'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.
கற்றல் ( (Learning) ) என்பது அறிவை, பழக்கங்களை, செயற்திறனை புதிதாக பெற்றுக்கொள்ளல், அல்லது ஏற்கனவே பெற்றவற்றை மெருகூட்டல் அல்லது உறுதிப்படுத்தல் ஆகும். கற்கும் திறனானது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் சில இயந்திரங்களுக்கும் காணப்படுகின்றது. மனிதன் தோன்றியதிலிருந்து கற்றுக் கொண்டே இருக்கின்றான். இதுவே உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணமாகும். குறிப்பாக மனிதர்களைக் குறிப்பிடும்போது கற்றல் என்பது ஆய்வு, அனுபவம், அறிவுறுத்தல், பகுத்தறிவு மற்றும் அவதானிப்பு செயல்முறைகளின் விளைவாகும். கற்றல் என்பது புதிய அறிவைப் பெறுவது மட்டுமல்லாமல், நாம் வாழும் சமுதாயத்துடன் தொடர்புடைய நடத்தைகள், அணுகுமுறைகள் மற்றும் மதிப்புகளை மாற்றியமைப்பதையும் உள்ளடக்குகிறது. கற்றல் என்பது மனிதர்களுக்கு இன்றியமையாதது. ஏனென்றால் நாம் வாழும் சூழலிலும், நம் வாழ்நாள் முழுவதும் நாம் எதிர்கொள்ள வேண்டிய வௌ;வேறு சூழ்நிலைகளிலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள இது உதவுகிறது. கற்றல்(டுநயசniபெ) என்பதற்கு பல்வேறு அறிஞர்களும் பல்வேறு வரைவிலக்கணங்களை வழங்கியுள்ளனர். அந்த வகையில் ச...