Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]
ஒவ்வொரு இயல்பூக்கமும் பொருள், மனவெழுச்சி, தொழிற்பாடு ஆகியவற்றின் மூலம் ஆக்கம் பெறுகின்றது . இது தொடர்பான விளக்கத்தை முன்வைத்து விபரித்தல் . க ற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பல்வேறு கொள்கைகள் பயன்படுத்தப்படுகிறது . அந்த வகையில் ஊக்கல் கொள்கைகளும் முக்கியமானதாகவுள்ளது . மனிதனின் நடத்தையை தூண்டும் காரணிகளாக கற்றல், ஊக்கல், மனவெழுச்சிகள், அறிவுசார் இயல்புகள் என்பன உள்ளன . இவற்றில் ஊக்கல் வாழ்க்கையில் அடிக்கடி உபயோகிக்கும் ஒன்றாகவுள்ளது . பசியால் உணவை தேட ஊக்குவிக்கப்படல் , கோபத்தினால் குற்றம் புரிவதற்கு ஊக்குவிக்கப்படல், பரிசு, அன்பளிப்பு என்பவற்றால் ஒன்றை செய்வதற்கு ஊக்குவிக்கப்படல் . என்பவை எமது வாழ்வில் அடிக்கடி இடம்பெறும் ஊக்கல் செயற்பாடுகளாகும் . இத்தகைய ஊக்கல் மூலமே மனிதனுடைய நடத்தைகள் இடம்பெறுகின்றன. ஊக்கல் என்பதை வெவ்வேறு உளவியலாளர்கள் வெவ்வேறு விதமாக வரைவிலக்கணம் செய்துள்ளனர் . அந்த வ...