“எதிர்காலத்தில் வளங்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சாவால்களும் அதற்கான தீர்வுகளும்”
சமூகத்தில் வாழும் மனிதர்களின் தேவை அளவற்றது, பலதரப்பட்டது. அதனைப்பெற்றுக்கொள்ள பொருட்களும் சேவைகளும் அவசியம். மனிதர்களின் சகல தேவைகளையும் முற்றுமுழுவதுமாக பெற்றுக்கொள்வதற்கான அளவு பொருட்களையும் சேவைகளையும் எந்தவொரு சமூகத்தினாலும் நிறைவேற்ற முடியாது. இதற்கான காரணம் உற்பத்தி வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டமை மற்றும் வளப்பற்றாக்குறையின் காரணமாகவே பொருட்கள் சேவைகள் உற்பத்தியில் பல ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றது.
வளங்கள் என்பது புவியிலிருந்து இயற்கையாக கிடைக்கும் பயனுள்ள மூலக்கூறுகள் வளம் எனக்கூறப்படுகிறது. வளங்கள் பிரதானமாக இரண்டு வகைப்படுத்தப்படுகிறது.
1. மனித முயற்சியின்றி கிடைக்கும் வளங்கள்
2. மனித முயற்சியினால் கிடைக்கும் வளங்கள்
மனித முயற்சியின்றி கிடைக்கும் வளங்கள் என்பது மனிதனது எவ்விதமான தலையீடுகளுமின்றி கிடைக்கும் வளங்களாகும். இவ்வளங்களினை பெறுவதற்காக எவ்வித தடைகளும் காணப்படாது. இவ் வளங்களுக்கு உதாரணமாக சூரிய ஒளி காற்று மற்றும் நீர் ஆகியவற்றை குறிப்பிடலாம்.
மனித முயற்சியினால் கிடைக்கும் வளங்கள் என்பது மனிதனது அறிவு திறன் அனுபவம் என்பவற்றை பயனபடுத்தி இயற்கையிலுள்ள வளங்களை பெறுமதி மிக்க பெறுமதி மிக்க வளமாக மாற்றி பெறப்படுகின்ற வளங்களே இவையாகும். இவற்றுக்கு உதாரணமாக – கனிய வளங்களில் நிலக்கரி, பெற்றோல், மசகு எணணெய் போன்றவற்றை குறிப்பிடலாம்.
மேலும், வளங்களை வகைப்படுத்துகின்ற போது புதுப்பிக்க கூடிய வளங்கள் புதுப்பிக்க முடியாத வளங்கள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றது. புதுப்பிக்க முடியாத வளங்கள் எனும் போது கனிய வளங்கள் குறிப்பாக கூறப்படுகின்றது. குறிப்பிட்ட காலப்பகுதியில் முடிவடைந்து செல்லக்கூடியதாக இருக்கிறது. இவ்வளங்களைக் கொண்டு உற்பத்தி செயற்பாட்டில் மனிதனது தேவைகள் அதிகரித்துக் கொண்டு செல்வதனால் மனிதனது பொருளாதார, சமூக, கலாசாரம் சார்ந்த முழு அபிவிருத்தி கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் வளங்களை மையமானதாக கொண்டதாக காணப்படுவதனால் வளமானது முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது. வளங்களின்றி மனிதனில்லை என்ற வகையில் உலகம் மாறி விட்டது. அதிகரித்த சனத்தொகை பெருக்கம் மற்றும் நுகர்வு கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட மக்களின் அதிகரிப்பு என்பன வளத்தின் முக்கியத்துவத்தை வேண்டிநிற்கின்றது. இயற்கையில் கிடைக்கும் வளங்கள் மனிதனாலேயே பெறுமதி மிக்கதாக மாற்றப்படுகின்றது.
மனிதனும் வளங்களில் ஒன்றாக கருதப்படுகின்றான். மனிதன் தனது அறிவு, திறன், அனுபவம் என்பவற்றைப் பயன்படுத்தி இயற்கை வளத்தை பெறுமதிமிக்கதாக மாற்றுகின்றான். அதாவது, சுற்றாடலின் அனைத்து வளங்களும் பயனுள்ள வளங்களாக மாறுவது மனிதனது பங்களிப்பிளாகும். உலகிலுள்ள அனைத்து வளங்களிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த வளம் மனிதவளமே ஆகும். மனித வளம் நிலையானதொன்றல்ல. அது போதுமான அளவில் பண்பாட்டுடன் நாடுகளுக்கேற்ப மாற்றமடையும். பண்பாட்டுடன் மனித வளம் முன்னேற்றமடைவதுடன் நாடுகளின் அபிவிருத்திற்கு காரணமாகின்றது. அபிவிருத்திச் செயற்பாடுகளின் போது மனித வளம் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. வளங்கள் மேலுள்ள வகையில் வகைப்படுத்தப்பட்டாலும் இவ் வளங்களை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்வதில் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டி ஏற்படலாம். அந்தவகையில் எவ்வாறான சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியேற்படும் ;என்பதனை கீழ பின் வருமாறு ஆராயலாம்.
