கல்வியும் நவீனமயமாக்கலும்

நவீனமயமாதல் அல்லது நவீன மயமாக்கல் என்பது மாற்றம் என்பதோடு தொடர்பு கொண்டது. மக்கள் நவீன வாழ்க்கை முறைகளையும் மதிப்புகளையும் பின்பற்றும் செயல்பாடுதான் நவீனமயமாதல் ஆகும். மேலும் நவீனமயமாதல் என்பது, ஒரு சமூகம், அறிவியல், தொழில்நுட்பம், பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்றும் வேறு வகையில் கூறமுடியும்.

இந்த நவீனமயமாதலினால் கல்வியில் ஏற்பட்டுள்ள தாக்கங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

  •  மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் எண்ணங்களையும் உயர்த்தும் ஓர் ஊடகமாக விளங்குதல். 
  •  நவீனமயமாதலானது கல்வியின் குறிக்கோளையும் தற்காலத்திற்கு ஏற்றவாறு நவீன கலை திட்டத்தையும் பள்ளி-கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் புகுத்தி மாணவர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்க காரணமாக உள்ளது
  •  கல்வியானது இன்று ஏற்றத்தாழ்வுகளை கடந்து அனைவருக்கும் கல்வி நிலை உருவாக காரணமாக உள்ளது.
  •  மாணவர்கள் தானே கற்றல்  அல்லதுசுயகற்றல் முறைகளுக்கு வழிவகை செய்கின்றது.

கல்வியறிவு அதிகரிக்க நவீனமயமாக்கல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதாவது இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் இன்றி எந்த ஒருவிடயமும் இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது. இதனாலேயே பல புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இவ்வாறு நவீனமயமாக்கமானது, சமூகங்களுக்கு இடையிலான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும். அறிவினை முகாமைத்துவம் செய்யவும். சமூகசேவைகளை ஏற்படுத்திக் கொள்ளவும். சமூகத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும். போட்டி நிறைந்த இவ்வுலகில் சவால்களை   எதிர்கொள்ளுதல் போன்றவை நவீனமயமாக்கல் ஊடாக விரைவாகவும் இலகுவாகவும் இடம் பெறுகின்றன எனலாம்.


இன்றைய உலகில் கல்வியில் ஏற்பட்டுள்ள நவீனமயமாக்கலானது எமது கற்பனைக்கு கூட எட்ட முடியாத அளவு உயர்ந்துள்ளது. உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இணையம், தொலைத்தொடர்பு சாதனங்கள், டிஜிட்டல் முறையான கற்றல் உபகரணங்கள், போன்ற பல்வேறு பரிணாமங்களில் வளர்ச்சிகளை கொண்டுள்ளது. இவை கல்வியினை நவீனமயமாக்கியுள்ளன. 


இத்தகைய நவீனமயமாக்கலானது தனி மனிதர்களின் வாழ்க்கையை முற்றாகவே மாற்றியமைக்கும் தொழில் கருத்துரு ஆகும். கல்வியில் அதிகமாக செல்வாக்கு செலுத்துகிறது இன்று பெரும்பாலான கல்வி நடவடிக்கைகளில் நவீனமயமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

கல்வி முன்னேற்றத்தில் டிஜிட்டல் மயப்படுத்தல் என்ற செயல்முறையானது மூன்று படித்தரங்களை கொண்டது. அந்த வகையில்,

  1. முதலாவது படித்தரம்  VCR, தொலைக்காட்சிகள் போன்ற ஓடியோ வீடியோ கருவிகள், CD-ROM குறைந்த வேக இணைய தொடர்புகள், கணினி விகிதத்திற்கு அதிகமான மாணவர் மற்றும் தேவையான தகவல் தொழில்,நுட்ப திறன் கொண்ட இரண்டு ஆசிரியர்கள் போன்ற

 2. இரண்டாவது படித்தரம் மல்டிமீடியா ப்ரொஜெக்டர், அதிவேக இணைய தொடர்புகள், கணினி விகிதத்திற்கு குறைந்த மாணவர் போன்ற மிகவும் முன்னேற்றகரமான கருவிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவு கொண்ட போதிய ஆசிரியர்கள் எனவும்

