ஆலோசனை வழங்கல் சேவையில் வழங்கப்படுகின்ற பல்வேறு வகையான ஆலோசனைகள் கஷ்டமான சந்தர்ப்பங்களின் போது உதவி செய்வதுடன் திருப்திகரமான செயல் திறனுடைய வாழ்க்கை அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதை நோக்காக கொண்டு வழங்கப்படுவதே ஆலோசனை வழங்கலாம். இத்தகைய ஆலோசனை வழங்கலானது பல வகைகளை கொண்டுள்ளது. அத்தகைய வகைகளாக கீழ் வருவனவற்றை குறிப்பிடலாம். உளவியல்சார் ஆலோசனை கல்வி சார் ஆலோசனை தொழில்சார் ஆலோசனை குடும்ப ஆலோசனை மேற்குறிப்பிட்டவாறு பொதுவாக நான்கு வகைகளாக ஆலோசனை வழங்கல் காணப்படுகிறது இத்தகைய வகைகள் ஒன்றிலிருந்து ஒன்று தனித்து செயல்படுவதில்லை. அதாவது மனிதனுடைய தேவைகளை தனித்தனியாக பிரித்து வைக்க முடியாதாகையால் மேற்குறிப்பிட்ட நான்கு வகைகளும் ஒன்றோடொன்று இடைத்தாக்கம் புரிந்த வண்ணம் உள்ளன. இந்த வகைகளை சற்று விரிவாக நோக்குவோம். உளவியல்சார் ஆலோசனை உளவியல் எனும் போது மனதை ஆய்வு செய்வதையும் புருந்து கொள்வதையும் பகுப்பாய்வு செய்வதையும் நோக்காகக் கொண்ட துறையே உளவியல் ஆகும். இத்தகைய உளவியல் ரீதியாக ஏற்படும் பயம், பதற்றம், அளவுக்கதிகமான பயம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கும், ...
Posts
Showing posts with the label ஆலோசனை
வகைகள் ( Types of Counselling )