமூகம் என்பவற்றை அபிவிருத்தி செய்ய கல்வி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். பொருளாதார அபிவிருத்தியின்மை, வளப்பகிர்வு சமமின்மை, முறையான திட்டமிடலின்மை போன்றவற்றால் கல்வி அபிவிருத்திக்குட்படாமல் காணப்படுகிறது. இதனாலேய இத்தகைய நாடுகள் பின்னடைந்து காணப்படுகின்றன.


அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் கல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மையை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில் ஒரு நாட்டில் முழுமையான கல்வி அபிவிருத்தி ஏற்பட வேண்டுமாயின் பிரதேச ரீதியில் கல்வி அபிவிருத்தி அடைய வேண்டும். அவ்வாறான நிலையினை இலங்கையில் காணமுடியாதுள்ளது. இதுவே இலங்கை கல்வி அபிவிருத்தியில் பின்நிற்பதற்கு காரணமாகும். 


இவ்வாறு இலங்கையில் கல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மையை ஏற்படுத்தும் காரணிகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.

1. அமைவிடம்

2. சனத்தொகை

3. அரசியல் காரணிகள்

4. ஒரே இடத்தில் கல்வி நிறுவனங்கள் குவிக்கப்பட்டிருத்தல்

5. வளப்பகிர்வு சமமின்மை

6. மாற்றமடையும் கல்விக் கொள்கைகள்

7. இனப்பாகுபாடு

8. ஆசிரியர்களின் மனப்பாங்கு

9. தனவந்தர்களின் ஒத்துழைப்பு

10. பெற்றோரின் கவனம்

11. வறுமை


சனத்தொகை

09 மாகாணங்களிலும் சனத்தொகை எண்ணிக்கையில் வேறுபாடு காணப்படுவது போல பாடசாலைகளின் எண்ணிக்கையிலும் கல்வி வலயங்களின் எண்ணிக்கையிலும் வேறுபாடு உள்ளது. உதாரணமாக,

வட மாகாணம் 971 பாடசாலைகள்- 5 மாவட்டம்

மேல்மாகாணம் 1360 பாடசாலைகள்-3 மாவட்டம்

மேல் மாகாணத்தில் உயர்ந்த சிறந்த பாடசாலைகள் அதிகமாக காணப்படும் அதே வேளை ஏனைய இடங்களில் அவை குறைவாகவே உள்ளது. 

இவ்வாறு சனத்தொகை கூடிய பிரதேசங்களில் பாடசாலைகள் அதிகமாகவும் சனத்தொகை குறைவான பிரதேசங்களில் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் காணப்படுகிறது. 


ஒரே இடத்தில் கல்வி நிறுவனங்கள் குவிக்கப்பட்டிருத்தல்

அரச மற்றும் அரசசார்பற்ற கல்வியியல் வாய்ப்புக்கள் மேல் மாகாணத்தில் அதிகம் உள்ளது. இலங்கையில் உள்ள 15 பல்கலைக்கழகங்களில் 6 பல்கலைக்ககைங்கள் மேல் மாகாணத்திலே உள்ளது.

இவ்வாறு ஏனைய மாகாணங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில்  பல்கலைக்கழகங்கள் உள்ள போதும் முக்கிய சில பீடங்கள் காணப்படுவதில்லை. உதாரணம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் போன்றவற்றுக்கு பொறியியல் பீடம் வழங்கப்படாமை.


தலைநகரம், மாநகர சபை மற்றும் நகர சபை உள்ள இடங்களில் கல்வி அபிவிருத்தியானது உச்ச அளவில் காணப்படுகிறது. அதாவது தலை நகரமாக கொழும்பு உள்ளமையால் அங்கு, “ தேசிய கல்வி நிறுவனம், கல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு, 3ம் நிலை மற்றும் தொழில் சார் ஆணைக்குழு, இலங்கை பரீட்சை அலுவலகம்” போன்றவை உள்ளது. இவ்வாறு ஒரே இடத்தில் கல்வி நிறுவனங்கள் உள்ளமையால் கல்வி அபிவிருத்தியில் சமமின்மை நிலவுகிறது.


