தற்காலத்தில் தீர்க்கப்பட வேண்டிய இலவசக் கல்வியிலுள்ள தடைகளுக்கான தீர்வுகள்.
ஒருவர் இந்த உலகில் பெறுகின்ற அறிவு, ஆற்றல், அனுபவம் என்பவற்றின் தொகுப்பே கல்வி ஆகும். கல்வி தான் ஒரு மனிதனின் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை வெளிக்காட்டும் ஊடகமாகவும், கருவியாகவும் அமைகின்றது. “இவ்வுலகை மாற்றக்கூடிய சக்திமிக்க ஆயுதம் கல்வியே” என தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன்மண்டேலா கூறியுள்ளார். அவருடைய இக்கருத்திற்கு ஏற்ப உலகமக்கள் அனைவரும் தங்களின் நாட்டு விதியினை கல்வியின் மூலமே மாற்ற முடியும்.
இவ்விதியிற்கு இணங்கதான் உலகநாடுகளில் சில, இலவசக்கல்வியினைமாணவர்களிற்கு வழங்குகின்றன. அந்தவகையில்தான் இலவசக்கல்வி என்பது “ஒவ்n;வாரு பிள்ளையும் இன, மத, மொழி, நிற மற்றும் ஏழை, பணக்கார வித்தியாசமோ, பாகுபாடோ இன்றி தனது கல்வி கற்கும் வயதெல்லையில் கட்டாயமாகக் கல்வியைக் கற்க வேண்டும் என்ற கோட்பாடாகும். இந்த இலவசக் கல்வியானது உலகின் சில நாடுகளிலேயே நடைமுறையிலுள்ளது.
இந்த வகையில் தென்கிழக்காசிய நாடுகளில் எழுத வாசிக்கத் தெரிந்த மக்களின் எண்ணிக்கை வீதம் கூடியதாக விளங்கும் நாடு இலங்கை என கடந்த நூற்றாண்டு முதல் பேசப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் இலங்கையின் சனத்தொகையில் 92வீதமானோர் எழுத்தறிவு உடையவர்களாவர். இது 03ம் உலக நாடு ஒன்றிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை விட அதிகமாகும். இம்மகத்தான பெருமை இலங்கைக்கு கிடைப்பதற்குக் காரணம் இங்கு நடைமுறையிலிருக்கும் இலவசக் கல்வி ஆகும். இது அனைவரும் அறிந்த விடயமே.
1936ம் ஆண்டுமுதல் 1947ம் ஆண்டு வரையிலான சுதந்திரத்திற்கு முற்பட்டகாலத்தில் இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட கலாநிதி CWW. கன்னங்கரா அவர்களால் இலவசக்கல்வித் திட்டம் அமுல்படுத்தப்பட்டு கல்வியில் பொதுவுடமையும் சமவாய்ப்பும் வளர்ந்தது. அதன் காரணமாகவே எழுதவாசிக்கத்தெரிந்த மக்கள் அதிகமாக வாழும் நாடென்ற பெருமை இலங்கைக்கு கிட்டியது. இதனடிப்படையில் ஆரம்பக்கல்வி தொட்டு பல்கலைக்கழகக் கல்வி வரை எமது நாட்டில் இலவசப்படுத்தப்பட்டுள்ளமை பெரும் வரப்பிரசாதமாகவே காணப்படுகிறது. இருப்பினும் இத்தகைய இலவசக்கல்வியில் இன்று எண்ணற்ற தடைகள் காணப்படுகின்றன. அவற்றைத் தீர்த்து உரிய முறையில் அதன் நோக்கத்தை அடைவது கற்ற சமூகத்தினது கடமையாகும்.
அதனடிப்படையில் இலவசக்கல்வியில் இன்று எண்ணற்ற தடைகள் காணப்படுகின்றது. அதில் மிகவும் முக்கியமானது கல்வியை வியாபாரமாகக் கொண்டு நடாத்தலாகும். இது இலவசக்கல்வியின் நோக்கத்தை பிழையானதாக வெளிக்காட்டுகின்றது. அதாவது பிள்ளைகளை பாடசாலைகளில் இணைக்கும் போது சில அதிபர்கள் பெற்றோரிடம் பணம் அறவிடுகின்றனர். அது மாத்திரமல்லாது சில ஆசிரியர்கள் தமது பணியினை பாடசாலையில் பகுதிநேரத் தொழிலாகச் செய்து தனியார் வகுப்பில் பணம் அறவிடுதலைச் செய்கின்றனர்.
அதேபோன்றுதான்
இலவசக்கல்வியிலுள்ள ஏனைய தடைகளாக பணம் வாங்கிக்கொண்டு,
அரச சார்பற்ற நிறுவனங்கள் பட்டத்தை வழங்கல், நகர்ப்புற பாடசாலைகளில் உளள் வளங்கள், நிர்வாகக் கட்டமைபப்பு, கற்பித்தற் செயற்பாடுகளில் உயர்தரம் போன்றன கிராமப்புற பாடசாலைகளில் இல்லாமை, மாணவர்களின் உளவியலைப் புரிந்து ஆசிரியர் செயற்படாமை, போன்ற எண்ணற்ற தடைகளைக் குறிப்பிட முடியும். இவைகளுக்கான தீர்வுகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்.
