“உளப்பயிற்சிக் கொள்கையும், ஒத்த மூலக்கொள்கையும் கற்றலிலுள்ள இடமாற்றம் முழுவதையும் விளக்கவில்லை”. என்பது தொடர்பான கெஸ்டால்ட் பொதுமைக் கொள்கையின் விமர்சனம்

உளப்பயிற்சிக் கொள்கையும், ஒத்த மூலக்கொள்கையும் கற்றலிலுள்ள இடமாற்றம் முழுவதையும் விளக்கவில்லை. என்பதை கெஸ்ரால்டின் பொதுமைக் கொள்கை எடுத்துரைக்கிறது. இது தொடர்பான கருத்துக்களை முன்வைத்து ஆராய்க.


ஒருவர் யாதேனும் சந்தர்ப்பத்தில் பெற்ற கற்றலை பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் பிரயோகித்தலே கற்றல் இடமாற்றமாகும்”.

முன்னைய கற்றல் அனுபவங்களை பின்னைய சந்தர்ப்பம் ஒன்றில் பொருத்தமானவாறு பயன்படுத்தலே கற்றல் இடமாற்றம் ஆகும்”.

யாதேனும் செயல் தொடர்பான கற்றலை அல்லது அனுபவங்களை அதன் பின்னர் எதிர்கொள்ளும் செயலொன்றின் போது செல்வாக்கு செலுத்துவதே கற்றல் இடமாற்றமாகும்.” என எச்.சி எலிஸ் விவரித்துள்ளார்.

மேற்கூறியவாறு பல வரைவிலக்கணங்கள் கற்றல் இடமாற்றத்திற்கு வழங்கப்படுகிறது. பொதுவாகஒரு சூழலில் கற்கும் திறன், அறிவு, பழக்கவழக்கங்கள் ஆகியன இன்னொரு சூழலில் பிரயோகிக்கப்படுதலே கற்றலில் இடமாற்றம்Transfer  of  Learning)  எனப்படும்.

தொடர்ந்து நிகழும் கற்றல் அல்லது செயற்பாட்டின் மீது முதலில் கற்றவை செல்வாக்குச் செலுத்தும் போது அங்கே கற்றல் இடமாற்றம் நிகழ்கிறது. உதாரணமாக, சில கணிதப்பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு ஒரு மாணவன் முதல் நாள் கற்றுக்கொள்வானாயின், அடுத்த நாள் ஆசிரியரால் கொடுக்கப்படும் புதிய கணிதப்பிரச்சினைகளையும் அவன் தீர்த்துக் கொள்வான். முதலாவது பிரச்சினைகளுடன் அவன் பெற்றுக் கொண்ட அனுபவம் இரண்டாம் பணிக்கு மாற்றப்பட்டது எனலாம்.

எலிஸ் என்வரின் கருத்துப்படி கற்றல் இடமாற்றமானது மூன்று விதமானது.

01.          ஒரு செயல் மூலம் பெறும் அனுபவங்கள் அல்லது கற்றல் மற்றுமொரு செயலைச் செய்வதை இலகுபடுத்தலாகும்.

02.          ஒரு செயல் மூலம் பெறும் அனுபவங்கள் அல்லது கற்றல் மற்றுமொரு செயலைச் செய்வதைக் கடினமாக்கலாம்.

03.          ஒரு செயல் தொடர்பாக பெறும் அனுபவங்கள் அல்லது கற்றல் மற்றுமொரு செயலின்பால் எவ்வித செல்வாக்கையும் செலுத்தாதிருக்கலாம்.

இதற்கமைய கற்றல் இடமாற்றம் என்பது யாதேனும் சந்தர்ப்பத்தில் பெற்ற அறிவு, மனப்பாங்குகள், திறன்கள் போன்றவற்றை குறிப்பாக அவற்றுக்காக கற்றுக் கொள்ளாத சந்தர்ப்பமொன்றில் பிரயோகிக்கலாம் எனக் குறிப்பிடலாம். உதாரணமாக முதலாவது பாடவேளையில் நாம் கற்கும் ஒரு கணிதப்பிரச்சினையை இரண்டாவது பாட வேளையில் உள்ள பௌதீகவியல் பிரச்சினைகளுக்கு உபயோகித்தால் அங்கே கற்றல் இடமாற்றம் நிகழ்கிறது. பாடசாலையில் தையல் பயின்ற பிள்ளை அத்திறனை வீட்டிலே தனது உடைகளைத் தைக்கப் பயன்படுத்தினால் அங்கும் கற்றல் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. எனினும். இவ்விரு சந்தர்ப்பங்களிலும் காணப்பட்ட நிபந்தனைகள் வேறுபட்டவை.


