Gestalt theory
கெஸ்டால்ட் அறிவுசார் கற்றல் கொள்கை ஒரு வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆசிரியர் எவ்வளவு தூரம் பிரச்சினைகளை கொடுக்கின்றாறோ அவ்வளவுக்கு மாணவர்கள் தங்களது பாடத்தில் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சினைகளை தீர்க்க கற்றுக் கொள்வர். இக்கருத்தினை கெஸ்டால்டின் அகக் காட்சி முறையில் கற்றலினை அடிப்படையாக வைத்து விளக்குதல். தூண்டி - துலங்கள் கொள்கையானது கற்றல் என்பதை தூண்டிக்கும் துலங்களுக்கும் ஏற்படுகின்ற ஓர் எளிய தொழிற்பாடாக கருதி மனிதனை கீழின விலங்காக கருதுகிறது, என்ற கண்டனத்தை வெளியிட்ட உளவியலாளர்கள் மனிதனை மேம்படுத்தி, அவன் தூண்டி காணப்பட்டாலும் அதற்கு எதிராக சிந்திக்கும் ஆற்றலுடையவன் என்ற வகையில் மண்டல அறிவுக்கொள்கையை வெளியிட்டனர் . இதில் கெஸ்ட்லாட்டின் அறிவுசார் கற்றல் கொள்கை மிக முக்கியமானது. இன்று உலகில் உள்ள அனைத்து விடயங்களிலும் கெஸ்டால்ட் கொள்கை பிரயோகிக்கப்பட்டுள்ளது . அதாவது இருக்கின்ற விடயங்களை அவ்வாறே பயன்படுத்தாமல் வேறுமாதிரியாக பயன்படுத்துவதன் ஊடாக நிறைவான வி ளைவுகளை பெற முடிகிறது ...