விளைதிறனான பாடசாலை என்ற துலங்களைக்காட்டும் பண்புகளை இனங்கண்டு அதற்கு சமூகம் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்க முடியும் என்று ஆராய்க.
எந்த ஓரு நிறுவனமும் சிறப்பாக இயங்குவதற்கு விளைதிறனும் வினைத்திறனும் மிகவும் அவசியமாகும். அந்தவகையில், விளைதிறன் என்பது, “ஏதாவதொரு நிறுவனம் அல்லது ஒழுங்கமைப்பின் பணிக்கூற்று மற்றும் நோக்கம் ஆகியவை திட்டமிடப்பட்ட அளவில் அடையப்பட்ட அளவு தொடர்பான அளவுகோளாகும் ”. இதனை மேலும் விரிவாக கூறின் ஒரு நிறுவனம் தனது நோக்கங்கள்,குறிக்கோள்கள் என்பதனை எதிர்பார்த்த அளவில் அடைந்தால் மாத்திரமே அது விளைதிறனான நிறுவனம் எனக் கொள்ளலாம். விளைதிறன் என்னும் எண்ணக்கரு கல்விக் குறிக்கோள்கள் அடையப்படுவதற்கு அடிப்படையாக உள்ள அறிகைசார் தொழிற்பாடுகள், சமூக வெளிப்பாடுகள் போன்றவற்றையே குறித்து நிற்பதாக சம்மன்ஸ் (Sammonsா 1999) குறிப்பிடுகிறார். மனித பௌதீக வளங்களை விருத்தி செய்வதற்குத் தேவையான அடிப்படைகளை பயன்படுத்துவதையே பாடசாலையை விளைதிறன் மிக்கதாக்குதல் எனும் பதம் குறித்து நிற்பதாக எவ்ராட், மொரிஸ் (1985) ஆகியோர் குறிப்பிடுகின்றனர். ஒரு பாடசாலையை பொருத்த வரையில் அப்பாடசாலை பிரதான பயன்நுகரிகளான மாணவர்களின் விருப்பங்களை மற்றும் தேவைகளை அடையச்செய்யும் வகையில் குறைந்த வளங்களைப் பயன்படுத்தி உச...