Posts

Showing posts with the label கல்வியும் தனியாள் விருத்தியும்

கல்வியும் தனியாள் விருத்தியும்

Image
கல்வி என்பதற்கு வரைவிலக்கணம் கொடுப்பது மிகவும் சிக்கலான விடயமாகும். எனினும் அறிவைக் கொடுத்தல், தனியாள் விருத்தி, ஆளுமை வளர்ச்சி, அனுபவங்களை பெற்றுக்கொடுத்தல், ஒழுக்கம் போன்றவற்றை ஏற்படுத்துவது கல்வியின் சிறப்பு அம்சங்களாக உள்ளது. இதில் தனியார் விருத்தி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். கல்விக்கு வரைவிலக்கணம் தந்த ஜோன் டூயி கல்வியின் தத்துவத்தை நான்கு தலைப்பின்கீழ் கல்வி என்பது வாழ்க்கையை நடத்துவதாகும் அடக்கலாம் என்கிறார். அந்த வகையில், கல்வி என்பது அனுபவத்தை புதுப்பிப்பதாகும் கல்வி என்பது விருத்தி அடைதல் ஆகும் கல்வி என்பது சமூக நடவடிக்கையாகும் இதன் மூலம் கல்வியானது, தனியாளின் வாழ்க்கையோடு இணைந்ததாக உள்ளது. கல்வியினால் ஏற்படும் தனியாள் விருத்தியினால் சமூகத்திற்கும் சமூக விருத்தி யினால் தனியாளிற்கும் நன்மை ஏற்படுகிறது. தனியாள் சமூகத்திலிருந்துபிரிந்து வாழ முடியாது ஏனெனில் மனிதன் சமூகப் பிராணி ஆவான். சமூகத்திற்கு ஏற்ற முறையில் தனியாள் விருத்தி எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக பாடசாலை செல்வதற்கு முன் மொழியை சமூகத்திலிருந்து கற்றுக்கொள்ளும் பிள்ளை பாடசாலை சென்றதும் தனது மொழி அறிவை விர...