Gestalt theory
கெஸ்டால்ட் அறிவுசார் கற்றல் கொள்கை
ஒரு வகுப்பறையில் மாணவர்களுக்கு
ஆசிரியர்
எவ்வளவு
தூரம்
பிரச்சினைகளை
கொடுக்கின்றாறோ
அவ்வளவுக்கு
மாணவர்கள்
தங்களது
பாடத்தில்
ஏற்படும்
பல்வேறு
வகையான
பிரச்சினைகளை
தீர்க்க
கற்றுக்
கொள்வர். இக்கருத்தினை கெஸ்டால்டின்
அகக்
காட்சி
முறையில்
கற்றலினை
அடிப்படையாக
வைத்து
விளக்குதல்.
இன்று
உலகில் உள்ள அனைத்து விடயங்களிலும்
கெஸ்டால்ட் கொள்கை பிரயோகிக்கப்பட்டுள்ளது. அதாவது இருக்கின்ற விடயங்களை அவ்வாறே பயன்படுத்தாமல் வேறுமாதிரியாக பயன்படுத்துவதன் ஊடாக நிறைவான விளைவுகளை பெற முடிகிறது. உதாரணமாக
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இயந்திரங்களின் பகுதிகளை தனித்தனி பகுதிகளாக வைத்து நோக்கியிருந்தால் இத்தகைய இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்க முடியாது. இவ்வாறு தனித்தனி பகுதிகளாக அன்றி முழுமையாக நோக்கும் போது பிரச்சினையை தீர்க்கலாம்.
என்பதே கெஸ்டால்ட் கொள்கையாகும்.
கற்றலில்
இவர்கள் S - R தொடர்பையும் முயன்று தவறிக்கற்றல் கோட்பாட்டையும் புறகக்ணிக்கின்றனர். கூறுகளின் மொத்த தொகையை விட மேன்மையானது தான்
முழுமை. முழுமையில் தான் சரியான அறிவு
உருவாகிறது. இது புலக்காட்சியை (Perception) அடிப்படையாக
கொண்ட ஒரு உளவியல் பிரிவாகும்.
ஒரு நிகழ்வின் முழுமையான அனுபவம் தான் புலன் உணர்வின்
அடிப்படை என இவர்கள் வாதிடுகிறார்கள். ஒவ்வொரு காட்சி உலகம் வேறுபட்டதாக இருக்கும் தனிநபர் அனுபவங்கள்(Individual
experience) தான் கற்றலின் அடிப்படையை
நிர்ணயிக்கின்றது.
ஒரு பொருளை அல்லது படத்தை அதன் பின்னணியத்தில் இருந்து பிரித்து அறிதல் அத்துடன் பின்னணிச் சூழலுக்கு ஏற்ப வேறுபட்ட காட்சிகளை காணவும் செய்தல் உரு பின்னணி தொடர்பாகும்.
கெஸ்டாட்
உளவியல் வாதிகள் மனிதனின் கற்றலை புலக்காட்சி அமைப்பு, அகக்காட்சி என்பவற்றைக் கொண்டு விளக்கமுற்பட்டனர். இவர்கள் புலக்காட்சி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு கற்றல் பற்றிய அகக்காட்சி கொள்கையை வெளியிட்டனர்.
கோலர், சுல்தான் எனும் மனிதக்குரங்கில் செய்த ஆய்வின் இறுதியில் குரங்கு தன்னை அடுத்துள்ள சூழலின் புலக்காட்சிக் கவனத்தை
சீர்தூக்கியது. இக்கற்றல் நிலைமையில் தனிப்பட்ட தூண்டிகளுக்கு துலங்காத குரங்கானது நிலைமையை முழுமையாக பார்த்து கருத்துள்ள முறையில் ஒழுங்குபடுத்தியது. இவ்வகையான ஒழுங்குகளைகக் காணும் போது கற்போன் அகக்காட்சியைப்
பெறுகின்றான். ஒரு பிரச்சினைக்குத் தீர்வு
காண்பதற்கு விளக்கம் பெறுவதையே அகக் காட்சி என
வரைவிலக்கணப்படுத்தலாம்.