கற்றல் இடமாற்றமானது பல வகையாக பிரிக்கப்படுகிறது அந்தவகையில்,

             நேரான இடமாற்றம்

இது நேர்வகையான கற்றல் இடமாற்றம் எனவும் அழைக்கப்படும். நேரான இடமாற்றம் என்பது முதலாவது சந்தர்ப்பத்தில் ஒருவர் பெற்ற பயிற்சியை பின்னைய சந்தர்ப்பமொன்றில் வெற்றிகரமாகப் பிரயோகிக்கலாம். கற்றல் இடமாற்றங்களுள் ஏறத்தாழ 70 வீதமானவை நேரானவையாகவே நிகழ்கின்றன என கிரில் பேர்ட் எனும் உளவியலாளர் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக, கைத்தொழிலாளர் ஒருவர் முதலாவது சந்தர்ப்பத்தில் பெற்ற ஒரு திறனை பின்னய சந்தர்ப்பமொன்றில் வெற்றிகரமாகவும் சரியாகவும் பிரயோகித்தாராயின் அங்கு நேர்வகையான கற்றல் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது எனலாம்.

             எதிரான இடமாற்றம்

இது உடன்பாடற்ற இடமாற்றம் எனவும் அழைக்கப்படும். முதல் சந்தர்ப்பத்தில் பெற்ற கற்றல் அல்லது அனுபவம் பின்னைய சந்தர்ப்பமொன்றில் தடங்களான வகையில் செல்வாக்குச் செலுத்துதலாகும். கிரில்பேர்ட் அவரது ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக்களின் ஊடாக ஏறத்தாழ 10 வீதமான கற்றல் இடமாற்றங்கள் உடன்பாடற்ற இடமாற்றங்களாக நிகழுவதாக எடுத்துக்காட்டியுள்ளார்.

             குறிப்பான இடமாற்றம்

ஒரு விதி, திறன் அல்லது உண்மை ஒரு சந்தர்ப்பத்தில் கற்கப்பட்டு அதனைப் போன்ற இன்னோர் சந்தர்ப்பத்தில் பிரயோகிக்கப்படுமானால் அது குறிப்பான இடமாற்றம் ஆகும். உதாரணமாக ஒருவர் ஒழுங்காக ஆணியை அடிக்கக் கற்றால் சிறிய ஆணிகளையும் அடிக்க முடியும் என புரூனர் குறிப்பிடுகிறார்.

             பொதுவான இடமாற்றம்

ஒரு சந்தர்ப்பத்தில் கற்றுக் கொண்ட கோட்பாடுகள் அல்லது திறன்கள் அதனையொத்ததாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்தும் போது பொதுவான இடமாற்றம் நிகழ்கிறது.

கற்றல் இடமாற்றம் நிகழும் விதம் தொடர்பாக தோண்டைக், ஜட், குரோன்பாரக் போன்றவர்கள் பின்வருமாரு குறிப்பிடுகின்றனர்.

தோண்டைக் - ஓர் உளச்செயல் ஒப்பான கோட்பாடுகளைக் கொண்ட ஒரு செயலுக்கு இடமாறுதலாகும்.

ஜட் - தனியாளின் அனுபவங்களின் பொதுமையாக்கம் செய்யப்படுவதால் கற்றல் இடமாற்றம் நிகழும்.

குரோன்பார்க் - யாதேனுமொரு சந்தர்ப்பத்தில் பெற்ற கற்றல் பின்னணியை மற்ற சந்தர்ப்பமொன்ருக்கு பொருத்தியமைத்துக் கொள்ளலாம்.