எதிர்காலத்தில் வளங்களை பெற்றுகக்கொள்வதிலுள்ள பாரிய சவாலாக இவ்வளங்களின் இருப்புத்தன்மை குறைவடைதல். அதாவது, வளப் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதனைக் குறிப்பிடலாம். புதிப்பிக்க முடியாத வளங்களானது எதிர்கால சந்தியினருக்கு கிடைக்காமல் போகக்கூடிய நிலமைகூட ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். வள இருப்புத்தன்மையினை விபரிக்கையிள் மனிதனது தேவைகள் பெருக்கல் விருத்தியில் அதிகரித்துச் செல்ல வள இருப்பு அதனை விட குறைவான மடங்கிள் குறைவடைந்து செல்வதாக குறிப்பிடுகின்றனர்.
மேலும் தேயும் கனிய எண்ணெய் படிவுகள் உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் எடுப்பதாவும் குறிப்பிடுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் வளங்களைப் பெற்றுக் கொள்வதில் மிகப் பெரிய சவாலாக வள பற்றாக்குறையைக் குறிப்பிடலாம்.
உலகில் சனத்தொகை அதிகரிப்பானது அவர்களுக்கு தேவைகள் முன்பைவிட அதிகரித்து வருவதால் ஏற்படும் அதிகளவு நூகர்வு எதிர்காலத்தில் வளங்களைப் பெற்றுக்கொள்வதில் சவால்களை தோற்றுவித்துள்ளதாக காணலாம். உதாரணமாக ஆரம்பகால தலைக்குரிய நிலத்தின் நுகர்வுக்கும் இன்றைய கால தலைக்குரிய நுகர்வுக்குமிடையில் பாரியளவான வித்தியாச தன்மைகளை குறிப்பிடலாம். உதாரணமாக இலங்கையில் குடித்தொகை அதிகரிப்பால் உள்நாட்டு உற்பத்தி அளவு போதாமையால் இறக்குமதி செய்ய வேண்டிய அளவு அதிகரித்து இருப்பதனைக் குறிப்பிடலாம்.
தற்காலத்தில் ஏற்பட்டுவரும் கைத்தொழில் மயமாக்கல், நகர மயமாக்கல் காரணமாக சூழல் மாசடைவதனால் எதிர்காலத்தில் குறிப்பிட்ட வளங்களை நாம் பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்படலாம். உதாரணமாக கைத்தொழில் சாலைகளில் வெளியிடப்படும் நச்சு வாயுகளால் எதிர்காலத்தில் சுத்தமான காற்றை முடியாத நிலையேற்படலாம். மேலும் நீர் நிலைகளில் இரசாயன கழிவுகள் கொட்டப்படுவதனால் சுத்தமான நீரினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்படுகிறது. எதிர்காலங்களில் வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகளவான செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலையேற்படலாம். வளங்கள் பற்றாக்குறையேற்படுவதனால் வளங்களுக்கான கேள்வி அதிகரித்து அதிகளவான விலையில் பெற வேண்டிய நிலையேற்படலாம். உதாரணமாக, தற்காலத்திலும் கூட சீனா போன்ற கைத்தொழில் மயமான நாடுகளில் ஒட்சிசன் பைகளுக்கு அதிக கிராக்கி நிலவுவதை காணலாம்.
உலகில் அதிகரித்துவரும் இயற்கை அனர்த்தங்களின் காரணமாக வளங்கள் அழிக்கப்பட்டு வருவதனை காணலாம். எதிர்காலத்தில் இவ் அனர்த்த நிலமை உக்கிரமம் அடையும் போது வளங்களைப் பெறுவதில் சிக்கல்கள் தோன்றலாம். உதாரணமாக சீனாவின் நிலக்கரி சுரங்களின் நிலக்கரி அகழ்வுக்கு நிலச்சரிவு அனர்த்தம் தடையாகவுள்ளதால் உலக நிலக்கரி உற்பத்தியில் சீனாவின் பங்கு குறைவடைகின்றது. இதனால் எதிர்கால வளத்தேவையில் குறைவையேற்படுத்துகின்றது.
