கல்வியும் பொருளாதார அபிவிருத்தியும்

"அபிவிருத்தி என்பது உலக மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது ஆகும்" முதலாம் அபிவிருத்தி தசாப்தம் 1961 - 1970 ஐக்கிய நாடுகள் அமையம்

 "குறிப்பிட்ட ஒரு நாட்டின் வறுமை, வருமான ஏற்றத்தாழ்வுகள், வேலையின்மை போன்ற துறைகளை உயர்ந்த மட்டத்தில் இருந்து தாழ்ந்த மட்டத்திற்கு கொண்டு வருதல் அபிவிருத்தியாகும்" டட்லி சியர்ஸ் 1972


மேலே கூறப்பட்ட வரைவிலக்கணங்களுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய விடயங்களில் பொருளாதாரம் முக்கியமானதொன்றாகும். இந்த வகையில் பொருளாதார அபிவிருத்தியில் கல்வியானது மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது.

 

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் பிரதான காரணியாக கல்வி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறே கல்வி அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணியாக பொருளாதாரம் உள்ளைமயும் குறிப்பிடத்தக்கதாகும். சனத்தொகை அதிகமானாலும் கல்வி அவர்களுக்கு வழங்குவதற்கு அதிக செலவை ஏற்படுத்தினாலும் கற்றலினால் பொருளாதார அபிவிருத்திக்கு பங்காற்ற முடியும் என்பதன் அடிப்படையலே Learning to do எனும் கல்வி சித்தாந்தம் சேர்க்கப்பட்டுள்ளது. 


பொருளாதார அபிவிருத்தியில் கல்வி தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதன் கருத்தானது, கல்வியானது பொருளாதார அபிவிருத்தியை பின்தொடர்ந்து செல்கின்றது. கல்வி முன்னேற்றம் அடைவதற்கு ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மிக முக்கியமானதாகும். நாட்டில் ஏற்படும் பொருளாதார அபிவிருத்திக்கேட்ப கல்விக்கான செலவீனங்கள், அதாவது வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு ஒதுக்கப்படக் கூடிய நிதியினை அதிகரிக்க வேண்டும். எனவே கல்வி அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமாயின் அங்கு பொருளாதாரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனலாம்.

பொருளாதாரம் அபிவிருத்தி அடையும் போது அங்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். அதற்காக சிறந்த அறிவு, திறன், மனப்பாங்கு உள்ள மனிதவளம் தேவைப்படும் எனவே பொருத்தமான தேர்ச்சி உடைய மனித வளத்தினை உருவாக்குவதற்கு கல்வியானது சிறந்த முறையில் வழங்கப்பட வேண்டும். உதாரணமாக ஒரு பாடசாலையில் சூழலில் உள்ள சமூகத்தின் பொருளாதார நிலை அதிகரிப்பானது பாடசாலை முன்னேற்றத்திற்கு உதவியுள்ளமையை அவதானிக்கலாம். அத்தோடு பாடசாலை வேலைகளை சிறப்பாக நடாத்தி செல்வதிலும் சமூகத்தின் பொருளாதார நிலை தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதனை இன்று பாடசாலைகள் பிரதிபலிக்கின்றன. 


பொருளாதார அபிவிருத்திக்கு கல்வியானது பின்வரும் வழிகளில் உதவுகிறது


  • கல்வியை திட்டமிடும்போது பொருளாதார, சமூக விஞ்ஞான, வரலாற்று நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்படல் - தற்போதுள்ள கல்விதொழிலை நோக்கமாக கொண்டது. அதாவது பல்கலைக்கழகம் முடித்து தான் ஒரு வைத்திய,ன் கணக்காளன், ஆசிரியராகவோ வரவேண்டும் என்பதற்காக கல்வியினை கற்கின்றனர் இதன் காரணமாக கல்வியில் உள்ள பாடத்திட்டம் ஆனது தொழிலை பெறுவதற்குரிய பாடங்களைக்  கொண்டதாக அமைய வேண்டும் என்பதனால் மேற்குறிப்பிட்ட நிபுணர்களின் ஆலோசனை பெறப்பட வேண்டும். 
  • பொருளாதார உற்பத்திக்கு நன்கு கல்வி கற்ற இளம் சந்ததியினர் பயன்படுத்தப்படல்- பொருளாதாரத்தில் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட இளைஞர்கள் தேவைப்படுவர். அதாவது தற்போதுள்ள தொழில்களில், தொழில்நுட்பம் சார்ந்த ,கணணி சார்ந்த விடயங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நன்கு கல்வி கற்ற இளைஞர்கள் பொருளாதார உற்பத்திகளில் ஈடுபடும் போதே அங்கு சிறந்த உற்பத்திப் பொருள் உருவாக்கப்படும் எனலாம். 

  • உள்நாட்டு பொருட்களை வாங்கும் மனோநிலை ஏற்படுத்தப்படல்- உள்நாட்டில் உற்பத்தி செய்யும்  பொருட்கள் தரமற்றவை என்று கருதும் நிலை உள்ளது இதனை கல்வியின் ஊடாகவே மாற்றலாம், இது நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும்.

