கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.
கலைத்திட்ட மேம்பாட்டின் இன்றைய தேவை மேம்பாடு என்பது, ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு விடயத்தின் செயல்திறன் மற்றும் நிலைத்த தன்மையை அதிகரிக்க திட்டமிடப்பட்ட நிறுவன வாரியான முயற்சியாகும். அதாவது இது ஒரு சிக்கலான கல்வி உத்தியாகும். உண்மைகள், மனப்பாங்குகள், மதிப்புகள் மற்றும் நிறுவன கட்டமைப்பு ஆகியவற்றை மாற்றும் நோக்குடையதாக மேம்பாடு உள்ளது. இத்தகைய மேம்பாடு சகல விடயங்களிலும் காணப்படுகிறது. அந்தவகையில் கலைத்திட்டத்திலும் இது முக்கியமானதாக உள்ளது. கலைத்திட்டம் என்பது, பாடசாலைகளின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்கள் அனைத்து அனுபவங்களையும் கற்பதே கலைத்திட்டமாகும். இத்தகைய கலைத்திட்டத்தில் இடம்பெறும் மேன்மைகள் மாற்றங்கள் அனைத்தையும் கலைத்திட்ட மேம்பாடு எனலாம். மேலும் கலைத்திட்டத்தின் மேம்பாடு என்பது கலைத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்முறையாகும். எனவும் குறிப்பிடலாம். கலைத்திட்டம், கல்வி செயல்முறையின் இதயமாகும். கல்வியும் கலைத்திட்டமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். கல்வி செயல்முறையாக இருக்கும் சமயத்தில் கலைத்திட்டம் அந்த செயல்முறைக்கான வழியாக அமைகிறது. கல்வி கற்றலைக் குறிக்கிறது. க...