மாற்றமடையும் கல்விக் கொள்கைகள்

இலங்கையின் கல்விக் கொள்கையானது காலத்திற்கு காலம் மாற்றமடைந்து வருகிறது. இது கல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை இடம்பெறுவதற்கு பிரதான காரணமாகும். அதாவது இலங்கை, பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து கல்விக் கொள்கையானது மாற்றமடைந்த வண்ணமே உள்ளது. குறிப்பாக 2 பிரதான கட்சிகள் 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சி செய்யும் நடை முறையுள்ளது. இதன் போது முன்னைய அரசாங்கம் உருவாக்கிய, அமுல்படுத்திய திட்டங்களை புதிதாக ஆட்சிக்கு வரும் அரசாங்கம் இடைநிறுத்தும் நிலை உள்ளது. 

உதாரணமாக, மலையகத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் முன்னிருந்த நல்லாட்சி அரசாங்கமானது க.பொ.த உயர் தரத்தில் 3 பாடங்களிலும் சித்தி பெற்ற மாணவர்களுக்கு தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்க திட்டமிட்டது. எனினும் தற்போது புதிதாக வந்த அரசாங்கமானது அதனை வாத--பிரதி வாதங்களுக்கு உட்படுத்தி இடைநிறுத்தப்படடுள்ளமையை குறிப்பிடலாம்.


இனப்பாகுபாடு

கல்வி அபிவிருத்தியில் இனப்பாகுபாடு பிரதானமாகவுள்ளது. அதாவது சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர் என பிரதானமாக 3 இனங்கள் உள்ளன. இதில் அதிகமாக சிங்களவர்களே உள்ளனர். இந்த வகையில் நாட்டின் தலைமைப்பதவியை பெரும்பான்மையினரான சிங்களவர்களே வகிப்பதனால் தங்களது பிரதேசங்களுக்கே கல்வி அபிவிருத்தி திட்டங்களை கொண்டு செல்கின்றனர். இது தற்காலத்தில் கல்வி அபிவிருத்தி பிராந்திய ரீதியில் சமமின்மைக்கு பிhதான காரணமாகவுள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பெரும்பான்மையினர் குறைவாகவும் முஸ்லம்கள் தமிழர் கூடுதலாகவும்  உள்ளமையால் கல்வி அபிவிருத்தி திட்டங்கள் கொண்டுவரப்படுவது குறைவாகவே உள்ளது.

உதாரணமாக, மட்டக்களப்பு மத்தி வலயத்தில் உள்ள பிரதேசங்களில் உள்ள மக்களிடையே இனத்திக்குள் பாகுபாடு எதுவும் இல்லை ஆனால் மட்டக்களப்பு வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதன் பெயர்களிலே இனப்பாகுபாடு உள்ளது. அதாவது மெதடிஸ் கல்லூரி, மைக்கல் கல்லுரி, இந்துக்கல்லூரி எனப்பெயரிடப்பட்டுள்ளது.


யுத்தத்திற்கு முன் இடைநிலைக்கல்வியில் முதன் நிலையில் காணப்பட்ட வட மாகாணம் இன்று பின்தள்ளப்பட்ட நிலையில் இருப்பதற்கு காரணம் இனத்துவமாகும். அவ்வாறே வட மாகாணத்தில் அதிகமான மாணவர்கள் உயர் தரத்தில் சித்தியடைவதனால் அதனைக் குறைக்கும் நோக்கிலே கோட்டா முறை கொண்டு வரப்பட்டது. 


வளப்பகிர்வு சமமின்மை

வருடாந்த வரவு – செலவு திட்டத்தில் கல்விக்கு என அதிகளவான தொகை ஒதுக்கப்பட்டாலும் அது குறிப்பிட்ட சில பிரதேசங்களின் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்ளவே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தலைநகரம், மாநகரம் மற்றும் நகர சபைகளைக் கொண்ட பிரதேசங்களிலேயே அதிகளவில் மேற்கொள் ளப்படுகிறது. 


அரசியல்வாதிகளின் தலையீடு

அரசியல்வாதிகள் தங்கள் பிரதேசத்தில் மாத்திரம் முன்னுரிமை அடிப்படையில் வேலை வாய்ப்புக்களை வழங்குதல். மேலும் கல்வி அமைச்சராக வருபவர் தங்கள் மாவட்டத்தில் மாத்திரம் அதிக கல்வி அபிவிருத்திகளை மேற்கொள்ளல். 