இவ்விதம் சடுதியாக பிரச்சினைகளைத் தீர்க்கும் முறையே அகக்காட்சி முறைக்கற்றல் [LEARNING BY INSIGHT] எனப்படுகிறது. இக்கற்றல் முறையில் மிருகம் பிரச்சினைக்கு வெளியில் நின்று அதனை நோக்குகின்றது. பிரச்சினையின் பல்வகைத் தன்மைகளுக்குமிடையே காணப்படும் தொடர்புகளை அறிந்து ஓர் ஒழுங்கான அமைப்பை பெறுகின்றது. பின்பு, மேலும் நல்ல அமைப்பு கிடைக்கும் வரை தான் முன்பு பெற்ற அமைப்பைத் திருத்தி மீள அமைப்பாக்குகிறது. இறுதியில் திடீரென அகக்காட்சி பெற்று பிரச்சினையை தீர்கக்கின்றது. சில உளவியலாளர்கள் இதனை “ஆஹா” அனுபவம் என அழைப்பர்.
அகக்காட்சி
முறைக்கற்றலின் சில பண்புகள் பின்வருமாறு,
1.இதற்கு நுண்மதி தேவை. இது முயன்று தவறுதல்
முறையிலோ, நிபந்தனைப்பாட்டு முறையிலோ நிகழ்வதில்லை. உயர்ந்த நுண்மதி உடையோர் பிரச்சினை பற்றி இலகுவில் அகக் காட்சி பெற்றுவிடுகின்றனர்.
2.அகக்காட்சி முறைக்கற்றலில் உள்ள இன்னோர் பண்பு
மீள்பிரயோகமாகும். அதாவது ஒருவர் 2வது தடவை அதே
வகை பிரச்சினையை எதிர்நோக்கும் போது முதலில் பயன்படுத்திய
முறையையே மீண்டும் பிரயோகிப்பர்.
3.அகக்காட்சிமுறை இடமாற்றம் பெறவல்லது. அதாவது. ஒருவர் ஒத்த வகை பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது ஒரே வகையான தீர்வு முறையையே பயன்படுத்துவர். பிரச்சினையை விடுவிப்பதற்கு ஒருவர் தானே முயற்சி எடுக்க வேண்டும்.
மேற்கூறியவாறு
அகக்காட்சி தொடர்பாக விரிவாக விளங்கலாம். அவ்வாறே ஒரு வகுப்பறையில் மாணவர்களுக்கு
ஆசிரியர் எவ்வளவு தூரம் பிரச்சினைகளை கொடுக்கின்றாறோ அவ்வளவுக்கு மாணவர்கள் தங்களது பாடத்தில் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சினைகளை தீர்கக் கற்றுக் கொள்வர். இதனை மேற்கூறிய
அகக் காட்சியின் ஊடாக விரிவாக நோக்கலாம்.
ஒரு பிரச்சினைக்கு திடீரென தீர்வுகாண்பதற்கு விளக்கம் பெறுவதையே அகக்காட்சி என்கின்றோம். இந்தவகையில் ஆசிரியர்கள் அதிகளவான பிரச்சினைகளை மாணவர்களுக்கு வழங்கி அதனை அவர்கள் தீர்வு காணச்செய்தல் வேண்டும். இந் நடவடிக்கையானது அம் மாணவர்களுக்கு தங்களது பாடத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்கக் வழிவகுக்கின்றது.
1, 2, 3, 4, . . . . . . . 49, 50,
100, 99, 98, 97 . . . . . . . ..
52, 51
101,101, 101, 101,
…………….. 101, 101
மேலும் கீழும் வரும் எண்களை கூட்டும் போது எல்லாம் 101 மொத்தம் ஐம்பது 101 அதாவது 50 * 101 = 5050
இங்கு
எண்களை ஒன்றாக கணக்கிட்ட போது உருவான ஒரு
உட்காட்சி தான் பிரச்சினை தீர்வுக்கு
உதவியது. இவ்வாறு பல வகையான பிரச்சினைகளை
மாணவர்கள் தொடர்ந்து செய்யும் போது பிரச்சினைகளை தீர்க்க
கற்றுக் கொளவர்.