கற்றலில் உள்ள இடமாற்றம் பற்றி உளப்பயிற்சிக் கொள்கை, ஒத்த மூலக் கொள்கை, கெஸ்ட்ராட்டின் பொதுமைக் கொள்கை என்பன எடுத்துரைக்கின்றன. இந்த வகையில் கற்றலிலுள்ள இடமாற்றம் முழுவதையும் உளப்பயிற்சிக் கொள்கை மற்றும் ஒத்த மூலக்கொள்கை ஆகிய இரண்டும் முழுமையாக விளக்கவில்லை என பொதுமைக் கொள்கை எடுத்துறைக்கின்றது. இதனை கீழே விரிவாக நோக்குவோம்.

கல்வியால் பெறப்படும் அறிவை விட அதன் மூலம் பெறப்படும் உளப்பயிற்சியே முக்கியமென்றும் கல்வி என்பது ஒருவகையான உளப்பயிற்சியே என்றும் உளப்பயிற்சிக் கொள்கை குறிப்பிடுகிறது. பேற்றி உளவியல் எனும் ஒரு பழைய கொள்கையின் அடிப்படையிலே இக்கருத்து எழுந்தது. இதன்படி மனித உள்ளம் ஞாபகம், தீர்ப்பளித்தல், தர்க்கித்தல், அவதானித்தல் போன்ற தனித்தனி ஆற்றல்களைக் கொண்டுள்ளது என்றும் ஒவ்வொனறையும் சில பயிற்சிகளினால் விருத்தி செய்யமுடியும் என்றும் கருதப்பட்டது. உதாரணமாக பாடங்களை மனனம் செய்வதன் மூலம் ஞாபக சக்தியையும் பரிசோதனை ஆய்வுகளை அவதானிப்பதன் மூலம் வாழ்க்கைப் பிரச்சினைகளை நுணுகி நோக்கும் திறனையும் வளர்கக முடியும் எனப்படுகிறது.

பொதுவான பயிற்சிகளை போதிளவு அளிக்க முடியாது என்பதாலும் இன்று பல  சிறப்பான திறன்கள் வேண்டியிருப்பதாலும் இக் கொள்கைக்கு ஆதரவு அளிக்கப்படாது கைவிடப்பட்டது. எனினும் கேத்திர கணிதம், இலக்கணம் போன்ற பாடங்களை இக் கொள்கையின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறது.

கவனம், தர்க்கம், ஞாபகம் ஆகியன தனித்தனியானவை அல்ல என்றும் அவை முழுமையான உளத்தொழிற்பாட்டுடன் தொடர்புடைய கூறுகள் என்றும் கருத்து வெளியாகி ஒத்த மூலக் கொள்கை வெளியிடப்பட்டது. அதனை தோண்டைக் வெளியிட்டார். கற்கும் செயலுக்கும் இடமாற்றம் நிகழும் செயலுக்குமுள்ள முறைகள், அமைப்பு, விடயப்பபரப்பு, ஆகிய மூலகங்களின் ஒற்றுமையை பொறுத்தே இடமாற்றத்தின் தன்மை இருக்கும் என்பது இவரின் கொள்கையாகும். அதாவது எண்கணிதத்தில் கூட்டலும் பெருக்கலும் ஒத்த தன்மை கொண்டமையால் கூட்டப்பழகிய பிள்ளை பெருக்களிலும் திறனைக் காட்டுவான் என்பது இவருடைய கருத்தாகும். மடம், குடம் ஆகிய சொற்களை வாசிக்கப் பழகிய பிள்ளை படம், வடம் ஆகிய சொற்களை இலகுவில் வாசிக்கலாம் என்பது இக்கொள்கையின் அடிப்படையிலே உள்ளது.

ஒத்த மூலக் கொள்கையானது சில காலங்களின் பின்னர் திருத்தியமைக்கப்பட்டது. அந்தவகையில், ஒத்த மூலகங்களுக்கு பதிலாக ஒத்த தொழிற்பாடுகளே இடமாற்றத்துக்கு காரணமென்று வூட்வேத் என்பவர் கருத்து வெளியிட்டுமூலகங்கள்என்பதற்கு பதிலாககூறுகள்எனும் சொல்லை பிரயோகித்து இக் கொள்ளையை திருத்தியமைத்தார் எனலாம். ஒரு சூழ்நிலையில் கற்கப்பட்ட செய்கை முறைகள், ஒழுங்குமுறைகள், மனப்பான்மைகள், கணித்தல் முறைகள் வேறு சூழ்நிலையிலும் இடமாற்றம் பெறுகின்றன என்பது இவருடைய கருத்தாகும்.