உதாரணமாக, மட்டக்களப்பு பிரதேசத்தினை பொறுத்தவகையில் முஸ்லிம்களும் தமிழர்களும் சேர்ந்து வாழும் தமிழ் பேசக்கூடியவர்களைக் கொண்ட பிரதேசமாகும். இது 4 கல்வி வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவ் வலயங்களில் மட்டக்களப்பு மத்தி வலயம் (ஏறாவூர், காத்தான்குடி, கல்குடா) முஸ்லிம் பாடசாலைகளைக் கொண்டது. ஏனைய வலயங்கள் தமிழ் மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைக் கொண்டது. மட்டக்களப்பு மத்தி வலயத்தில் உள்ள அரசியல்வாதிகள் அரசாங்கத்துடன் இணைந்து இருப்பதனால் அதிகளவான அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவந்து தங்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்கின்றனர். அதாவது நூலகம், கணனி அறை, ஆய்வு கூடம் என்பவற்றை தங்களது பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு ஏற்படுத்தி கொடுக்கின்றனர். ஏனைய வலயங்களில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்துடன் இணையாது இருப்பதனால் அவர்களது பிரதேசங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கும் நிதி மாத்திரமே கிடைக்கிறது. இதனால் ஒப்பீட்டளவில் குறைவான அபிவிருத்தியே அவர்களின் பிரதேசங்களில் நிலவுகிறது. பொதுவாக முஸ்லிம்கள் அபிவிருத்தி அரசியலையும் தமிழர்கள் உரிமை அரசியலையும் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 


உயர் தொழிநுட்ப வகுப்பறை(Smart Class Room) கொழும்பு ஜயவர்தனபுர மகா வித்தியாலயம், பதுளை விசாகா கல்லூரி போன்ற நகர்ப்புற பாடசாலைகளில் காணப்படுகின்ற அதே வேளை மலையகப் பாடசாலைகள், பல இடிந்து விழும் வகுப்பறைகளுடன் காணப்படுகின்றன. 


கஷ்ட பிரதேச வெளிமாவட்டங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்படும் போது குறிப்பிட்ட அரசியல்வாதிகள் தலையிட்டு தங்களது அதிகாரத்தின் ஊடாக அவர்களை வேறு பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்தல். இது முற்றிலும் தவறான ஒன்றாகும் ஏன்எனில் திறமையான ஆசிரியர்கள் இன்மையினாலேயே குறிப்பிட்ட ஆசிரியர்களை, அதிகாரிகள் அப்பிரதேசங்களுக்கு நியமிக்கின்றனர். இவ்வாறு அரசியல்வாதிகள் தலையீட்டினால் குறிப்பிட்ட அப்பிரதேசங்கள் தொடர்ந்தும் பின்னடைவிலேயே இருக்கிறது. 


மேலும் திறமையான ஆசிரியர்களை அரசியல்வாதிகள் தங்கள் பிரதேசத்தில் கடமையாற்றும் வகையில் நியமனம் செய்தல், தகுதியற்றவர்களை  கல்வித்துறையில் வேலை செய்வதற்கு நியமித்தல் போன்றவற்றையும் மேற்கொள்கின்றனர். அவ்வாறே தங்கள் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு போதியளவு தளபாடம், நூலகம், மற்றும் தொழி;நுட்ப வசதிகளை பெற்றுக் கொடுக்கின்றனர்.  உதாரணமாக, மலையகத்தில் ஆசிரியபற்றாக்குறை நிலவும் அதே வேலை இருக்கின்ற ஆசிரியர்களும் தகைமையற்றவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 


அமைவிடம்

நாட்டில் உயர தாழ்வு வேறுபாடுகளும் புவியியல் அமைப்பு போன்றவையும் கல்வி அபிவிருத்தியில் பங்கெடுக்கின்றது. கரையோரங்களில் உள்ள பாடசாலைகள் சுனாமி, சூறாவளி போன்றவற்றுக்கும் மலையகத்தில் உள்ள பாடசாலைகள் மண்சரிவு அபாயத்திற்கும் உள்ளாகிறது. இதனால் பாடசாலைகளில் நிலையான அபிவிருத்திகளை மேற்கொள்வது சிரமமாகும். 


மேலும் நகரத்தில் உள்ள பாடசாலை போதியளவு வளங்களுடன் காணப்படும் அதேவேளை நகரத்திற்கு வெளியில் உள்ள பாடசாலை போதியளவு வளமின்றி காணப்ப:கிறது. உதாரணமாக ஏறாவூர் நகரில் ஒரு தேசிய பாடசாலை காணப்படும் அதேவேளை ஏறாவூர் பற்று பகுதியில் 1யுடீ பாடசாலை ஒன்றும் ஏனைய சிறிய பாடசாலைகளும் காணப்படுகிறது. இதனால் ஏறாவூர் பற்று பகுதியில் உள்ள மாணவர்கள் நகர்ப்பகுதிக்கு மாலை நேர வகுப்புக்களுக்கு வருகின்றனர். இவ்வாறு அமைவிடமானது கல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மையை காட்டுகிறது


