B.F ஸ்கின்னரின் மீளவலியுறுத்தல் கொள்கை
மீளவலியுறுத்தல் செயற்பாடும் பின்னூட்டலும் வகுப்பறை கற்பித்தல் செயற்பாட்டின் வினைத்திறனை அதிகரிக்கும். இக்கூற்றினை அடிப்படையாகக் கொண்டு கனிஷ்ட இடைநிலை வகுப்புக்களில் எவ்வாறான பிரயோகத்தை மேற்கொள்வீர் என்பதை ஆராய்க. மீளவலியுறுத்தல் பற்றிய பரிசோதனைகளை மேற்கொண்டவர்களில் மிக முக்கியமானவர் B.F ஸ்கின்னர் ஆவார். இவர் 20 மார்ச் 1904 அமெரிக்காவில் பிறந்தார். ஹவார்ட், மின்னி செட்டா மற்றும் இண்டியான போன்ற பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணிபுரிந்தார். அவர் தனது வாழ்நாளில் இறுதியில் கூட உளவியல் தொடர்பாக எழுதுவதிலும் சொல்வதிலும், சொற்பொழிவிலும் ஈடுபட்டார். இதனால் இவருக்கு அமெரிக்க உளவியல் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவித்தது. மேலும் இவர் 21 நூல்களையும் 180 சிறு கட்டுரைகளையும் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் மீளவலியுறுத்தல் பற்றிய பல பரிசோதனைகளை நடாத்தி அது நடத்தையில் என்ன மாற்றங்களை விளைவிக்கின்றெதென அறிந்தார். ஹல், தோண்டைக் ஆகியோரின் பரிசோதனைகளையே ஸ்கின்னரும் ஏற்பாடு செய்து கற்றல் மீளவலி...