உலகமயமாக்கல் காரணமாக இலங்கையின் கல்விக்கொள்கை திட்டமிடலின் போது கவனத்தில் கொள்ளத்தக்க விடயங்கள்


தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல்,பண்பாடு ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கு இடையேயான அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படுத்தப்பட்டு வரும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழுகின்ற நிலையையும் உலகமயமாக்கல் (
Globalization) எனலாம். மேலும் மக்கள் ஒரு நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று வாழ்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதல், நாடுகளுக்கிடையிலான வணிக கட்டுப்பாடுகள் இழிவாக்கப்படுதல், உள்நாட்டு உள்ளூர் சந்தை வெளிநாட்டு முதலீடுகளுக்காக திறந்து வைக்கப்படல், நாடுகளுக்கிடையிலான தொலைத்தொடர்புகள் விரிவாக்கப்படல், மக்கள் கலாசாரம் ஒன்றிணைக்கப்படல் என்பவற்றையும் இத்தகைய உலகமயமாக்கலானது மேற்கொண்டுள்ளது. இத்தகைய உலகமயமாக்கலினால் ஏற்பட்டுள்ள பல்வேறு தேவைகள் காரணமாக கல்வியும் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது. 

  

மேற்குறிப்பிட்ட உலகமயமாக்கலின் காரணமாகவே உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளும் தங்களுக்குரிய கல்விக் கொள்கைகளை கவனமாகத் திட்டமிட்டு கொள்கின்றனர் இதனாலேயே அத்தகைய நாடுகள் உயர்ந்த நிலையில் உள்ள மையை குறிப்பிடலாம்      அதாவது           அபிவிருத்தி அடைந்த நாடுகள் உலகமயமாக்கலுக்கு ஏற்ப தங்களின் கல்விக் கொள்கைகளை திட்டமிடுவதில் திட்டமிடுவது சிறந்தமுறையில் விளங்குகின்றன எனலாம்


இலங்கையில் 1990 மார்ச் இளைஞர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 1991 இன் 19 ஆம் இலக்க தேசிய ஆணைக்குழு சட்டத்தினால் தேசிய கல்விக் கொள்கையை கட்டியெழுப்புவதற்காக தேசிய கல்வி ஆணைக்குழு தாபிக்கப்பட்டுள்ளது் தேசிய கல்வி ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் கல்வியின் அனைத்து பிரிவுகள் தொடர்பாகவும் பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து அதிகார சபைகள் மற்றும் நிறுவனத்தினால் இணக்கப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தேசிய கல்விக் கொள்கையினை  ஜனாதிபதியினால் காலத்திற்கு காலம்               பிரகடனப்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு  பிரகடனப்படுத்தப்படுகின்ற கல்விக் கொள்கையினை  திட்டமிடும் போது உலகமயமாதலினை கருத்தில்கொண்டு கீழ்வரும் விடயங்களை  கவனத்தில் கொள்ளவேண்டும் அந்த வகையில்,

  • பொருளாதாரம் மற்றும் பன்னாட்டு வணிகத்தை விருத்தியாக்குதல்


  • தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பினை அதிகளவில் பயன்படுத்தல் - தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையில் மாணவர்களுக்கு இணைய வழி கல்வியினை வழங்குவதற்கு மிகவும் முக்கியமாகும்.


  • . தொழிற்கல்வியை விருத்தியாக்குதல். 


  • அரசியல் பிணைப்புக்கள் தொடர்பாக முழுமையான விளக்கம் வழங்குதல்

  • .அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள கல்வித் திட்டங்களை மாதிரியாகக் கொண்டு கல்விக் கொள்கை திட்டமிடல்.


  • அமைதியாக போரின்றி வாழ்வதற்குரிய சமாதானக் கல்வியை விருத்தியாக்குதல்.


பொருளாதாரம் மற்றும் பன்னாட்டு வணிகத்தை விருத்தியாக்குதல்


பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாகும். இதுவே அந் நாட்டின் வளர்ச்சியை, உலகில் தீர்மானிக்கின்றது. இதனால் கல்விக் கொள்கையை திட்டமிடும்போது இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு கல்வி ஊடாக உயர்த்தலாம் என்பது தொடர்பாக ஆராயப்பட்டு அது தொடர்பான கொள்கைகள் அதிகமாக முன்மொழியப்பட வேண்டும். இதன் ஊடாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.