இன்றைய உலகின் மிகவும் பேசப்படுகின்ற விடயமாக வளங்களை வீண்விரயம் செய்தல் காணப்படுகின்றது. அதிகளவான மக்கள் தேவைக்கு அதிகமாக பயன்படுத்தி வீண்விரயம் செய்கின்றனர். இதனால் குறிப்பிட்ட வளத்தினை எதிர் காலத்தில் பெறமுடியாத நிலையேற்படலாம். உதாரணமாக, அதிகரித்துவரும் சிறிய வாகனங்களின் உற்பத்தியினால் ஒவ்வொருவருக்கும் தனியான வாகனங்கள் பயன்பாட்டினால் அதிகளவான எரிபொருள்கள் விரயம் செய்யப்படுவதனைக் குறிப்பிடலாம்.
உலகில் வளங்களானது ஓர் சமனற்ற தன்மையில் காணப்படுகின்றது. இதனால் இவ் வளங்களுக்கான கேள்வி அதிகரித்து தனியுரிமைப்போட்டி ஏற்படலாம்.
உதாரணமாக, மூன்றாம் உலகமகா யுத்தம் இடம் பெறுமாக இருந்தால் அது சுத்தமான நீருக்காதான் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். மேற்கூறப்பட்ட பல தரப்பட்ட சவால்கள் இருப்பினும் எதிர்காலத்ததை நோக்காக கொண்டு நிகழ்காலத்தில் இருந்தே இச் சவால்களுக்கான தீர்வுகளை நாம் மேற்கொள்ள வேண்டும ;. அந்தவகையில் வளங்களை பாதுகாத்தல் எனப்படுவது சக்தி வளங்களை பயன்படுத்துவதுடன் அவைகளை எதிர்காலத்தேவைகளுக்காக பாதுகாத்தலாகும், வளங்களை எதிர்காலத்தில் பெறுவதற்காக மேறகொள்ள வேண்டிய பல நடவடிக்கைகள் உள்ளது.
அந்தவகையில் வளங்களின் இருப்புத்தன்மையானது குறைவடைந்து வருதைக் காணலாம். இதற்காக வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்துவதும் வீண் விரயத்தை தவிர்த்து நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை மையமாக கொண்டு சூழலுக்கு தீங்கு ஏற்படாத வண்ணம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மாற்று சக்தி வளங்களை கண்டுபிடிக்க வேண்டும் உதாரணமாக, கனிய எண்ணெய்களுக்கு பதிலாக ஞாயிற்றுப்படல்களைப் பயன்படுத்தல்.
சூழல் மாசடைதல் காரணமாக வளங்கள் அழிவடைவதனால் சூழல் மாசடையாதவகையில் வளங்களைப் பேணிச் செல்ல வேண்டும ;. உதாரணமாக, வளம் குன்றிய மண்களுக்கு பசளையிடல் மற்றும் மீள்காடக்கம் செய்வதனைக் குறிப்பிடலாம ;.
வள அகழ்வில் புதிய வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் எதிர்காலத்தில் வளங்களை பெறுவதிலுள்ள சவால்களை குறைக்கலாம். மரபு ரீதியான முறைகளில் இருந்து விடுபட்டு மாற்று சிந்தனையினுடாக சவால்களை முறியடிக்கலாம். இயற்கை அனர்தங்களினால் ஏற்படும் பாதிப்புக்களினால் வளங்களின் அழிவுகளை அனர்த்த முகாமைத்துவதின் ஊடாக குறைக்கலாம். ஜப்பான் போன்ற நாடுகளில் இயற்கை அனர்த்தங்களையே வளமாக மாற்றும் முயற்சிகன் இடம் பெறுவதனைக்காணலாம். உதாரணமாக, ஜப்பான் சுனாமி அலைகளை பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கான முயறசியில் ; வளப்பாதுகாப்புக்கான பரிசோதனைகள் மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும்.
மேலும், சனத்தொகையை வளமாக பாதுகாப்பதாயின் நாட்டுக்கோ, பிரதேசத்திற்கோ, குடும்பத்திற்கோ அது அளவுக்கு போதுமானதாக இருத்தல் வேண்டும். இதற்காக ஒவ்வொரு நாடும் தனது சனத்தொகை தொடர்பான எண்ணக்கருக்களை மீள் பரிசீலனை செய்தல் வேண்டும்.
எனவே, வளங்களை பயன்படுத்தும் போது இயன்ற அளவில் வீண்விரயத்தை தவிர்த்தல் வேண்டும், .புவியில் காணப்படும் வளங்களை பாதுகாப்பது எமது கடமையாகும். எதிர்கால தேவையான சக்தி வளங்களையும் இயற்கை வளங்களையும் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரின் கைகளில் கிடைக்கச் செய்தல் எமது பொறுப்பாகும்,
Comments
Post a Comment