யாதாயினும் 1AB அல்லது 1C பாடசாலையைத் தெரிவு செய்து, வளங்களை வினைத்திறனுள்ளதாகப் பயன்படுத்துவதில் இப்பாடசாலை அதிபரின் வகிபாகங்களை முகாமைத்துவத் தொழிற்பாட்டுக் கட்டங்களை அடிப்படையாக கொண்டு விளக்குக.
பொருளடக்கம் 1) ஆய்வுச் சுருக்கம் 2) நன்றியுரை 3) பாடசாலை வளங்கள் பௌதீக வளங்கள் மனித வளங்கள் நேர வளம் நிதி வளம் தகவல் வளம் 4) அதிபர் இவ்வளங்களை முகாமை செய்யும் விதம் 5) வளப்பற்றாக்குறையால் எதிர்நோக்கப்படும் சவால்கள் 6) இச்சவால்களை எதிர்கொள்ள அதிபரினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் 7) பின்னிணைப்பு I பின்னிணைப்பு II பின்னிணைப்பு III ஆய்வுச் சுருக்கம் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சமய விழுமியங்கள் அறக்கருத்துக்கள், ஆற்றல்கள், பண்பாட்டு வடிவங்கள், திறன்கள், நல்ல மனப்பாங்குகள் யாவும் உருவாக்கப்படும் களமாகப் பாடசாலைகள் விளங்குகின்றன. இதனால் பாடசாலைகள் சமூக நிறுவனங்களுள் முதன்மையானதொன்றாக காணப்படுகின்றது. எனவேதான் சமூகத்துக்குத் தேவையான பெறுமதியான ஆற்றலுள்ள பிரஜைகளை உருவாக்கும் பணியினைப் பாடசாலைகள் மேற்கொள்கின...