கல்வியினால் பொருளாதாரமும் பொருளாதாரத்தினால் கல்வியும் அதிகமான பங்களிப்புக்களை தங்களுக்கிடையில் செய்துகொள்கின்றன. இந்த வகையில் கல்வியை மாணவர்கள் பெறுவதில் சமத்துவ தன்மையை காண முடியாதுள்ளது. சில ஆய்வுகளின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் உள்ள குழந்தைகள் பணக்கார பின்னணி கொண்ட குடும்பங்களின் குழந்தைகளை விட மோசமான அறிவுசார்ந்த வளர்ச்சியை தரக்கூடிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். உதாரணமாக பிரித்தானிய கல்வி கொள்கையினை கொண்டதாக காணப்படும் சர்வதேச பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் அதிகளவான வினைத்திறனை, குறிப்பாக ஆங்கில மொழியினை சிறப்பாக  கொண்டிருக்கின்றமையை குறிப்பிடலாம்

.

கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் பொருளியல் துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் வெரும் புத்தக படிப்பை மாத்திரம் கற்பவர்களாக உள்ளதோடு அவ்வாறு கற்று பல்கலைக்கழகம் செல்கின்றவர்கள் பட்டதாரிகளாக வெளியானததும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். இதனால் நாட்டிள் மூலைசாலைகளின் வெளியேற்றம் அதிகரிக்கிறது. இதனைத் தடுக்கும் வகையிலான திட்டங்களை உருவாக்குவதாக கல்விக் கொள்கையை திட்டமிட வேண்டும்.   மேலும் பொருளியல் துறையில் பல்வேறு புதிய கற்கை நெறிகளை உருவாக்குதல் வேண்டும். இவ்வாறு உருவாக்கும் போது, மாணவர்கள் பட்டம் பெற்றதும் வெளிநாட்டுக்கு செல்வதை தடுத்து நாட்டிலேயே அவகளுடைய சேவைகளை பெற்று நாட்டின் வருமானத்தை உயர்த்தலாம்.


உலகமயமாதலினால் சுற்றுலாத்துறையானது, மிகவும் முக்கியமானதாக உள்ளது. தற்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு அதிக வருமானத்தைப் பெற்றுத்தரும் ஒரு துறையாக உள்ள இதனை மேலும் விரிவுபடுத்துவதற்கு இது தொடர்பான கற்கை நெறிகளை பாடசாலைக் கல்வியிலும் பல்கலைக்கழகத்தியிலும் உருவாக்குதல் வேண்டும். இது தொடர்பான கற்கைகள் தற்போது பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்றன இவற்றை மேலும் விருத்தி செய்தல் வேண்டும்.


இலங்கையில் பல்கலைக்கழக நுழைவு ஆண்டுதோறும் சுமார் 3-5 வீதமான மாணவர்களுக்கே கிடைக்கின்றது. மீதி 90 வீதமானவர்கள் உயர் கல்வி வாய்ப்புகளை பெற முடியாதவர்களாக உள்ளனர். இவ்வாறு உயர்கல்வியை பெற முடியாத இளைஞர்கள் விரக்தியான நிலைக்கு உள்ளாகி போதை பாவனைக்கு மாறுகின்றனர் இவர்களால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் இணையம் மூலமான சர்வதேச பல்கலைக்கழக தொலை கற்கை நெறிகள் மற்றும்  வருவழி கற்கைகள் மற்றும் தொழில்சார் பாடங்கள் என்பற்றினை உள்நாட்டில் செயற்படும் இணைந்த பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் என்பவற்றின் ஊடாக உயர்கலஙவி வழங்கும் வாய்ப்பினை விரிவுபடுத்தல் வேண்டும்.


மேற்கூறியவற்றை கல்விக் கொள்கையை திட்டமிடும்போது கவனத்தில் கொண்டு திட்டமிடுவதனால் நாட்டின் பொருளாதாரத்தை விரிவுபடுத்தி தேசிய உற்பத்தி வீதத்தை கல்வி கல்வியினூடாக அதிகரிக்கலாம். 



தொழிற்கல்வி விருத்தியாக்குதல்

தற்போதுள்ள உலகமயமாதலில் தொழிற்கல்வி மிகவும் முக்கியமானதாகும். பாடசாலையை விட்டு இடைவிலகிய மற்றும் உயர்கல்வி பெறும் வாய்ப்புகளை இழந்த மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. சிறந்த முறையில் தொழில் செய்யக் கூடியவர்களை உருவாக்கி நாட்டினனை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்கத்துடன் மூன்றாம் நிலை கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது தொழிற்பயிற்சியை முன்னிறுத்தும் ஒரு கல்வியாக உள்ளது.


இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினால் ஐந்துக்கு மேற்பட்ட தொழிற்பயிற்சி கற்கைநெறிகள் NVQ மட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு வழங்கும் தொழிற்கல்வியினை விருத்தியாக்கும் வகையில் கல்விக் கொள்கையை திட்டமிட வேண்டும். தற்போது நாட்டில் வேலை வாய்ப்பற்ற நிலை உள்ள அதேவேளை  தொழில்துறைகளில் வேலையாட்கள் பற்றாக்குறையாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு காரணம் தொழில் துறைகளை கையாளக் கூடிய சான்றிதழ்களைக் கொண்ட வேலையாட்கள் இன்மையாகும். இதனை தடுப்பதற்கு கா.பொ.த உயர்தரம் மற்றும் கா.போ,த சாதாரண தரம் முடித்த மாணவர்களுக்கு அவர்களது விடுமுறை நாட்களில் கற்கைநெறிகளை தொடர்வதில் ஊக்கம் செலுத்தும் வகையில் கல்விக் கொள்கையை திட்டமிட வேண்டும்.


ஆங்கில மொழியை சரளமாக பேசவும் எழுதவும் கூடியவர்களாக சகல மாணவர்களையும் மாற்றுதல் 


ஆங்கில மொழி தெரிந்தால் எந்தத் துறைக்கும் எந்த நாட்டுக்கும் சென்று வாழ முடியும். இதனால்  பாடசாலைக் கல்வியிலே மாணவர்கள் ஆங்கிலத்தை சரளமாக பேசக்கூடிய எழுதக் கூடிய நிலையை உருவாக்குவது தற்காலத்தில் மிகவும் முக்கியமானதாகும். தற்காலத்தில் சுற்றுலாத்துறை விருத்தினால் அதிகமான வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகின்றனர் இதனால் சுற்றுலா துறையில் பணி புரிவதற்கு ஆங்கில மொழியை சரளமாக தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு வெளிநாடுகளில் தொழில் புரிதல். உலக சினிமா ஊடகம் என்பவற்றை பயன்படுத்துதல், சர்வதேச பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை தொடர்தல் என்பவற்றிற்கு ஆங்கில மொழி முக்கியமாகும். பல்கலைக்கழக மாணவர்களில் ஆங்கில மொழியினை ஊடகமாக கொள்ளும் மாணவர்கள் ஆங்கிலம் சரளமாக பேசக்கூடியவர்களாக காணப்பட்டாலும் தமிழ் மொழியினை ஊடகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்கில மொழி தொடர்பாக எந்த காவனமும் செலுத்துவதில்லை. இதனை தவிர்க்கும் வகையில் ஆங்கில மொழியில் பேசவும் எழுதவும் கட்டாயமாக தெரிந்திருத்தல் வேண்டும் என்னும் நிலையினை உருவாக்கும் வகையிலான கல்வி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.


அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள கல்வித் திட்டங்களை மாதிரியாகக் கொண்டு கல்விக் கொள்கை திட்டமிடல்.

பல நாடுகள் அபிவிருத்தி அடைந்த நிலையில் உள்ளமைக்கு அந்நாடுகளில் உள்ள கல்வித் கொள்கைகளில் காலத்திற்கேற்ற வகையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றமையாகும், இந்தவகையில் சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடாக விளங்குகின்ற ஜப்பானை எடுத்துக்கொண்டால் அங்கு பல்வேறு கல்வி முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றைக் கீழே விரிவாக நோக்கலாம். 

