இன்று தொழில்சார் ஆலோசனை என்ற எண்ணக்கரு ஏன் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை தெளிவுபடுத்துக.

உணவு, உடை, உறையுள் என அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மனிதனுக்கு அவசியமான விடயங்களில் தொழில் மிக முக்கியமானதாகும். இத்தகைய தொழில், குறித்த நபர் ஒருவருக்கு தொழில்களில் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் அதற்கு ஆயத்தம் செய்யவும் அத்தொழில் சேர்வதற்கும் அதில் முன்னேற்றம் அடைவதற்கு உதவும் ஒன்றே தொழில்சார் ஆலோசனையாகும். இத்தகைய தொழில் சார் ஆலோசனை என்ற எண்ணக்கரு ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதை கீழே விரிவாக நோக்குவோம்.


இருபதாம் நூற்றாண்டின் முதல் அறை பகுதியில் அமெரிக்க சமூகத்தில் விரைவான பொருளாதார மாற்றங்கள் பல நிகழ்ந்தன. நகரங்கள் உருவாகின, நாடு தொழில் மயமாகின. இளைஞர்கள் மட்டுமிின்றி பிள்ளைகளும் தொழில்களில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டினர். எனினும் இவர்கள் போதிய அனுபவம் பெற்றிராதுடன் தொழிலை தேர்ந்தெடுப்பதிலும் அவற்றில் நிலைநிறுத்துவதிலும் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இவர்களுக்கு உதவி வழங்குவதற்காக பிரான்க் பாஸன் என்பவர் 1908ல் பொஸ்டன் நகரத்தில் தொழில் நிலையமொன்றை திறந்தார் இந்நிலையம் நேர்காணல், சோதனைகள் போன்றவற்றை நடத்தியதுடன் தகவல்களையும் வழங்கியது. அதுவே வழிகாட்டல் சேவையின் ஆரம்பம் என கருதப்படுகின்றது.


ஒருவரது குணாதிசயங்களுக்கு பொருத்தமான தொழிலில் ஈடுபட செய்வதன் மூலமே அவர் தன்னையும் சமூகத்தையும் விருத்தி செய்ய முடியும் என நம்பினார். அதற்கு உதவி செய்வதற்காக அவர் தயாரித்த முறைமை பார்சோனியன் மாதிரி எனப்பட்டது. இந்த மாதிரியின்படி தொழிலை தெரிவு செய்வதற்கு ஒருவருக்கு உதவி வழங்கும் போது அவர் மூன்று பிரதான கட்டங்களை கடந்து செல்ல வேண்டும்.


  • ஆளுமை பகுப்பாய்வு  வழிகாட்டல் அதிகாரி ஆலோசனை நாடியின் குணாதிசயங்களை பகுப்பாய்வு செய்தல்
  •  தொழில் பகுப்பாய்வு ஆலோசனை நாடி தான் விரும்பும் பல்வேறுபட்ட தொழில் துறைகள் தொடர்பாக நிலவும் வாய்ப்புக்களையும் அவற்றின் தன்மைகளையும் ஆராய்தல்
  •  ஆளுமை பகுப்பாய்வும் தொழில் பகுப்பாய்வையும் ஒப்பிடுதல் 


கிரைட்ஸ் ( 1969) என்பவர் தொழில்சார் வழிகாட்டல் என்பது ஒருவருக்கு தொழிலை தெரிவு செய்து கொள்ளவும் அத்தொழிலில் தன்னை தயார்படுத்திக் கொள்ளவும் அத்தொழிலில் பிரவேசிப்பதற்கும் அதில் முன்னேற்றம் காண்பதற்கும் உதவி ஒத்தாசை பெறவும் உதவும் செயல்முறையாகும் என்கிறார்.


தொழில் வழிகாட்டல் ஆலோசனை வழங்கல் என்பது தற்காலத்தில் பல்வேறு காரணங்களினால் ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது அந்த வகையில், இதனை முக்கியமாக்கிய காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.


  •  குறிப்பிட்ட சில தொழில்கள் சார்பாக பாதகமான மனப்பாங்கை மாணவர்கள் பெற்றிருத்தல் 

  • தொழில் தெரிவில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும்படி நெருக்குதலுக்கு உட்படுத்துதல் 

  • சனத்தொகைப் பெருக்கம் நகர்ப்புற இடப்பெயர்வு காலாவதியாகும் அறிவுத் திறன் ஆகியவற்றால் தொழில் வாய்ப்புக்கள் குறைந்து வருகின்றமை 

  • கைத்தொழில் மயமாக்கம் தொழில்நுட்ப விருத்தி ஆகியவற்றால் தொழில்துறை பன்மடங்கு விரிவடைந்துள்ளது. அவற்றில் தொழில் ஒன்றைப் பெறுவதற்கு இது அவசியமாகின்றது. 