ஒரு வகையான சொற்களை மனனம் செய்வது இன்னொரு வகையான சொற்களை மனனம் செய்ய உதவியாக இருக்குமா என்பதை அறிய பின்வரும் பரிசோதனை செய்யப்பட்டது.

 

A.,B ஆகிய இரு தொகுதிகளை எடுத்து A என்னும் தொகுதியினருக்கு அட்டவணைகள், சொற்கள், கவிதைகள் போன்றவற்றைக் கொடுத்து மனனமிடுமாறு சில நாட்கள் பயிற்சியளிக்க வேண்டும்B தொகுதிக்கு இப்பயிற்சி இல்லை. பயிற்சிக் காலத்தின் பின் இரு தொகுதியினருக்கும் ஞாபகத்தை அளவிடும் இன்னொரு சோதனையை கொடுக்க வேண்டும். கற்றலில் இடமாற்றம் ஏற்பட்டிருந்தால் A தொகுதியினர் B  தொகுதியை விட அதிக புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஞாபகத்திறனிலும் நியாயிக்கும் திறனிலும் குறிப்பிடத்தக்க அளவு இடமாற்றம் கிடைக்கவில்லை. இதனால் இவ் ஒத்த மூலக் கொள்கை கைவிடப்பட்டது.

பொதுமைக் கொள்கையை முதன் முதலில் வெளியிட்டவர் ஜட்Judd>1968) ஆவார். ஒருவர் கற்ற யாதேனுமொன்றைப் பொதுமையாக்கம் செய்த அளவின்படி கற்றல் இடமாற்றம் இடம்பெறலாம் என அவர் கூறுகிறார். அதாவது ஒரு செயலில் பொதுமைக் கருத்துக்களையும் தொடர்புகளையும் விளங்கிக் கொள்பவனால் வேறொரு செயலிலும் தான் பெற்ற பயிற்சியை இடமாற்றும் பரந்த ஒரு திறனைப் பெறுவான் எனக் கூறுகின்றார்.

கெஸ்ட்ரால்ட் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பொதுமைக் கொள்கை, “ஒரு சூழ்நிலையிலுள்ள பரந்த கோட்பாடுகள், கருத்துக்கள், பொருள், திறன்கள், தொடர்புகள் ஆகியன வேறு சூழ்நிலையில் இடமாற்றம் பெறுகின்றன எனக் கூறுகின்றது. மேலே கூறப்பட்ட ஒத்த மூலக் கொள்கையும் உளப்பயிற்சிக் கொள்கையும் கற்றலில் இடமாற்றம் பற்றி முழுமையாக விளக்கவில்லை என்று பொதுமைக் கொள்கை குறிப்பிடுகிறது.

வெறும் திறன்களும் பழக்கங்களும் மனப்பான்மைகளும் நேரடியாக இடமாற்றம் ஏற்பட வழிவகுக்காது. இவை புது சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டு தொடர்புபடுத்தப்பட்டாலே இடமாற்றம் ஏற்படும். என்று பொதுமைக் கொள்கை கூறுகின்றது. இங்கு உளப்பயிற்சிக் கொள்கையில் குறிப்பிட்டது போன்று விஞ்ஞானம், மொழி போன்ற பாடங்கள் அவதானிக்கும் திறனையும், கணிதம் .தருக்க சிந்தனையையும் வளர்க்கும் என்று குறிப்பிடுவது பொதுமைக் கொள்கைக்கு முற்றிலும் வேறுபட்டதாகும். அதாவது மேற்கூறிய திறன்களை புதிய சூழ்நிலைக்கு ஏற்ப பொதுமைப்படுத்துவதன் மூலமே கற்றலில் இடமாற்றம் நிகழும் என்று கூறப்படுகிறது.