இவ் இலவசக்கல்வியை வியாபாரமாக மாற்றுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். இக் குற்றங்களுக்கான சட்டங்கள் இருந்தாலும் அவை வலுவானதாக இல்லாது தேவைகN;கற்ப வளைந்து செல்லக் கூடியதாக உள்ளது. இந்நிலைமாறி குற்றம் இழைத்தவர்கள் தண்டனை பெறக்கூடிய ஆணித்தரமான சட்டங்களை நிறுவ வேண்டும். அத்தோடு சில ஆசிரியர்கள் இக்குற்றங்களில் மாட்டிக்கொண்டாலும் தங்களின் அரசியல் பலத்தினைப்பயன்படுத்திக் கொண்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். இவ்வாறான ஆசிரியர்களுக்கு எதிராக சிபாரிசு முறையற்ற நடவடிக்iககள் மேற்கொள்ளல் வேண்டும்.
அதே போன்று பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் பெற்றோர் பாடசாலை மட்டத்தில் பாடஅலகுகள் உரிய நேரத்தில் நிறைவடைகின்றனவா? பிள்ளைகளின் அடைவு எந்நிலையிலுள்ளது? அவர்களுடைய ஆசிரியர்களின் கற்பித்தற் செயற்பாடு எந்நிலையிலுள்ளது? போன்ற விபரங்களைப் பெறுவது அவர்களது பொறுப்பாகும். இவ்வாறு பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் கல்வியில் பூரண கவனத்தைச் செலுத்தும்போதுதான் அப்பிள்ளைகளும் கல்வியை ஆர்வத்துடனும் பொறுப்புடனும் கற்கும் இதன்போது இலவசக்கல்வியும். சிறந்த முறையில் மாணவர்களிடம் சென்றடையும் நிலை ஏற்படும்.
அரசாங்கமானது தனியார் வகுப்பு (டியூசன்) தொடர்பாக உரிய நடவடிக்கையை எடுத்தல்வேண்டும். தற்பொழுது இலவசக்கல்வியை மிஞ்சி தனியார் வகுப்பே மாணவர்களின் கல்விச் செயற்பாட்டில் முதன்மை நிலையில் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. தனியார் வகுப்பு தற்காலத்தில் முற்று முழுதாகத் தேவையில்லை எனக்கூறமுடியாது. அவை பாடசாலையின் கற்பித்தற் செயற்பாட்டிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதாகவே அமைய வேண்டுமே தவிர பாடசாலைக்கல்விச் செயற்பாடு முற்றுமுழுதாக நடைபெறும் இடமாக இருக்கக்கூடாது. இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றால் அவை அரசாங்கத்தினால் மட்டுப்படுத்தப்பட வேண்டும் அப்N;பாதுதான் இலவசக்கல்வி என்பது முற்றுமுழுதான இலவசக்கல்வியாக இருப்பது நடைமுறையில் சாத்தியமாகும்.
அதே போன்று சில பாடசாலைகளின் அதிபர்கள் பணத்திற்காக மாத்திரம் பணிபுரிகின்றனர். அத்தோடு தன்னுடைய பிள்ளைகள், தனக்குத் தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிள்ளைகள் தான் பணிபுரியும் பாடசாலைகளில் கல்வி கற்கின்ற போது அவர்களுக்கு சாதகமாகவும் பாரபட்சமாகவும் தன்னுடைய செயற்பாட்டை அமைத்துக் n;காள்கின்றனர். இவ்வாறானவர்களின் குற்றங்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு இடமாற்றம், பணிநீக்கம், சிறைத்தண்டனை என்பன வழங்கப்பட வேண்டும். இவ்வாறான செயற்பாட்டை உறுதியாகக் கடைப்பிடிப்பதன் மூலம்தான் ஏனைய அதிபர்கள் இச்செயலிலிருந்து நீங்கி இருப்பர்.
மேலும், அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்பித்தற் தொழிலின் புனிதத்துவம் பற்றிய விழிப்புணர்வுகளை அதிகம் நடாத்துதல் வேண்டும். இதனூடாக கல்வியின் மகிமையை இவ்விரு சாராரும் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தன்னுடைய பணியினை அமைத்துக் n;காள்வர். அதேபோன்றுதான் பாடசாலைக்கு இலவசமாக வழங்கப்படும் பொருட்களை மாணவர்களுக்கு சிறந்த முறையில் உபயோகப்படுத்த வழிசெய்தல் வேண்டும். அப்போதுதான் மாணவர்களும் இலவசக்கல்வியில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பர்.
இந்த வகையில் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள இலவசக்கல்வியின் கற்றல் கற்பித்தற் செயற்பாடுகள் சிறந்த முறையில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் அனைவரும் அதிலுள்ள தடையை இணங்கான முடியும். அத்தடைகளை இணங்கண்டு அதற்குரிய தீர்வுகளை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே அனைவரும் இலவசக் கல்வியின் பயனை முழுதாக அடைந்து அது உருவாக்கப்பட்ட நோக்கத்தினையும் நிறைவு செய்ய முடியும்.
அ.பா. ஹாழிறா,
02ம் வருடம், கல்வியியல் சிறப்புக்கற்கை,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.
Comments
Post a Comment