ஆசிரியர்களின் மனப்பாங்கு 

பொதுவாக ஆசிரியர்கள் தேசிய பாடசாலை, 1யுடீ பாடசாலை போன்றவற்றில் கடமையாற்ற விரும்புவதோடு கஷ்டப் பிரதேப் பாடசாலைகளில் கற்பிப்பதனை வெட்கமாகவும் கருதுகின்றனர். இதனால் அப்பாடசாலைகளில் முழு மனதோடு செயற்படுவதில்லை. இது அப்பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிக்கிறது. மேலும் அங்குள்ள மாணவர்களின் ஊக்கமின்மையும் வரவு குறைவும் ஆசிரியர்களின் மனப்பாங்கினை மாற்றுகிறது. இதுவும் கல்வி அபிவிருத்தியில் சமமின்மை நிலவ காரணமாகும்.

தனவந்தர்களின் உதவிகள்

மட்டக்களப்பு மத்தி வலயத்தினை சேர்நத தனவந்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் பாடசாலைகளுக்கு அதிகளவான உதவிகளை செய்கின்றனர். மேலும் உயர் கல்வியை தொடர்வதற்கு முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கி  கல்வியை தொடர வழிவகுக்கின்றனர். இதனால் மாணவர்கள் இடைவிலகும் நிலை குறைவாகவுள்ளது. இவ்வாறான நிலை மட்டக்களப்பு வலயத்தில் இல்லை இதனால் கல்வியை தொடர வசதியற்ற மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.


பெற்றோரின் கவனம்

ஏனைய மாகாணங்களில் உள்ள பெற்றோரை விடவும் கல்வி நடவடிக்கையில் அதிகம் ஆர்வம் கொணடவர்களாக மேல் மாகாணத்தில் உள்ள பெற்றோர் உள்ளனர். இதனாலேயே அங்கு கல்வி அபிவிருத்தியானது சிறப்பாக இடம்பெறுகிறது. அவ்வாறே மட்டக்களப்பு மத்தி வலயத்தில் உள்ள பெற்றோர்கள் கல்வி நடவடிக்கையில் அதிகம் ஆர்வம் கொணடவர்களாக காணப்படுகின்றனர். ஏனைய வலயங்களில் உள்ள பெற்றோர் அவ்வாறில்லை. அவர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி தொடர்பாக எவ்வித கவனிப்பும் இன்றி இருக்கின்றனர். இதனால் கல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை நிலவுகிறது

மட்டக்களப்பு மாவட்டமானது மட்டக்களப்பு மத்தி வலயம், மட்டக்களப்பு வலயம், மட்டக்களப்பு மேற்கு வலயம், கல்குடா வலயம் என 4 பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவ்வலயங்களில் முன்நிலையில் இருப்பது மட்டக்களப்பு மத்தி வலயமாகும். பின்னடைவில் இருப்பது மட்டக்களப்பு மேற்கு வலயம் உள்ளது. இது முழுமையாக அதிகஷ்ட, கஷ்ட பாடசாலைகளையும், கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தின் வடுக்களையும், பாடசாலை கல்வியை மட்டும் நம்பி வாழும் பெரும்பான்மையான மாணவர்களையும், அன்றாட தமது வாழ்க்கையினை வழி நடாத்துவதற்கு போராடும் மக்களையும், கல்வியின் அவசியத்தை மெது மெதுவாக உணர்கின்ற மக்களையும், முக்கியமான பாடங்களுக்கு இன்னமும் ஆசிரியர் பற்றாக்குறையையும் கொண்டுள்ளது.  இவ்வாறு குறிப்பிட்ட மாவட்டத்திற்குள்லேயே கல்வி அபிவிருத்தியில் பிராந்திய ரீதியில் சமமின்மை நிலவுவதை அவதானிக்கக் கூடிறதாகவுள்ளது.


எனவே மேற்கூறிய காரணங்கள் “கல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மையை ஏற்படுத்தும் காரணிகளாகும். இவ்வாறான காரணிகள் உள்ள போதும் தற்காலத்தில் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையிலே அனைத்து வகையான கல்வித்திட்டங்களையும் மேற்கொள்வதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது எனலாம்.


-RASIMA.BF(BA-R),

EASTERN UNIVERSITY,SRI LANKA.



Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]