ஆலோசனை சேவையில் பயன்படுத்தப்படும் முக்கியமான கோட்பாடுகள்
ஆலோசனை சேவையில் பயன்படுத்தப்படும் முக்கியமான கோட்பாடுகள் ஆலோசனைச் சேவையானது தற்காலத்தில் பரந்துபட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இத்துறையில் ஆழமான ஆய்வுகள் மற்றும் புதிய கோட்பாடுகள் உருவாக்கம் பெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் இன்று ஆலோசனை சேவையானது பல்வேறு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இக்கோட்பாடுகளாக கீழ்வருவனவற்றை குறிப்பிடலாம். உளப்பகுப்புக் கொள்கை புலக்காட்சி நிகழ்வுக் கொள்கை நடத்தைவாதக் கொள்கை இருத்தலியல் கொள்கை பகுத்தறிவு வாத கொள்கை சமூக உளவியல் கொள்கை மேற்குறிப்பிட்ட கோட்பாடுகளுள் உளப்பகுப்பு கொள்கை மற்றும் நடத்தைவாத கோட்பாடுகள் என்பன எவ்வாறு ஆலோசனை சேவையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை கீழே விரிவாக நோக்குவோம். உளப்பகுப்புக் கொள்கை இந்தக் கோட்பாட்டை முன் வைத்தவர்கள், சிக்மண்ட் பிராய்ட், அட்லர் (1927), அலெக்சாண்டர் (1963), யுங் (1954), ஹோர்னி (1950), சலைவன் (1953) போன்றோர் ஆவர். இவர்களில் சிக்மண்ட் பிராய்டுடன் ஆரம்பமான அடிப்படை உளப்பகுப்பாய்வு முக்கியமானதாகும். எமது நிகழ்கால நடத்தையில் நனவிலி நோக்கங்களும் முரண்பாடுகளும் முக்கிய இடத்தை வகி