ஆரம்ப பாடசாலைகளில் ஆலோசனை வழங்கல் சேவையின் தன்மைகளும் நோக்கங்களும்.
சமூக, பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பாடசாலையில் ஆலோசனை வழங்கல் சேவையினை அவசியமாக்கியுள்ளன. அந்தவகையில் படிப்படியாக பாடசாலைகளில் ஆலோசனை வழங்கல் சேவையானது விருத்தியாக்கப்பட்டு வருகிறது. இச்சேவை ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான ஆலோசனை வழங்கல் சேவை, இடைநிலை மாணவர்களுக்கான ஆலோசனை வழங்கல் சேவை என இரண்டு விதமாக வழங்கப்படுகிறது. அவற்றில் ஆரம்ப பாடசாலைகளில் ஆலோசனை வழங்கல் சேவையின் தன்மைகளையும் நோக்கங்களையும் கீழே விரிவாக நோக்குவோம். ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு ஆலோசனை சேவையானது வழங்கப்படுவதற்கான நோக்கங்களாக கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம். குடும்பத்திலிருந்து போதிய கவனிப்பு கிடைக்காமையால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை கல்வியில் கவனம் செலுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல். கற்றல் குறைபாடுடைய பிள்ளைகளை சரியாக இனங்கண்டு அதற்குரிய மாற்றீடுகளை செய்து கல்வியில் சிறந்த முறையில் திகழச்செய்தல். இத்தகைய நோக்கங்களை சற்று விரிவாக நோக்குவோம். ஆரம்ப பாடசாலையில் மாணவர்கள் கல்வியினை சிறந்த முறையில் விளங்கிக் கொண்டால் அதற்கடுத்ததாக தொடரும் இடைநிலைக் கல்வியை சிறப்பாக தொடரலாம். ...