ஆலோசனை கூறல் சேவையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஆலோசகராக செயற்படும் ஒருவருக்கு உளவியல் அறிவு மிகவும் அவசியமாகும். இதற்கான காரணங்களை குறிப்பிடுதல்.

 தனியாள் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் அனைத்து தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பங்களிலும், உரிய முறையில் அவற்றிற்கு முகங்கொடுக்கும் சக்தியை அவரிடம் கட்டியெழுப்ப உதவும் ஒரு செயல்முறையை ஆலோசனை கூறலாம். இத்தகைய ஆலோசனை கூறல் சேவையினை மேற்கொள்வோர் சாதாரணமானவர்களாக இருக்க முடியாது. அவர்கள் பல்வேறு தகுதிகளையும், பல்வேறு விடயங்கள் பற்றிய அறிவினையும் கொண்டவர்களாக காணப்பட வேண்டும். அந்த வகையில், உளவியல் அறிவு தொடர்பாக  கட்டாயம்         அறிந்திருக்க வேண்டும்.



உளவியல் அறிவு எனும்போது, மனதை ஆய்வு செய்வதையும், புரிந்து கொள்வதையும், பகுப்பாய்வு செய்வதையும் நோக்கமாகக் கொண்ட துறையே உளவியலாகும். இத்தகைய உளவியலானது, பல வகைகளைக் கொண்டது. இத்தகைய உளவியல் அறிவினை ஆலோசனை மேற்கொள்ளும் ஆலோசகர் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். இதற்கான காரணங்களை கீழே சுருக்கமாகக் குறிப்பிடலாம்.


ஆலோசனைக்காக நாடி ஆலோசகரிடம் வரும்போது, பல்வேறு பிரச்சினைகளை மனதில் வைத்துக் கொண்டு வருவார். அவ்வாறு வருகின்றவர்கள் பொருளியலாளர், வைத்தியர், மாணவர் என வித்தியாசமான தொழிலை செய்பவர்களாக காணப்படுகின்றனர். இவர்களின் மனநிலை அதாவது உளவியல் தன்மை எப்படி காணப்படும் என்பதை ஆலோசகர் அறிந்தாலே அதற்கான ஆலோசனையை இலகுவாக வழங்கக் கூடியதாக இருக்கும். 

 

உளவியல் அறிவின் ஊடாக அதாவது உளவியல் தரவின் ஊடாக ஒரு நபரின் இயல்பு, அவரது ஆளுமை பண்புகள், அவர் பிறருடன் அல்லது சூழலுடன் இடைத் தாக்கம் புரியும் தன்மை என்பவற்றை ஆலோசகர் பெற்றுக்கொள்ளக்கூடியதாக காணப்படல். உதாரணமாக, ஆசிரியர் மாணவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை இனங்காணல்.


உளவியலானது, அறிவாற்றல் உளவியல், பாதிப்பு உளவியல், நடத்தை உளவியல் என்னும் பிரிவுகளை கொண்டுள்ளது இவை பற்றிய அறிவு ஆலோசகருக்கு முக்கியமாகும்.

 

  • அறிவாற்றல் உளவியல்  - மனித மனத்தையும் அறிவைப் பெறுவதற்கும் சேமித்து வைப்பதற்கு அது பின்பற்றும் செயல்முறைகளை படிக்கிறது. கற்றல், நினைவாற்றல் மற்றும் கருத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு  மனதை பகுப்பாய்வு செய்வதே இதன் நோக்கம். இத்தகைய அறிவினை ஆலோசகர் பெற்றிருந்தால், கற்றல், நினைவு பற்றிய ஆலோசனை கூற வேண்டிய சூழலில் அது தொடர்பாக சிறந்த ஆலோசனைகளை வழங்கலாம்.

  • பாதிப்புக்குரிய உளவியல் - இது மற்றவர்களிடமிருந்து பாசத்தை பெற வேண்டியதன் அவசியத்தை பற்றியது. இதனை எல்லோரும் ஒரு கட்டத்தில் அனுபவிக்கிறார்கள். மக்களுக்கு எப்போதும் பாசம் தேவை இத்தகையவர்களுக்கு ஆலோசனை வழங்கலினை மேற்கொள்ளும் போது     பாதிப்புக்குரிய உளவியல் அறிவு அவசியமாகும்.


