பாடசாலை முகாமைத்துவத்தில் EMIS இன் பங்களிப்பு
முகாமைத்துவம் என்பது நிறுவனத்தின் இலக்கினை மற்றும் குறிக்கோளை அடைவதற்கு, வினைத்திறனுடன் செயற்பட்டு விளைதிறனாக மாற்றமடைய அருமையாக கிடைக்கின்ற வளங்களான மனித பௌதிக வளம் மற்றும் நிதி, நேரம் முதலான வளங்களை அதி உச்ச பயன்பாட்டின் ஊடாக ஒழுங்கமைக்கும் ஓர் செயற்பாடாகும். இத்தகைய முகாமைத்துவமானது ஒரு நிறுவனத்தில் சிறந்த முறையில் இடம்பெறுவதற்கு அந்நிறுவனம் தொடர்பான தகவல் தொகுதி சரியாக இனங்காணப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டு நிரற்படுத்தப்பட வேண்டும். இங்கு பெறப்படும் தகவல் நம்பகத்தன்மையாகவும் உண்மையாகவும் காணப்படல் வேண்டும். அவ்வாறு தகவல்கள் சரியாக பெறப்பட்டு முகாமைத்துவ செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போதே ஒரு நிறுவனம் வினைத்திறனுடைய நிறுவனமாக இயங்க முடியும். முகாமைத்துவ தகவல் தொகுதி என்பது சகல நிறுவனங்களிலும் காணப்படும். அந்தவகையில், ஒரு நிறுவனமாகவுள்ள பாடசாலையிலும் முகாமைத்துவ தகவல் தொகுதி காணப்படுகிறது. அதனை EMIS என சுருக்கமாக குறிப்பிடுவர். அதன் விரிவாக்கம் Educational Management Information System (கல்வி முகாமைத்துவ தகவல் தொகுதி) ஆகும். இந்த EMIS திட்டமானது, கல்வி முறையைப் பற்றி தகவல் நிர்வக...