பவ்லோவின் நிபந்தனைப்படுத்தல் கோட்பாடு
பவ்லோவின் நிபந்தனைப்படுத்தல் கோட்பாடு வகுப்பறைக் கற்பித்தலில் ஆசிரியருக்கு எவ்வளவு தூரம் பயனுடையதாகிறது என்பதை நீர் விரும்பும் ஒரு பாடத்தின் ஊடாக பல்வேறு உதாரணங்களுடன் விளக்குக. ஆதிகாலத்தில் தத்துவத்துடன் இணைந்திருந்த உளவியல் 19ஆம் நூற்றாண்டிலிருந்து தனித்துவம் வாய்ந்த ஒருதுறையாகப் பல்வேறு ஆய்வுகள் மூலம் வளர்ந்தது. இவ்வளரச்சிக்கு வித்தாக கற்றல் என்ற எண்ணக்கருவே அமைந்தது. முக்கிய உளவியல் விருத்தி தொடர்பான நிகழ்வாக வில்லியம் வொன்ட்,(William Wund : 1832-1920 ) என்ற உளவியல் அறிஞர் உலகின் முதலாவது ஆய்வு கூடத்தினை 1879ஆம் ஆண்டு ஜேர்மனியின் லீப்சிக் பல்கலைக்கழகத்தில் தொடக்கி வைத்ததைக் குறிப்பிடலாம். இதனூடாகத் தத்துவத்திலிருந்து வேறாகி உளவியல் ஒரு விஞ்ஞானக்கலையானது. கற்றலும் அது தொடர்பான கோட்பாடுகளும் எழ வழிகாட்டியது. தொடரந்து சார்ல்ஸ் டாவினின் உயிரியல் பரிணாமவாதமும், கூர்ப்பு தொடர்பான ஆய்வுகளும் மனித உளவியல் தொடர்பான ஆய்வுகளும் உதவின. பின்னர் நடத்தைசார் உளவியலாளர்கள் தூண்டல் மற்றும் துலங்கல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தைவாத உளவியல் கற்றல் கொள்கையை விருத்தியாக்கினர்....