Posts

உடலியக்கத் திறன்களின் வளர்ச்சியானது கற்றல், முதிர்ச்சியின் அடிப்படையிலே அமைகின்றன இதனை தெறிவினை யெற்பாடுகளைக் கொண்டு விளக்குதல்.

Image
  சகல உடலியக்க திறன்களின் வளர்ச்சியும் கற்றல் , முதிர்ச்சி போன்ற அமைப்புக்கள் தொழிற்பாட்டு ரீதியாக ஒன்றிணைவதன் மூலமே இயைவுபடுத்தப்படுகின்றன . பல்வேறு தெறிவினை செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உமது கருத்துக்களை விளக்குக . உடலியக்க திறன்களின் வளர்ச்சியானது கற்றல் , முதிர்ச்சி போன்ற அமைப்புக்கள் தொழிற்பாட்டு ரீதியாக ஒன்றிணைவதன் மூலமே இயைவுபடுத்தப்படுகின்றன . இந்த வகையில் கற்றல் , முதிர்ச்சி பற்றி விரிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் . பரம்பரை அலகுகளால் தீர்மானிக்கப்பட்டு இயற்கையாகவும் இயல்பாகவும் நிகழும் மாற்றமே முதிர்ச்சி என வரைவிலக்கணப்படுத்தலாம் . எனவே முதிர்ச்சி என்பது உள்வாரியாக நிகழும் அது வயதிற்கு ஏற்ப நிகழும் . முதிர்ச்சியின் போது குறித்த வளர்ச்சி ஒழுங்கின் படி உடலில் ஒழுங்கான வளர்ச்சி நிகழும் . உள்ளுறுப்புக்கள் சார்ந்த காரணிகள் காரணமாகவும் போசாக்கு சுகாதார நிலை போன்ற அம்சங்கள் காரணமாகவும் ஏற்படத்தக்க சூழலின் பாதகமான செல்வாக்குகள் காரணமாக முதிர்ச்சி பாதிக்கப்படலாம் . முதிர்ச்சியானது உடல் மற்றும் உள...

ஜீன் பியாஜேயின் தூல சிந்தனை பருவ விருத்தி

Image
  ஜீன் பியாஜேயின் தூல சிந்தனை பருவ விருத்தி பற்றிய செயற்பாடுகள் ஆரம்ப    வகுப்புக்களான 3;, 4, 5 ஆகியவற்றின் செயற்பாட்டில் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை ஆராய்க . புறவய அடிப்படையிலும் கணிப்பின் அடிப்படையிலும் அளக்கக்கூடிய தோற்றப்பாடு பற்றிய விஞ்ஞானமே உளவியல் எனலாம் . அதாவது மனிதனது நடத்தை , குணநலன் என்பவற்றை விளக்கும் அறிவியலுடன் தொடர்புடைய பகுதி உளவியலாகும் . இந்த உளவியலானது பல்வேறு வகைகளைக் கொண்டதாகவுள்ளது . மேலும் இது தொடர்பாக பல்வேறு அறிஞர்களும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் . இதில் முக்கியமானவராக ஜீன் பியாஜே எனும் உளவியலாளர் காணப்படுகிறார் பியாஜே சுவிட்ஸர்லாந்தில் 9 ஆகஸ்ட் 1896 பிறந்தார் . இவர் ஓர் உளவியலாளரும் அறிவியலாளருமாவார் . இவர் ஆக்கவியல் கோட்பாடு , மரபுசார் அறிவாய்வியல் , அறிதிறன் வளர்ச்சிக் கோட்பாடுகளின் நிலைப்புத்தன்மை , தன்மையச்சிந்தனை போன்ற பல கோட்பாடுகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது . மேலும் இவர் குழந்தைகளின் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கினார் . சர்வதேச கல்விச்செ...