தொழில் வழிகாட்டல் ஆலோசனை வழங்களின் பிரதான நோக்கங்களாக  கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

  • தொழில் தொடர்பான தகவல்களை பகுப்பாய்வு செய்வதை விளங்கிக் கொள்ளல்

  •  தொழில் தொடர்பாக விவேக பூர்வமாக தேர்வு செய்வதில் குறித்த நபர் கொண்டுள்ள ஆற்றல்கள், திறன்கள், உளச்சார்புகள், விருப்பு வெறுப்புகள் போன்றவை பற்றிய தகவல்களைப் பெறுதல்

  •  சேவை பெறுபவரின்  தேர்வுக்கு உள்ளாகும் தொழில்காண் தன்மை பொருப்புக்கள் தொடர்பான பணிக்கொடைகள் பற்றி அறிந்து கொள்ளல்

  •  சேவை பெறுபவர் தன்னை பற்றிய சுய ஆய்வில் பொருத்தமான வகையில் ஈடுபடுவதற்கும் தன்னை பற்றி சரியான விதத்தில் புரிந்து கொள்ளவும் உதவுதல்

  •  வேலை தொடர்பில் பல்வேறு ஆற்றல்களை இனங்கண்டு கொள்ளவும் பாடநெறிகள், செயலமர்வுகள் போன்றவற்றில் பங்கு கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் 

  • தொழில்சார் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், தகைமைகள், பயிற்சிகள் பற்றி அறிதல்

 மேற்குறிப்பிட்ட நோக்கங்களும் தொழில் ஆலோசனை என்ற  எண்ணக்கருவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளன 


வாழ்க்கையின் நடுப்பகுதியில் தொழிலை மாற்றல் ,உடல் அல்லது உளரீதியான பாதிப்பினால் அடிப்படை தொழிலுக்கு பங்கம் ஏற்படும் போதும் தொழிற் பொருத்தப்பாடு அடைதல், ஓய்வு பெறும் போது அதற்கேற்ற பொருத்தப்பாடு அடைதல் போன்ற சந்தர்ப்பங்களிலும் தொழில் ஆலோசகர் தேவையான உதவியை வழங்குவார். தொழில்சார் ஆலோசனையானது ஒருவர் தனக்கு திருப்தி தருகின்ற தொழிலுக்கான வழிகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடத்தைகளையும் ஒருவர் அடையாளம் காண்பதற்கு உதவுகின்றது. இந்த செயற்பாடுகள் குறிப்பிட்டளவு கல்விசார் ஆலோசகரது பணியை ஒத்ததாக அமைகின்றது ஆலோசனை நாடி தான் எதிர்பார்க்கும் தொழில்சார் இலக்குகளை எய்துவதற்காக தனது திறமைகளை விளை திறனுடனும்,, நேரடியாகவும் பயன்படுத்துவதற்கும் தொழில் ஆலோசகர் ஊக்கமளிக்க முயற்சிக்கின்றார். 


தொழில்  சார் ஆலோசனையானது கற்றல் அல்லது தொழில் முன்னேற்றம் அல்லது மாற்றம் தொடர்பாக உதவியை நாடும் எவருக்கும் அந்தரங்கமான வழிகாட்டலை வழங்குகின்றது. தொழில் ஆலோசகர் என்பவர் தொழில் தொடர்பான அல்லது வாழ்க்கைத் திட்டம் தொடர்பான எல்லா வினாக்களுக்கும் ஆலோசனை வழங்கக்கூடிய தொழில் வாணமையாளர் ஆவர், ஆலோசனை வழங்கக்கூடிய  ஆலோசகர் ஒருவர் ஆலோசனை நாடி அதுவரை செய்த தொழில்களை பரீட்சித்து, தலையீடு தேவைப்படும், முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகளை தொழில் நாடி தாமே இனங்காண உதவுவார்.


தொழில் ஆலோசகர் ஒருவர் பின்வருவனவற்றில் உதவுபவராக காணப்படுவார்

  •  முக்கியமான கல்வி சார் திறன்களையும் திறமைகளையும் இனங்காணல்

  • வேலை தேடும் பணியை இலகுவாக்குதல்

  •  தொழில் செயல் அடைவு கோவை ஒன்றை உருவாக்க உதவுதல்

  •  தொழில் முன்னேற்றம் அல்லது தொழில் விருத்தி

  •  உங்களுக்கென  சொந்த செயற்திட்டம் ஒன்றை உருவாக்குதல் 


தொழில்சார் ஆலோசனை ஆனது பின்வரும் விடயங்களை வழங்குவதன் ஊடாக அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கின்றது.

