Education Theories
மண்டல அறிவுக் கொள்கை . கற்றல் தொடர்பான உளவியல் கோட்பாடுகளை வகைப்படுத்துவது சிக்கலானதாகும். எனினும் சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இரு பெரும் பிரிவுகளாக அக்கோட்பாடுகளை பிரித்து நோக்கலாம். அந்த வகையில், அவை “தூண்டி துலங்கல் கொள்கை, மண்டல அறிவு கொள்கை” என்பனவாகும். இவ்வகையில் இரண்டாவதாக உள்ள மண்டல அறிவு கொள்கையானது, “பல தூண்டிகள் ஒரே நேரத்தில் காணப்படல், தூண்டிகள் யாவும் ஒரு கருத்தை தரக்கூடிய வகையில் ஒன்றுகூடல், புறச் சூழலையும் தன்னையும் மாற்றியமைக்கக் கூடிய வகையில் தூண்டிகளின் காரணமாக ஓர் உயிரியிடம் காணப்படும் எதிர் தாக்கம், உயிரின் மாற்றமடையும் தன்மை, எனும் நான்கு பிரதான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி அடைந்ததோடு, தூண்டி துலங்கல் கொள்கையானது கற்றல் என்பதை துண்டிக்கும் துலங்களுக்கும் இடையே ஏற்படுகின்ற ஓர் எளிய தொழிற்பாடாக கருதப்படுகின்றது எனவும் மனிதனை கீழின விலங்காக கருதுகின்றது எனவும் தனது முக்கிய கண்டனங்களைத் தெரிவித்து வந்தது. இக் கொள்கையின் முன்னோடி அதாவது மண்டல அறிவுக் கொள்கையின் முன்னோடிகளாகத் திகழ்பவர்கள் கொவ்கா, கோலர், வே த்திமர் போன்றோர் முக்கியமானவர்கள் ...