நுண்ணறிவு, கணிதம் போன்றவற்றில் கணக்கு ஒன்று ஒரு வகையில் வழங்கப்படும்
போது மாணவன் அதனைத் தீர்க்கும் முறையை கண்டு கொண்டான் எனின் மீண்டும்
அதே வகையில் கணக்குகள் வழங்கப்படும் போது தான் முன்னர்
பெற்ற அனுபவத்தின் ஊடாக பெற்றுக் கொள்கின்றான்
எனலாம்.
மாணவர்களின்
திறமைக்கேற்ற வகையில் ஆசிரியர் பிரச்சினைகளை வழங்க வேண்டும். பிரச்சினை அவர்களின் திறமைக்கு அப்பாற்பட்டதாக இருக்குமாயின் அவர்கள் முயன்று தவறல் முறையைக் கையாள்வர். நுண்மதி குறைந்த பிள்ளைகளுக்கு பிரச்சினையின் பல்வேறு தன்மைகளுக்கு இடையிலுளள் தொடர்புகள், முழு அமைப்பு என்பன
பற்றி எடுத்துக் காட்டுதல் வேண்டும். உதாரணமாக கணிதத்திலும் விஞ்ஞானத்திலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு
காண்பதற்கு குறியீடுகளையும் சூத்திரங்களையும் கூறினால் போதாது அவற்றக்கு இடையிலுள்ள தொடர்புகளை அறிந்து தகுந்த இடங்களில் பிரயோகிப்பதற்கு பிள்ளைகள் அறிந்திருத்தல் வேண்டும். கேத்திர கணிதத்தில் பிள்ளைகள் பல பயிற்சிகளை செய்ய
வேண்டியிருப்பதனால் தேற்றங்கள் மாத்திரம் அறிந்திருத்தல் போதாது. அவற்றை பிரயோகிக்கவும் அறிந்திருத்தல் வேண்டும். இவ்வாறே மொழியில் உள்ள இலக்கணத்தையும் சொற்றொடர்களையும்
அறிந்திருத்தல் போதாது. மாணவர் இவற்றைப் பயன்படுத்தி கட்டுரை எழுத பழகியிருத்தல் வேண்டு
பொருத்தமான
முன் அனுபவம் அகக் காட்சி ஏற்படுவதற்கு
மிக அவசியம். ஆனால் முன் அனுபத்தினால் மட்டும்
பிரச்சினைகளை தீர்கக் முடியாது. பிரச்சினை நிலைமையின் முக்கிய அம்சங்களுக்கு இடையேயுள்ள தொடர்புகளின் காட்சியைக் காணக்கூடிய வகையில் அவை ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தால்
அகக்காட்சி இலகுவில் தோன்றலாம்.
வகுப்பில்
ஆசிரியர் பிரச்சினையை கொடுத்து விட்டு அதற்கான விடையை உடனடியாக எதிர்பார்க்கக் கூடாது. ஏனெனில் ஒருவனுக்கு எப்போது அகக்காட்சி தோன்றும் என்று கூற முடியாததால் அவர்
பொறுமையாக இருக்க வேண்டும். மேலும் ஊக்கம் அகக் காட்சியை வளரப்பதில்
பங்குவகுக்கின்றது.
எனவே
மேற்கூறியவாறு ஆசிரியர் எந்தளவு பிரச்சினைகளை மாணவர்களுக்கு வழங்குகிறாறோ அந்தளவுக்கு மாணவர்கள் பிரச்சினைகளை தீர்கக் கற்றுக் கொள்வர் எனலாம். இந்த வகையில் ஆசிரியர்கள்
இதனை விளங்கி வகுப்பறைகளில் செயற்படுத்துவதன் மூலம் கற்றல் கற்பித்தல் செயற்பாடு வினைத்திறனாக அமையும் எனலாம்.
உசாத்துனைகள்
1.கலாநிதி அருள்n;மாழி.செ, (2017), “கற்பித்தலுக்கான உளவியல்”, துரக்கா பிரின்டரஸ்;, கொக்குவில்.
2. முத்துலிங்கம்.ச,(2010), “கல்வியும் உளவியலும்”, சேமமடு பதிப்பகம்.
3.கல்வி உளவியல் தொகுதி II “கொள்கைகளும், பிரயோகமும் ஆசிரியரும்”, கல்வி பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.
-Rasima,BF (BA -R)
Eastern University
Sri Lanka.
Useful information
ReplyDeleteUseful information
ReplyDelete