மாணவர்களின் ஞாபகத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு ஆசிரியர் மேற்கொள்ளும் நடைமுறைகள்
மாணவர்களின் ஞாபகத்திறனை வளர்த்துக் கொள்வதற்கும் கற்றுக் கொண்டவற்றை நினைவில் நிலைநிறுத்திக் கொள்வதற்கும் ஆசிரியர் என்ற ரீதியில் நீர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை விளக்குக . நம் மூளையில் தேக்கிவைக்கின்ற விடயங்களைத் தேவைப்படும் போது வெளியே எடுத்து தகுந்த நேரத்தில் அதை உபயோகப்படுத்துவது “ ஞாபகம் ” ஆகும் . உள்வாங்கப்பட்ட தகவல்களை களஞ்சியப்படுத்தி சேமித்து அவற்றைத் தேவையான போது மீட்டி எடுத்துக் கொள்ளும் திறன் ஞாபகம் அல்லது நினைவு என வரைவிலக்கணப்படுத்தலாம் . யாதேனும் தூண்டலின்பால் கவனம் செலுத்தும் போது ஒருவரின் புலனங்கங்கள் மூலம் தகவல்கள் பிரவகிக்கும் . இத்தகவல்களை உளரீதியில் இனங்காணலின் அல்லது புலக்காட்சி பெறலின் விளைவாக உள்ளத்தில் உருவாகும் மனப்பாடங்களை பிற்காலத்தில் எமக்குத் தேவையான போது நினைவுபடுத்தலாம் . எனவே ஞாபகம் என்பது “ தகவல்களை களஞ்சியப்படுத்தும் திறனும் அவற்றை மீண்டும் நினைவு கூறும் திறனுமாகும் ”. ஞாபகம் தொடர்பாக பல்வேறு அறிஞர்களும் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர் . அந்தவகையில் , Ø ...