Posts

Showing posts with the label இயல்பூக்கங்களை பிரயோகித்தல்

வகுப்பறை கற்பித்தலில் இயல்பூக்கங்களை பிரயோகித்தல்

Image
இயல்பூக்கங்களை எவ்வாறு ஒரு ஆசிரியர் வகுப்பறைக் கற்பித்தலில் பிரயோகிக்கலாம் என்பதை பல்வேறு உதாரணங்களுடன் விளக்குதல் .                  “ இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் ” என்கின்ற ரீதியில் மாணவர் சமுதாயத்தினை கல்வி அறிவில் முன்னேற்றுதல் , எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூய ஆளுமையும் திறனும் கொண்டவர்களாக உருவாக்குதல் , அவர்களை முழுமையான மனிதர்களாக்குதல் போன்ற பணிகளில் பாடசாலையானது மிகப்பெரிய வகிபங்கினைக் கொண்டுள்ளது . அத்தகைய வகிபங்கில் ஆசிரியர்கள் முதன்மை பெறுகின்றனர் . பாடசாலையின் வகுப்பறையிலிருந்தே சமூக ஆளுமையுடைய அறிவு பூர்வமான மாணவர்களையும் நாளைய சிறந்த தலைவர்களையும் வளர்த் தெடுப்பதற்குரிய கற்றல் - கற்பித்தல் முறைமைகளை ஆசிரியர்கள் சரியான முறையில் முன்னெடுக்கின்ற போது அது சாத்தியமாகும் . தரமான கல்விக்கு தரமான ஆசிரியர் என்ற பதம் இன்று எல்லோராலும் முன்னெடுக்கப்பபடுகிறது . வேகமாக மாறிவரும் கற்பித்தல் உத்திகளை ஆசிரியர்கள் கற்பித்தலில் உள்வாங்குவதன் ஊடாகவே ஆர்வ...