பொதுமைக் கொள்கையை ஜட், “ஒரு தொட்டியின் நீரின் அடியில் உள்ள பொருளுக்கு இலக்கு வைத்து அம்புகளை எறியும் திறமையில் இடமாற்றம் உண்டாஎன அறிய மேற் கொண்ட பரிசோதனையின் ஊடாக நிரூபித்தார். அதனை பின்வருமாறு குறிப்பிடலாம்.

முதலில் 12 அங்குல ஆழத்திலுள்ள பொருள்களுக்கு சரியாக குறி வைத்து எறிவதில் சமமான திறன் கொண்ட இரு தொகுதியினரை தெரிவு செய்தார்.

இதன் போது B தொகுதியரை விட A தொகுதியினர் அதிக திறமையுடன் எறிந்ததை அவதானித்தார். இங்கு இடமாற்றம் பொதுமைக் கொள்கையின் அடிப்படையிலேயே நிகழ்ந்தது என்றும் தோண்டைக்கின் ஒத்த மூலக் கொள்கையின் படி நிகழவில்லை என்றும் நிரூபித்தார். அதாவது, பௌதிகவியலில் கற்று அகக் காட்சி பெற்ற பொதுமைக் கருத்தே இடமாற்றம் பெறுகின்றதென விளக்கினார்.

குறிப்பிட்ட நேரத்திற்கு பாடசாலைக்கு ஒழுங்காக செல்லும் பிள்ளை எதையும் குறிப்பிட்ட நேரத்திற்கே செய்யும் எனக் கூறமுடியாது. நேர ஒழுங்கு பற்றிய பொதுவான மனப்பான்மையைப் பெறுவதாலேயே எதையும் நேர ஒழுங்குடன் செய்யும் திறன் பெறுவான் என்றே பொதுமைக் கொள்கை குறிப்பிடுகிறது. மேலும், கற்கப்படும் விடயங்களில் மாணவர் ஒழுங்கமைப்பையும் உட்பொருளையும் அகக்காட்சியும் பெறவேண்டும் என்றும் பொதுமைக் கொள்கை குறிப்பிடுகிறது.

ஜட் போன்ற பல்வேறு அறிஞர்களும் பல பரிசோதனைகளை மேற்கொண்டு நிரூபித்துள்ளனர். அந்தவகையில்,

வூட்டோ என்பவர் திகதிகள், கவிதைகள், எண்கள், சொற்கள், ஆகியவற்றை கொடுத்து மனனம் செய்யும் முற்சோதனையை A, B, C ஆகிய தொகுதியினராக பிரித்து மேற்கொண்டார்.

இப்பரிசோதனை மூலம் பயிற்சியின் போது கற்ற முறைகளே, அதாவது பொதுமைக்கருத்துக்களே இடமாற்றம் பெற்றன என வூட்ரே நிரூபித்தார்.

ஜோன்ஸ்ட்ரன் என்பவர், கேத்திர கணிதம் கற்பதனால் சட்டம், விஞ்ஞானம், அளவையியல், துப்பறிதல் ஆகியவற்றில் தர்கக சிந்தனை கிடைக்கின்றதா என்பதை பின்வரும் பரிசோதனை மூலம் ஆராய்ந்தார்.

சமமான புள்ளிகளைப் பெற்ற சம வயதும் சம நுண்மதியும் கொண்டவர்களை A, B,C என மூன்று தொகுதிகளாக பிரித்து இப்பரிசோதனை மேற்கொண்டார்.

