“உளப்பயிற்சிக் கொள்கையும், ஒத்த மூலக்கொள்கையும் கற்றலிலுள்ள இடமாற்றம் முழுவதையும் விளக்கவில்லை”. என்பது தொடர்பான கெஸ்டால்ட் பொதுமைக் கொள்கையின் விமர்சனம்
உளப்பயிற்சிக் கொள்கையும் , ஒத்த மூலக்கொள்கையும் கற்றலிலுள்ள இடமாற்றம் முழுவதையும் விளக்கவில்லை . என்பதை கெஸ்ரால்டின் பொதுமைக் கொள்கை எடுத்துரைக்கிறது . இது தொடர்பான கருத்துக்களை முன்வைத்து ஆராய்க . “ ஒருவர் யாதேனும் சந்தர்ப்பத்தில் பெற்ற கற்றலை பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் பிரயோகித்தலே கற்றல் இடமாற்றமாகும் ”. “ முன்னைய கற்றல் அனுபவங்களை பின்னைய சந்தர்ப்பம் ஒன்றில் பொருத்தமானவாறு பயன்படுத்தலே கற்றல் இடமாற்றம் ஆகும் ”. “ யாதேனும் செயல் தொடர்பான கற்றலை அல்லது அனுபவங்களை அதன் பின்னர் எதிர்கொள்ளும் செயலொன்றின் போது செல்வாக்கு செலுத்துவதே கற்றல் இடமாற்றமாகும் .” என எச் . சி எலிஸ் விவரித்துள்ளார் . மேற்கூறியவாறு பல வரைவிலக்கணங்கள் கற்றல் இடமாற்றத்திற்கு வழங்கப்படுகிறது . பொதுவாக “ ஒரு சூழலில் கற்கும் திறன் , அறிவு , பழக்கவழக்கங்கள் ஆகியன இன்னொரு சூழலில் பிரயோகிக்கப்படுதலே கற்றலில் இடமாற்றம் ( Transfer of Learning ) எனப்படும் . தொடர்ந்து நிகழும் கற்றல் அல்லது செயற்பாட்டின் மீது முதலில் கற...