  • கற்கும் போது தொழில் புரிதல் தொழில் புரியும் போது கற்றல் நிலைகள் தோன்றல், 
  • தொழிலுக்குரிய அடிப்படை அறிவு திறன் வழிகாட்டல்கள் கல்வி மூலம் வழங்கப்படல். 

கல்வியானது பொருளாதார அபிவிருத்தியில் ஒரு நுகர்வுப் பொருளாகவும் முதலீடாகவும் காணப்படுகிறது. அதாவது உற்பத்தியில் ஈடுபடுவதற்கு கல்வி அவசியம் எனவே இங்கு கல்வி ஒரு நுகர்வுப் பொருளாகவும், கல்வி மூலம் தொழில்சார் திறன்களை விருத்தி செய்ய முடியும் எனவே இங்கு கல்வி பொருளாதார அபிவிருத்திக்கு ஒரு முதலீடாகவும் உள்ளது . இன்று தென்னாசியாவிலேயே கல்விக்காக அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடாக இலங்கை காணப்படுகின்றது. இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் நான்கு வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.  இதற்குள் பல புதிய திட்டங்களும் ஒவ்வொரு வரவு-செலவுத் திட்டத்தின் போது முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில், 2020 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தினூடாக கல்விக்காக முன்வைக்கப்பட்ட பல திட்டங்களை கீழே விரிவாக நோக்குவோம். 

  • ஈ தக்ஷலா கற்றல் முறைமையினை இற்றைப்படுத்தி மாகாண கல்வி தொழில்நுட்ப கல்வி நிலையங்களை வலுப்படுத்துதல்.
  •  ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற, பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைத்தல் மற்றும் தொற்று நோய் பரவல் காலத்தில் பாடசாலை கல்வியை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சிரமங்களை எதிர்நோக்கும் பாடசாலைகளுக்கு தொலைகாட்சி வழங்குவதன் மூலம் "குருகெதர" அலைவரிசையினால் அனைத்து மாணவர்களையும் படிக்கச் செய்தல். 
  • கல்வி மறுசீரமைப்பின் கீழ் சமகால தேவைக்கேற்ப பாடத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி பரீட்சை நடைமுறைகள் மற்றும் சகல கல்வி நிறுவனங்களையும் தேசிய கல்விக் கொள்கையின் ஊடாக ஒழுங்குமுறை படுத்துவதற்கு திட்டமிடல். 
  • பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்புக்களை வெளிப்படுத்தும் அதேவேளை இளைஞர்களை கவரும் வகையிலான தொழிற்கல்விக்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதும் தொழிற்கல்வி பயிற்சி நிறுவகங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளல், பொருத்தமான நிறுவனங்களை நவீனமயப்படுத்தி" One TVET" எனும் எண்ணக் கருவின் கீழ் காணப்படும் தொழில்நுட்ப கல்லூரிகளை பட்டபடிப்புச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களாக மாற்றுதல். 
  • தொழில்நுட்ப அறிவு மற்றும் கைத்தொழில் தொழில்நுட்ப திறன்கள் ஏனைய மொழிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆற்றலுடன் கூடிய மாணவர்களை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் வழங்கல்.
  • அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்ற தொழிற்பயிற்சி கல்வி நிறுவனங்களுக்கு வருடாந்தம் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக அதிகரிப்பத்தல்.
  •  தாதி மற்றும் பராமரிப்பு சேவை தொழில் கல்வியை விரிவுபடுத்துவதற்கு தாதியர் பாடசாலையை பட்டப்படிப்பு வழங்குகின்ற கல்வி நிறுவனமாக தரம் உயர்த்துவதற் நடவடிக்கை எடுத்தல்.
  • தேசிய பல்கலைக்கழகங்களில் மருத்துவ, பொறியியல், தொழில்நுட்ப, சட்ட வர்த்தக மற்றும் வியாபார முகாமைத்துவம் போன்ற பாடநெறி அதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு தேவையான நிதி ஏற்பாடுகள் செய்யப்படல்.
  •  தொழில் வாய்ப்புக்களை விரைவாக பெற்றுக்கொள்ள முடியுமான விசேட பாட நெறிகளை இலக்காகக் கொண்ட வதிவிடம் அல்லாத நகர பல்கலைக்கழகங்களை மாவட்டத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்டவாறு கல்விக்கு அதிகம் செலவழிக்கப்படுவது இலங்கை பொருளாதாரத்தில் வருமானத்தை அதாவது உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து நாட்டின் தேசிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கல்வி பொருளாதாரத்தின் ஊடாக  விருத்தியடையும் அதே வேளை பொருளாதாரம் கலவியின் ஊடாக விருத்தியடைகிறது எனலாம்.

-RASIMA, BF (BA-R)

EASTERN UNIVERSITY, SRI LANKA.


Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]