ஜீன் பியாஜேயின் தூல சிந்தனை பருவ விருத்தி
ஜீன் பியாஜேயின் தூல சிந்தனை பருவ விருத்தி பற்றிய செயற்பாடுகள் ஆரம்ப வகுப்புக்களான 3;, 4, 5 ஆகியவற்றின் செயற்பாட்டில் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை ஆராய்க . புறவய அடிப்படையிலும் கணிப்பின் அடிப்படையிலும் அளக்கக்கூடிய தோற்றப்பாடு பற்றிய விஞ்ஞானமே உளவியல் எனலாம் . அதாவது மனிதனது நடத்தை , குணநலன் என்பவற்றை விளக்கும் அறிவியலுடன் தொடர்புடைய பகுதி உளவியலாகும் . இந்த உளவியலானது பல்வேறு வகைகளைக் கொண்டதாகவுள்ளது . மேலும் இது தொடர்பாக பல்வேறு அறிஞர்களும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் . இதில் முக்கியமானவராக ஜீன் பியாஜே எனும் உளவியலாளர் காணப்படுகிறார் பியாஜே சுவிட்ஸர்லாந்தில் 9 ஆகஸ்ட் 1896 பிறந்தார் . இவர் ஓர் உளவியலாளரும் அறிவியலாளருமாவார் . இவர் ஆக்கவியல் கோட்பாடு , மரபுசார் அறிவாய்வியல் , அறிதிறன் வளர்ச்சிக் கோட்பாடுகளின் நிலைப்புத்தன்மை , தன்மையச்சிந்தனை போன்ற பல கோட்பாடுகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது . மேலும் இவர் குழந்தைகளின் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கினார் . சர்வதேச கல்விச்செ...