  •  வேலை உலகில் காணப்படும் தொழில் வாய்ப்புகள் 

  • தொழிலுக்குத் தேவையான தகுதிகள் 

  • இருக்க வேண்டிய திறமைகள், ஆற்றல்கள்,  ஆளுமைகள்

  •  விண்ணப்பங்கள் தொடர்பான விபரங்கள் 

  • ஆட்சேர்ப்பு நடைமுறை 

முதலிய விடயங்கள் தொடர்பில் சரியான விளக்கத்தையும் புரிதலையும் வழங்குவது  தொழில்சார் ஆலோசனையின் முக்கியத்துவமாகும்,


தற்காலத்தில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது இதற்கு காரணம் பாடசாலை கல்வி முடிந்ததும் பல்கலைக்கழகம் சென்று அரச வேலை வாய்ப்புகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் படிப்பில் மட்டும் அதிக கவனம் செலுத்துவதாகும். இவ்வாறு பல்கலைக்கழகம் கிடைக்காதபோது அவர்களின் தொழில் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் பாடசாலையிலேயே தொழில் வழிகாட்டல் ஆலோசனை தொடர்பான செயற்பாடுகள் கட்டாயம் இடம்பெறுதல் வேண்டும் இத்தகைய செயற்பாடுகளுக்கு உதாரணங்களாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.

  • மாணவர்களுக்கு பல்வேறு தொழில்கள் தொடர்பான தகவல்களையும் விளக்கங்களையும் வழங்குதல் இங்கு ஆரம்பப் பாடசாலை பிள்ளைகளிடத்தில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்

  1. வேலை தொடர்பான உடன்பாடான மனப்பாங்கு விருத்தி செய்தல் உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தல்
  2.  பல்வேறு சேவை வழங்குனர் தொடர்பில் விளக்கம் அளித்தல் 
  3. பல்வேறு சேவைகளை இனங்காணல்

  •  இடைநிலைப் பாடசாலை பிள்ளைகளிடத்தில் வேலை தொடர்பான மனப்பாங்கினை பின்வரும் வகையில் ஏற்படுத்தலாம்

  1. வேலை உலகின் பல்வேறு சந்தர்ப்பங்களை குறிப்பிடல்
  2.  உழைப்பின் மகத்துவம்
  3.  தமது நாட்டுக்கு சேவை செய்தல்
  4.  வேலை தொடர்பான உடன்பாடான மனப்பாங்கு விருத்தி 
  5. வேலை பரிட்சயம் 

  • குறிப்பிட்ட தொழில்களுக்கு செல்வதற்கு தேவையான கல்வித்தகைமை, தொழில் தகைமை போன்றவற்றை குறிப்பிடுதல்

  •  தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலை போன்ற இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லுதல்

  •  தொழில் வழிகாட்டல் தொடர்பான கருத்தரங்கை மாவட்ட தொழில் திணைக்களம் மற்றும்  தொழிற்பயிற்சி அதிகார சபையின் உதவியுடன் பாடசாலையில் நடாத்துதல்

  •  தொழிலில் உள்ள சிரமங்களை அறிய கள பயிற்சிகளை வழங்குதல்

  •  எல்லாத் தொழிலையும் சமமாக மதிக்கும் திறன் கொண்டவராக மாணவர்கள் மாற்றுதல்

  •  ஆளுமை விருத்தி, குழுவாக செயல்படும் திறன், தலைமைத்துவ மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப அறிவு ஆங்கில அறிவு என்பவற்றை கொண்டவராக மாணவர்களை உருவாக்குதல்


எனவே மேற்குறிப்பிட்டவாறு பல்வேறு விடயங்கள் தொழில்சார் ஆலோசனை வழங்குதல் என்ற எண்ணக்கரு ஏன் அவசியம் என்பதை உணர்த்துவதாக உள்ளன. தற்காலத்தில் அதிகளவானவர்களின் வேலை தொழில்நுட்பங்களுடன் சார்ந்ததாக உள்ளதால் அங்கு வேலை செய்பவர்கள் பல்வேறு உளரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர். இவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் அவசியம் ஆகும். ஆகவே சகல தொழில் நிறுவனங்களிலும் ஆலோசகர் ஒருவர் காணப்படுவது மிகவும் முக்கியமாகும் எனலாம்.


_RASIMA. BF(BA-R)

Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.