இன்று தொழில்சார் ஆலோசனை என்ற எண்ணக்கரு ஏன் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை தெளிவுபடுத்துக.
உணவு, உடை, உறையுள் என அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மனிதனுக்கு அவசியமான விடயங்களில் தொழில் மிக முக்கியமானதாகும். இத்தகைய தொழில், குறித்த நபர் ஒருவருக்கு தொழில்களில் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் அதற்கு ஆயத்தம் செய்யவும் அத்தொழில் சேர்வதற்கும் அதில் முன்னேற்றம் அடைவதற்கு உதவும் ஒன்றே தொழில்சார் ஆலோசனையாகும். இத்தகைய தொழில் சார் ஆலோசனை என்ற எண்ணக்கரு ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதை கீழே விரிவாக நோக்குவோம். இருபதாம் நூற்றாண்டின் முதல் அறை பகுதியில் அமெரிக்க சமூகத்தில் விரைவான பொருளாதார மாற்றங்கள் பல நிகழ்ந்தன. நகரங்கள் உருவாகின, நாடு தொழில் மயமாகின. இளைஞர்கள் மட்டுமிின்றி பிள்ளைகளும் தொழில்களில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டினர். எனினும் இவர்கள் போதிய அனுபவம் பெற்றிராதுடன் தொழிலை தேர்ந்தெடுப்பதிலும் அவற்றில் நிலைநிறுத்துவதிலும் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இவர்களுக்கு உதவி வழங்குவதற்காக பிரான்க் பாஸன் என்பவர் 1908ல் பொஸ்டன் நகரத்தில் தொழில் நிலையமொன்றை திறந்தார் இந்நிலையம் நேர்காணல், சோதனைகள் போன்றவற்றை நடத்தியதுடன் தகவல்களையும் வழங்கியது. அதுவே வழிகா...