பாடசாலையில் அபிவிருத்தி செய்யப்படவேண்டிய விடயங்கள்
ஆளனி வளம் எனும்போது போதும் மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் போன்றோர் இத்தகைய ஆளணி வளத்துக்குள் இடம்பெறுவர். இவ்வகையில் இதில் இடம்பெறும் சகல பிரிவினரும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அந்த வகையில் எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்பதை கீழே விரிவாக நோக்கலாம்.
ஆசிரியர்கள் மிகவும் முக்கியமானவர்கள் ஆவர். இவர்களது சகல விடயங்களும் வருடத்திற்கு வருடம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதன்போதே மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கல்வியினை வழங்கி பாடசாலையின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கச் செய்யலாம் பின்வரும் வகையில் ஆசிரியர்களை அபிவிருத்தி செய்யலாம்.
- குறைந்த லீவு பெரும் ஆசிரியர்களை கௌரவித்தல்
- ஆசிரியர் அபிவிருத்தி, ஆசிரியர் கல்வி மற்றும் ஆசிரியர் முகாமைத்துவம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
- பல் தரபட்ட, பல்மட்ட கற்பித்தல் கருத்தரங்குகளை நடாத்துதல், பிரதிபலிப்பு கையேடு எழுதுதல் தொடர்பான கருத்தரங்குகளை நடாத்துதல்
- ஆசிரியர்களுக்கு அடிப்படை கணனி பயிற்சி வழங்குதல்
- பண்புத்தர விடயங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு அறிவு ஊட்டுதல்
- பதவி உயர்வுக்கு சிபாரிசு செய்தல்
- சுதந்திரமாக கடமையாற்ற சந்தர்ப்பம் வழங்குதல்
- நெகிழ்ச்சியான நிர்வாக முறையை பின்பற்றுதல்
- புலமைப்பரிசில்கள் கிடைக்க ஏற்பாடு செய்தல்
மாணவர்கள்தான் நாளைய சிறந்த தலைவர்கள் ஆவர். இவர்கள் முறையான வகையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் பின்வரும் வழிகளில் அவர்களை அபிவிருத்தி செய்யலாம்.
- தொடர்ச்சியாக பாடசாலைக்கு வருமாறு மாணவர்களை ஊக்கப்படுத்துதல்
- சுரக்ஷா மாணவர் காப்புறுதி நலன்களை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுத்தல்
- சகல மாணவர்களுக்கும் இலவச பாடநூல் இலவச சீருடை இலவச பாதணி போன்றவற்றை பெற்றுக்கொடுத்தல்
- மாணவர்களின் சுகாதாரம் மற்றும் போசாக்கு மட்டத்தினை மேம்படுத்தல்
- சகல மாணவர்களுக்கும் இலவச சத்துணவு கிடைப்பதை உறுதி செய்தல்
- இலைக்கஞ்சி வழங்குதல்
- மாணவர்களுக்கு சுகாதார பயிற்சி வழங்குதல்
- சுகாதார குழுவிற்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொடுத்தல்
- பெற்றோருக்கு சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வுகளை வழங்குதல்
- கணிப்பீடு மற்றும் மதிப்பீட்டு திட்டங்களை மேம்படுத்தல்
- மாணவர் கணிப்பீட்டு செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளல்
- உள்ளக மதிப்பீட்டு செயற்பாடுகளை செய்தல்
- தவணை பரீட்சை நடாத்துதல்
- டிஜிட்டல் மூலமான கற்றல் கற்பித்தல் இணை ஊக்குவித்தல்
- கணனிகளை பெற்றுக்கொள்ளல்
- ஸ்மார்ட் டிவி பெற்றுக்கொள்ளல்
- மல்டிமீடியா வசதிகளை ஏற்படுத்தல
- பெற்றோரின் அறிவையும் திறனையும் பாடசாலை பயன்படுத்திக் கொள்ளல்
- பாடசாலை அபிவிருத்திக் குழுவிற்கு பெற்றோர் சார்பாக பிரதிநிதிகளை பங்கு பெறச் செய்தல்
- பெற்றோர் விழிப்புணர்வு கூட்டங்களை நடாத்துதல்
- கட்டாயக்கல்வி கூட்டங்களை நடாத்துதல்
- பாடசாலைக்கு பெற்றோர்கள் வரும்போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர் அவர்களுடன் சிறந்த முறையில் நடந்து கொள்ளல்
- பிள்ளைகளது கற்றலுக்கு பெற்றோர்கள் எவ்வாறு உதவி செய்யலாம் என்பதை பாடசாலை தொடர்ந்து அறிவுறுத்தல்
பாடசாலை முகாமைத்துவ குழு மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழு என்பனவும் பாடசாலையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியவையாகும். இக்குழுக்கள் சிறப்பாக இயங்கும்போது பாடசாலை சிறந்த பாடசாலையாக திகழ முடியும். இந்த வகையில் பாடசாலை அபிவிருத்திக் குழுவில் அதிபர், உப அதிபர், பெற்றோர்களின் பிரதிநிதிகள், பழைய மாணவர்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் அலுவலக பிரதிநிதியும் காணப்படுவர். இக்குழுவின் ஊடாக பாடசாலை தொடர்பான ஐந்தாண்டு திட்டம் போன்ற நீண்ட கால திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படும். பாடசாலை முகாமைத்துவ குழுவில் அதிபர், பிரதி அதிபர்களில் ஒருவர், அபிவிருத்திக் குழுவின் ஆசிரியர் பிரதிநிதிகள், பெரிய பிரிவுபொறுப்பாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளடங்குவர். இக்குழுக்கள் இரண்டிலும் உள்ள அங்கத்தவர்கள் பொறுப்புணர்வுடன் கூடியவர்களாக திகழ வேண்டும். தங்களுக்குரிய கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் இக்குழு உறுப்பினர்கள் பெயரளவில் மாத்திரம் இருக்காது பாடசாலை முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களாக காணப்படவேண்டும்.