  • நடத்தை உளவியல் - மனித நடத்தை பற்றிய சோதனை பகுப்பாய்வாகும். இவ்வாறு மனிதனுடைய நடத்தை பற்றிய உளவியலினை அறிந்தாலே ஆலோசனை நாடியின் நடத்தையை ஆலோசகரால் புரிந்துகொள்ள முடியும்.


இவ்வாறே, அறிவியல் உளவியல், மருத்துவ உளவியல், கல்வி உளவியல், அவசர உளவியல், நுகர்வோர் உளவியல்,  வணிக உளவியல், குழந்தை உளவியல், தொழில் உளவியல் என்ற பல்வேறு பிரிவுகள் உளவியலில் உள்ளன. இவை தொடர்பாக சிறிதளவாவது ஆலோசகருக்கு தெரிந்திருத்தல் வேண்டும். அப்பொழுதே மேற்குறித்த பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை நாடி வருபவர்களுக்கு  இலகுவாக ஆலோசனை சேவையை வழங்கலாம்.


ஆலோசனை நாடிகள் இயந்திரங்கள் அல்ல மனிர்கள். அவர்கள் முழுமையாக தங்களது பிரச்சினைகளை கூற மாட்டார்கள் அவர்களின் மனதில் உள்ள பிரச்சினைகளை தெளிவாக அவர்கள் கூறும் வகையில் ஆலோசகர் அவர்களுடன் உரையாடுதல் வேண்டும். அதற்கு ஆலோசகருக்கு உளவியல் அறிவு அவசியமாகும்.


ஆலோசனை நாடியாக வருபவர்கள், குழந்தைப்பருவம், இளமைப்பருவம், வயது முதிர்வு  என்ற நிலையை கொண்டவர்களாக காணப்படுவர். இப்பருவம் பற்றிய உளவியல் அறிவு ஆலோசனை கூறுவதற்கு அவசியமாகும்.


ஆலோசனை வழங்கலானது, வழிகாட்டல் தொழிற்பாட்டை விட சிக்கலானது. என்று ஆலோசனை வழங்கலானது ஒரு விசேட வாண்மைத்துவமாக கருதப்படு கின்றது. வழிகாட்டல், ஆலோசனை வழங்கல் குறை நீக்கும் பணியில் மட்டுமே ஈடுபடுவதில்லை. இன்று ஆலோசனை வழங்கல் ஒரு விருத்தி சார் செயல்முறையாகும். இதனால் உளவியல் அறிவு ஆலோசகருக்கு முக்கியமாகும்.


உளவியல்சார் ஆலோசனை, குடும்ப ஆலோசனை, தொழில்சார் ஆலோசனை, கல்விசார் ஆலோசனை என பல பரப்புகளைக் கொண்டதாக ஆலோசனை வழங்குதல் காணப்படுகின்றது. இத்தகைய ஆலோசனைகளில் உளவியல் ஆலோசனை வழங்குவதற்கு உளவியல் அறிவானது முக்கியமாகும். அதாவது ஒருவர் தன்னைத் தான் நன்கு விளங்கிக் கொள்வதற்கும், தனது பலத்தையும் பலவீனத்தையும் புரிந்துகொள்வதற்கும், ஒருவருக்கு உதவி செய்வது உளவியல்சார் ஆலோசனையின் முக்கியதொழிற்பாடாகும்.. உதாரணமாக, இடைநிலை மாணவர்களுக்கு, ஆலோசகராகச் ஆசிரியர் செயற்படும்போது, மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல், உடலியல் மாற்றங்கள் காரணமாக தோன்றும் மனவெழுச்சி சார் மன அழுத்தம், விரக்தி என்பவற்றிற்கு ஆலோசனை வழங்குதல் வேண்டும். இதற்கு இத்தகைய உளவியல் சார் பிரச்சினைகள் பற்றிய அறிவு ஆசிரியருக்கு இருக்க வேண்டும்.


எனவே மேற்குறிப்பிட்ட காரணங்கள் ஆலோசகருக்கு உளவியல் அறிவு அவசியம் என்பதற்கான காரணங்களாகக் குறிப்பிடலாம். இந்தவகையில், உளவியல் அறிவின்றி எந்த ஒருவருக்கும் ஆலோசனை வழங்குவது சாத்தியமற்றதாகும். ஆலோசனை நாடிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் உடலியல் ரீதியான பிரச்சினைகள் அல்ல உளவியல் ரீதியானது. இத்தகைய உளவியல் ரீதியான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்ப்பதற்கு ஆலோசனை வழங்கல்  சேவையானது மிகவும் முக்கியமாகும். 


-RASIMA.BF (BA-R)

Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]