  • ஆரம்பப் பாடசாலையில் உள்ள மாணவர்கள் அவர்களது பிரதான பாடங்களை படிக்குமாறு கஷ்டப்படுத்த படுவதில்லை. விழுமியங்கள் விழுமியங்கள் ஒழுக்கம் தொடர்பிலேயே அவர்களது கவனம் திருப்பப்படுகிறது. மென்மையாகவும் மரியாதையாகவும்  எவ்வாறு நடந்து கொள்வது என மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. சுயகட்டுப்பாடு,     நீதியாக நடந்து கொள்ளும் முறை சம்பந்தமாக அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றது. இவ்வாறு  அடித்தளங்கள் விடப்பட்டால் மாத்திரமே கனிஷ்ட உயர்நிலைப் பாடசாலை மற்றும் உயர்நிலைப் பாடசாலை கல்வியில் பிரதான பாடங்களில்சிறந்த அடைவினை அந்த மாணவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • பாடசாலையின் துப்புரவு பணிகள் அனைத்தையும் மாணவர்களே செய்கின்றனர். பாடசாலையின் துப்புரவு பணிகளில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது இதன் நோக்கம் இயற்கையாக வேலை ஒழுக்கம் தொடர்பில் மாணவர்களின் மனதில் பதிய வைத்தலாகும். அவர்கள் தம்மை குழுக்களாக வடிவமைத்துக் கொண்டு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பதற்கு, ஒத்துழைப்பு மற்றும் முயற்சிகளின் ஊடாக என்னென்ன வழிமுறைகளை கையாண்டனர் என்பதை தமது மனதில் பதிவு செய்து கொள்கிறார்கள். வகுப்பறைகளை மாத்திரம் சுத்தம் செய்வதில்லை சிற்றுண்டிச்சாலை மற்றும் கழிவறை கூட  சுத்தம் செய்கிறார்கள். மாணவர்கள் பாடசாலையில் அங்குமிங்கும் கழிவுகளை போடுவதை தவிர்த்து கொள்வதில் மிக கவனமாக இருப்பதோடு தூய்மையை விரும்புவோராகவும் மாறுகின்றனர்.

  • வகுப்பறையிலேயே உணவு உட்கொள்ளல் -  ஜப்பானியர்களை பொருத்தவரை உணவு உட்கொள்ளுதல் என்பது முக்கியமான சமூக செயல்பாடாக உள்ளது. மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட ஒரே வகையான உணவினை ஆசிரியர்களின் மேற்பார்வையில் உட்கொள்கின்றனர். இந்த செயற்பாடுகள் மாணவர்களிடையே நல்ல பிணைப்பினையும் மேசையில் அமர்ந்து சாப்பிடும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்ள வழிவகுக்கின்றது 

  • அனைத்து உயர்நிலைப் பாடசாலை மாணவர்களும் புறக்கிருத்திய  செயல்பாடுகளில் ஈடுபடுதல்- ஜப்பானிய சிறுவர்கள் வேலைகளில் ஈடுபடுவதில்லை. அவர்களுடைய வேலையே விளையாடுவதுதான் எனவே பாடசாலை நேரம் நேரம் எவ்வளவு முக்கியமானதோ அதே போன்று தான் பாடசாலை முடிந்த பின்னர் இருக்கும் நேரமும் முக்கியமானது 

  • அனைத்தையும் தீர்மானிக்கும் ஒரு பரீட்சை - ஜப்பானில் உயர் நிலைப் பாடசாலைகள் மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டவை கல்லூரிப் படிப்பைத் தொடர உள்ளவர்களிைடயே போட்டி கடுமையானதாக இருக்கும். பரீட்சையின் போது தரத்தினை பெற்றால் மேற்கொண்டு கல்லூரிப் படிப்பைத் தொடர முடியும். சித்தியை தவறும்பட்சத்தில் பல்கலைக்கழகத்திற்கு செல்லமுடியாது. ஆனால் ஜப்பானிய தொழிற்சந்தையில் பொருத்தமான தொழிலை பெற்றுக்கொள்ள முடியும். 

இவ்வாறான கல்வி முறைகளை  பயன்படுத்தும் வகையில் எமது கல்விக் கொள்கையை திட்டமிடும்போது சிறந்த கல்வியைப் பெற்று நாட்டினை சிறந்த முறையில் முன்னேற்றலாம்.


எனவே மேற்குறிப்பிட்டது போன்று பல்வேறு விடயங்களை கல்விக் கொள்கையை திட்டமிடும் போது கவனத்தில் கொள்வதன் ஊடாக உலகமயமாக்கலினால் ஏற்பட்ட மாற்றங்களை, தேவைகளை தேவைகளை முறையாக நிறைவேற்றுவதோடு நாட்டினை முன்னேற்ற பாதைக்குயிட்டுச் செல்லலாம் மேலும் எழுத்தறிவு வீதம் கூடிய நாடுகளில் முன்னேறிய நிலைக்கு செல்ல முடியும். 


-RASIMA.BF (BA-R)
EASTERN UNIVERSITY, SRI LANKA.

Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]