பாடசாலையின் முன்னேற்றத்தில் பெரிதும் பங்காற்றுபவர்கள் பெற்றோர்களை அடுத்து பழைய மாணவர்கள் ஆவர். இவர்கள் தங்களது பாடசாலைக்கு உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உதவிகளை புரிபவர்கள் இவர்களுக்குரிய வசதிகளையும், இவர்கள் பாடசாலைக்கு உதவக்கூடிய வழிமுறைகளையும் பாடசாலை நிர்வாகம் சிறப்பாக ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். உதாரணமாக பாடசாலை அபிவிருத்திக் குழுவில் பழைய மாணவர்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ளல், அவர்களது ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ளல் என்பவற்றை மேற்கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட ஆளனி வளத்துக்குள் கல்விசாரா ஊழியர்களும் உள்ளடங்குவர். அவர்களுக்குரிய சகல வசதிகளையும் பாடசாலையானது ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். இவர்கள் பாடசாலையில் உள்ள பௌதீக வளங்களை முறையாக பராமரிப்பதன் ஊடாக பாடசாலையின் பௌதீக வள அபிவிருத்தியானது சிறப்பாக இடம்பெறும் எனலாம்.
பாடசாலையில் உள்ள பௌதீக வளங்கள் எனும்போது கட்டிடங்கள், தளபாடங்கள், நீர், மின்சாரம், வகுப்பறைகள், ஆய்வுகூடம், நூலக வசதிகள், தொழில்நுட்ப பாடங்களுக்கு உரிய வசதிகள், அலுவலக பொருட்கள், இலவச பாடநூல் மற்றும் இலவச சீருடைகள் போன்றவற்றை உதாரணங்களாக குறிப்பிடலாம். இவை முறையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் இதற்காக பௌதீக வள அபிவிருத்தி சார்ந்த பல விடயங்களை வருடாந்த அமுலாக்கல் திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். பின்வரும் வகையில் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்யலாம்
- பாடசாலையின் பாதுகாப்பானதாகவும் கவர்ச்சியான தாகவும் மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
- பாடசாலை சுற்றி வேலி அமைத்தல்
- சிரமதானம் மேற்கொள்ளல
- மாதிரி வகுப்பறை உருவாக்கம்
- தர உள்ளீட்டு பொருட்களை கொள்வனவு செய்தல்
- உடைந்த கதிரை மேசை கலை திருத்தம் செய்தல் பற்றாக்குறையான தளபாடங்களை பெற்றுக்கொள்ளல்
- நீர் வசதிகளை ஏற்படுத்தல்
- மின்சார வசதிகளை பெற்றுக்கொடுத்து அதற்குரிய கட்டணங்களை முறையாக செலுத்துதல்
மென்திறன்கள், விழுமியக் கல்வி மற்றும் ஒழுக்கம் என்பவற்றை மையமாகக் கொண்ட விரிவான கல்வி அணுகு முறைகள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை பாடசாலையில் வருடா வருடம் நடாத்துதல் வேண்டும். இதன்போது விளையாட்டுக்களில்,திறமை கொண்ட மாணவர்களை இனங்காணலாம் இதனால் அத்தகைய மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த வீர வீராங்கனைகளாக திகழ்வார்கள். இதற்காக கீழ்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
- வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளை நடாத்துதல்
- வலயமட்ட விளையாட்டுப் போட்டிகளில் பாடசாலை சார்பாக மாணவர்களை கலந்து கொள்ளச் செய்தல்
- விளையாட்டு மைதானத்தை முறையாக ஒழுங்குபடுத்திக் கொடுத்தல்
- கல்வி சுற்றுலாக்களை மேற்கொள்ளல்
- மாதம் ஒருமுறை மாணவர் மன்றம் நடாத்துதல்
- பாடசாலை மட்ட தமிழ் மொழி தினம், ஆங்கில மொழி தினம், வாசிப்பு வாரம், நூலக வாரம் என்பவற்றை ஏற்பாடு செய்தல்
- விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்து கொடுத்தல்
எனவே மேற்குறிப்பிட்டவாறு பல்வேறு விடயங்களையும் பாடசாலையானது அபிவிருத்தி செய்யும் வகையில் வருடாந்த அமுலாக்கல் திட்டத்தினை உருவாக்க வேண்டும். இதன்போதே பாடசாலையானது உயர்ந்த அடைவு மட்டத்தை பெற்று விளைதிறன் மிக்க பாடசாலையாக மாற்றமடையும். இத்தகைய பாடசாலை ஒரு சமூக நிறுவனமாக காணப்படுவதனால் சமூகத்தில் உள்ள அனைவரும் பாடசாலை அபிவிருத்தி அடைவதற்குரிய வசதிகளையும் உதவிகளையும் தங்களால் இயன்ற அளவு பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு ஒரு பாடசாலை சிறந்து விளங்கும் போது அப்பிரதேசம் அபிவிருத்தியடைந்த பிரதேசமாக மாறும் எனலாம்.
Comments
Post a Comment