 A, கட்டுப்படுத்திய தொகுதியாகவும் B,Cபரிசோதனைத் தொகுதியாகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. பயிற்சிக் காலத்தில் ; B தொகுதிக்கு கேத்திர கணிதத்ததை மரபு வழியான முறையில் தேற்றங்களை  மனனஞ் செய்து பிரயோகித்து கற்பித்தார்C தொகுதியினருக்கு தர்க்கித்தல், உய்த்தறிதல், தொகுத்தறிதல் ஆகிய புதிய முறைகளைக் கொண்டு கேத்திர கணிதம் கற்பித்தார். இறுதியல் மூன்று தொகுதிகளுக்கும் கேத்திர கணிதம் தவிர்ந்த வேறு விடயங்களில் தர்க்கச் சிந்தனைளை அளவிடும் பிற்சோதனையை கொடுத்தார். அதில் C தொகுதியினர் அத்திறமையில் 140 வீதம் முன்னேற்றம் பெற்றுள்ளனர் எனவும் ; A, Bதொகுதியினர் ஏறக்குறைய 12 வீதம் முன்னேற்றமே கண்டனர். இவ்வாறு பொதுமைக் கருத்தை நிரூபிக்கிறார் எனலாம். மேலும் ரூடிகர் என்பவரும் விழுமியங்கள் எவ்வாறு இடமாற்றம் பெறுகின்றன  என்ற ஆய்வின் மூலம் நிரூபித்தார்.

ஆகவே இவர்கள் தங்களின் பொதுமைக் கருத்தை மேற்கூறிய பல பரிசோதனைகளின் ஊடாக நிரூபிக்கின்றமையானது ஒத்த மூலக் கொள்கையும் உளப்பயிற்சிக் கொள்கையும் கற்றலில் இடமாற்றம் முழுமையாக இடம்பெறவில்லை என்பதையே குறிப்பிடுகிறது எனலாம். பொதுமைக் கொள்கையானது கற்றலில் இடமாற்றம் தொடர்பாக முழுமையான கருத்துக்களை முன்வைக்கிறது. இது கல்வியில் முக்கியமான கொள்கையாகவும் உள்ளது. இந்தவகையில் ஆசிரியர் கற்பிக்கும் விடயங்கள் பொருள் நிறைந்ததாகவும் பொதுமைக் கருத்துக்களைக் கொண்டதாகவும் அமைய வேண்டும். எனக் கூறப்படுகிறது. ஆசிரியர் தங்களது பணிகளை ஆற்றுவதற்கு கற்றலில் இடமாற்றம் எனும் எண்ணக்கரு பெரிதும் பயன்படும். அதனை ஏற்படுத்த ஆசிரியர் பின்வருமாறு செயற்படலாம்.

  • மேற்குறிப்பிட்ட கோட்பாட்டு ரீதியான விளக்கத்தைப் பெற்று பிள்ளையிடத்தே கற்றல் இடமாற்றம் ஏற்படும் விதத்தில் கற்பித்தல்.
  • வகுப்பறையில் பெறும் கற்றல் தமது பிற்கால வாழ்க்கையில் உண்மையான அனுபவங்களுக்கு இடமாறுகின்றமையை விளங்கி அதற்குத் தேவையான இலட்சிய முன்மாதிரியை முன்வைத்தல்.
  • தேவையான சந்தர்ப்பங்களில் கற்றல் இடமாற்றத்திற்குரிய நடத்தைகளை இசைவுபடுத்தல்.
  • மாணவனின் தொழிற்பாடானது வெறுமனே செவிமடுத்தலில் இருந்து உருவாக்குவதை தவிர்த்து பொதுமையாக்கம் செய்தல், பொருளுள்ள தன்மை, கிரகித்தல் ஆகியவற்றின்பால் வழிப்படுத்தல்.
  • மாணவரிடத்தே முறைமையான அளவுரீதியான பண்பு ரீதியான அடைவை ஏற்படுத்துவதற்காக பாட உள்ளடக்கத்தை தெரிவு செய்து கற்பித்தல்.


உசாத்துணைகள்

 1. கலாநிதி அருள்மொழி.செ,(2017), “கற்பித்தலுக்கான உளவியல்”, துர்க்கா பிரின்டர்ஸ், கொக்குவில்.

2.  முத்துலிங்கம்.,(2010), “கல்வியும் உளவியலும்”, சேமமடு பதிப்பகம்

3.  கல்வி உளவியல் தொகுதி ii “கொள்கைகளும், பிரயோகமும் ஆசிரியரும்”, கல்வி பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.

4. கல்வி உளவியல் கற்றலும் கற்றல் செயன் முறையும்,(2019), மானில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், கேரளம்.

 -RASIMA,BF (BA-R)

EASTERN UNIVERSITY SRILANKA. 

Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.