 3 மூன்றாவது படித்தரம் ஆசிரியர் முன்னெடுப்பு கல்வி அல்லாது மாணவர் வழிநடாத்தும் கல்வியாகவும்

இம்மூன்று படித்தரங்களும் காணப்படுகின்றன. இவ்வாறான டிஜிட்டல் படித்தரங்கள் இலங்கை கல்வி முறையில் குறைந்தளவாகவே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

கல்வியில் ஏற்பட்டுள்ள நவீனமயமாக்கலினால் அதாவது தொழில்நுட்ப இலத்திரனியல் ரீதியாக ஏற்பட்டுள்ள நவீன மாற்றமானது மாணவர்களுக்கு பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது. அதாவது சர்வதேச ரீதியில் மாணவர்கள் அறிவை பெற்றுக் கொள்வதற்காகவும், தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும், கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கவும், பயன்படுத்தவும் யூடியூப்,  கூகுள், போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர், இதன் மூலம் அவர்களது அறிவு விரிவடைகின்றது. இதன் மூலம் பல்வேறு விடயங்களை அவர்களால் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் கல்வியின் மூலம் தமது வாழ்க்கை மற்றும் சமூகத்திற்கு தேவையான உள்ளீடுகளை பெற்றுக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. 


இன்று பெரும்பாலான கல்வி நடவடிக்கைகளில் நவீனமயமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை காணமுடிகின்றது. உதாரணமாக இலங்கையில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்கப்படுதல், ப்ரொஜெக்டர் பாவித்தல், நவீன விஞ்ஞான ஆய்வுகூடங்கள், புதிய தொழில்நுட்பம் சார்ந்த பாடங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம். இன்று கல்வியில் பல புதிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில், "டிஜிட்டல் லங்கா" எனும் செயல் திட்டம் மூலம் கல்வி கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உயர்தர மாணவர்களுக்கு டெப் வழங்கும் செயல்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவை நவீனமயமாக்கலினால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் ஆகும். 

அறிவியல் தொழில்நுட்பம் ரீதியாக கல்வியில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றமே கல்வி நவீனமயமாக்கமாகும். இவ்வாறான நவீனமயமாக்கல் இடம்பெற்றாதிருந்தால், தற்காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், இணைய வழி கல்வி சாத்தியமற்றதாகவே அமைந்திருக்கும். அதாவது தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் உலகில் உள்ள அனைத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என்பன மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இணைய வழி ஊடாக கல்வி வழங்கப்படுகிறது. உதாரணமாக கூகுள் மீட், ஜும், என்பவற்றினூடாக மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே கல்வியினை கற்றுக்கொள்கின்றனர். அடுத்ததாக தேர்வுகளுக்கும் சந்தேகங்களுக்கும் வாட்ஸ் அப் பயன்படுகிறது. இலங்கையில் மீட் எனும் ஒரு செயலி இணையக் கல்விக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளைமை குறிப்பிடத்தக்கதாகும், இதனால் முழுமையான தேர்ச்சி பெறாவிட்டாலும் ஓரளவேனும் மாணவர்கள் தங்களுக்குரிய தேர்ச்சிகளை அடைந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட இணைய வழி கல்வி ஊடாக பல்வேறு கற்கை நெறிகள் தற்போது வவழங்கப்படுகின்றன. கற்கை நெறிகளில் சிலவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதோடு பல கற்கை நெறிகள் கட்டணம் செலுத்தியும் பெறக்கூடியதாக காணப்படுகின்றது. இவற்றுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன . உதாரணமாக கல்வி அமைச்சு, திறந்த பல்கலைக்கழகம் போன்றவை பல்வேறு கற்கைநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. 

எனவே மேற்கூறியவாறு நவீனமயமாக்கல் பல்வேறு மாற்றங்களை கல்வியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய நவீனமயமாக்கலானது, கல்வியில் எதிர்காலத்தில் இன்னும் பல்வேறு விடயங்களை மாற்றத்துக்கு உட்படுத்தி தற்போதுள்ள கல்வி முறையினை மாற்றும் என்றும் கூறலாம். 
-RASIMA,BF (BA-R)
EASTERN UNIVERSITY, SRILANKA.

Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]