Education Theories
மண்டல அறிவுக் கொள்கை.
கற்றல் தொடர்பான உளவியல் கோட்பாடுகளை வகைப்படுத்துவது சிக்கலானதாகும். எனினும் சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இரு பெரும் பிரிவுகளாக அக்கோட்பாடுகளை பிரித்து நோக்கலாம். அந்த வகையில், அவை “தூண்டி துலங்கல் கொள்கை, மண்டல அறிவு கொள்கை” என்பனவாகும். இவ்வகையில் இரண்டாவதாக உள்ள மண்டல அறிவு கொள்கையானது, “பல தூண்டிகள் ஒரே நேரத்தில் காணப்படல், தூண்டிகள் யாவும் ஒரு கருத்தை தரக்கூடிய வகையில் ஒன்றுகூடல், புறச் சூழலையும் தன்னையும் மாற்றியமைக்கக் கூடிய வகையில் தூண்டிகளின் காரணமாக ஓர் உயிரியிடம் காணப்படும் எதிர் தாக்கம், உயிரின் மாற்றமடையும் தன்மை, எனும் நான்கு பிரதான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி அடைந்ததோடு, தூண்டி துலங்கல் கொள்கையானது கற்றல் என்பதை துண்டிக்கும் துலங்களுக்கும் இடையே ஏற்படுகின்ற ஓர் எளிய தொழிற்பாடாக கருதப்படுகின்றது எனவும் மனிதனை கீழின விலங்காக கருதுகின்றது எனவும் தனது முக்கிய கண்டனங்களைத் தெரிவித்து வந்தது. இக் கொள்கையின் முன்னோடி அதாவது மண்டல அறிவுக் கொள்கையின் முன்னோடிகளாகத் திகழ்பவர்கள் கொவ்கா, கோலர்,வேத்திமர் போன்றோர் முக்கியமானவர்கள் ஆவர்.
மேலே குறிப்பிட்ட மண்டல அறிவுக் கொள்கையின் உள்ளேயே, கெஸ்டாட்டின் அறிவுசார் கற்றல் கொள்கை, ரோமன் என்பவரின் குறி கற்றல் கொள்கை, கற்றலில் களக் கொள்கை, கற்றலின் அமைப்பிற்கான மாதிரி கொள்கை, புருணரின் அறிவுறுத்தல் கொள்கை போன்ற முக்கிய கொள்கைகள் இடம்பெறுகின்றன. இவை மேற்குறிப்பிட்ட முக்கிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தமது கருத்துக்களை முன்வைக்கின்றன. இக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு வகுப்பறையில் எவ்வாறு கற்றல் பிரயோகங்களை ஒழுங்கமைப்பு செய்யலாம் என்பதை கீழே உதாரணங்களுடன் நோக்கலாம்.
கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் வகுப்பறையானது சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்படவேண்டும். வகுப்பறையில் உள்ள மாணவர்களிடம் ஆசிரியர் ஒரு விடயத்தை கூறுவதற்கு கற்றல் உபகரணங்களை பயன்படுத்தும் போது அங்கு பல தூண்டிகள் ஒரே நேரத்தில் நிலவுகிறது அதாவது கணிதப் பாடத்தில் உள்ள தளவுருக்கள் பற்றி விளக்குவதற்கு தளவடிவங்கள் அனைத்தையும் மாணவர்களிடம் காட்சிப்படுத்தும் போது அங்கு பல தூண்டிகள் உருவாகின்றன பின்னர் ஆசிரியர் இவை பொதுவாக தளவுருக்கள் என்று விளக்கியதும் தூண்டிகள் யாவும் ஒரு கருத்தை தரக்கூடிய வகையில் ஒன்று கூடுகின்றன. அதன் பிறகு மாணவர்கள் தள உருக்கள் தொடர்பான தெளிவான விளக்கத்தை பெற்றுக் கொள்வதோடு உயிரின் மாற்றமடையும் தன்மையும் ஏற்படுகிறது எனலாம்.
இதனை மற்றுமொரு உதாரணத்தின் ஊடாகவும் விளக்கலாம் அதாவது ஆசிரியர் ஒலி மாசடைதல் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்குவதற்கு பாதையில் செல்லும் வாகனங்களின் ஒலி, சூழலில் உள்ள ஏனைய ஒலிகள் போன்றவற்றை செவிமடுக்குமாறு குறிப்பிடுதல், அங்கு பல்வேறு ஒலிகளும் பல்வேறு தூண்டிகளாக காணப்படும். பின்னர் அனைத்தும் ஒலிகள் என்ற ஒரே கருத்தை தரக்கூடியதாக அமைந்து மாணவர்கள் புறச்சூழலையும் தன்னையும் மாற்றி அமைக்கக்கூடிய வகையில் தூண்டுதலின் காரணமாக ஓர் எதிர் தாக்கத்திற்கு தயாராகி. மாற்றமடையும் தன்மையினை வெளிப்படுத்துவர்.
பல்வேறு கையாண்டு பார்த்தால்கள் மற்றும் பல்வேறு செயற்பாடுகளில் மாணவரை வழிப்படுத்தல் வேண்டும் இதன் போது சுயமாக அத்தகைய கையாண்டு பார்த்தால்களில் ஈடுபடுவதனால் பல தூண்டிகள் சேர்ந்து ஒரு கருத்தை தரக்கூடியதாக அமைவதை மாணவர்கள் அறிந்து கொள்வர் அவர்களின் நடத்தை மாற்றம் சிறப்பாக இடம்பெற்று இருப்பதையும் அவதானிக்க கூடியதாக அமையும்.
கற்றலில் ஈடுபடுபவர் உள்ளவாறு சிந்தித்து பிரச்சினையை தீர்க்க பெரிதும் பங்களிக்கும் வகையிலேயே பாடங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். அத்தோடு, மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் போது முழுமையை விளங்கிக் கொள்ளும் வகையிலும் முன் வைப்பது முக்கியம் ஆகும்.மேலும் முழுமையை பகுதிகளாக பிரித்து பாடத்தின் உள்ளடக்கத்தை மாணவர்களுக்கு பொருத்தமான முறையில் விளக்க முயற்சிக்க வேண்டும்.
எனவே, மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளையும் செயற்பாடுகளையும் வகுப்பறையில் மேற்கொள்வதன் ஊடாக கற்றல் பிரயோகமானது சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு மாணவர்களிடம் இருந்து வெளிப்படுத்த வேண்டிய மாற்றங்கள் முறையாக வெளிப்படுத்தப்படுகின்றன எனலாம்.
Superb
ReplyDeletemasha allah.... usefull information.
ReplyDeleteMasha allah . The best thing is also found to be useful
ReplyDeleteUseful information
ReplyDeleteUseful information
ReplyDeleteSprb 😍
ReplyDeleteUseful information
ReplyDelete