Posts

Showing posts with the label கல்விக்கொள்கை திட்டமிடலின் போது கவனத்தில் கொள்ளத்தக்க விடயங்கள்

உலகமயமாக்கல் காரணமாக இலங்கையின் கல்விக்கொள்கை திட்டமிடலின் போது கவனத்தில் கொள்ளத்தக்க விடயங்கள்

Image
தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல்,பண்பாடு ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கு இடையேயான அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படுத்தப்பட்டு வரும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழுகின்ற நிலையையும் உலகமயமாக்கல் ( Globalization) எனலாம். மேலும் மக்கள் ஒரு நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று வாழ்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதல், நாடுகளுக்கிடையிலான வணிக கட்டுப்பாடுகள் இழிவாக்கப்படுதல், உள்நாட்டு உள்ளூர் சந்தை வெளிநாட்டு முதலீடுகளுக்காக திறந்து வைக்கப்படல், நாடுகளுக்கிடையிலான தொலைத்தொடர்புகள் விரிவாக்கப்படல், மக்கள் கலாசாரம் ஒன்றிணைக்கப்படல் என்பவற்றையும் இத்தகைய உலகமயமாக்கலானது மேற்கொண்டுள்ளது. இத்தகைய உலகமயமாக்கலினால் ஏற்பட்டுள்ள பல்வேறு தேவைகள் காரணமாக கல்வியும் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது.     மேற்குறிப்பிட்ட உலகமயமாக்கலின் காரணமாகவே உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளும் தங்களுக்குரிய கல்விக் கொள்கைகளை கவனமாகத் திட்டமிட்டு கொள்கின்றனர் இதனாலேயே அத்தகைய நாடுகள் உயர்ந்த நிலைய...