விசேட தேவையுடைய பிள்ளைகளும் மனிதர்கள் என்ற வகையில் கல்வி ஊடாக முன்னேற்றம் பெறுவதற்கு உரித்துக் கொண்டவர்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்கல் சேவை மிக அவசியமாகும். அவர்களின் எதிர்கால வளர்ச்சி தொடர்பில் இதன் அவசியப்பாட்டை பொருத்தமான ஆதாரங்களை காட்டி விபரிக்குக.
சாதாரண பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது உடல், உள மற்றும் மனவளர்ச்சி ரீதியில் இயலாமை கொண்டோரும் மீத்திறன் கொண்ட பிள்ளைகளுமே விசேட தேவையுடைய பிள்ளைகள் ஆகும். இத்தகைய பிள்ளைகள் சாதாரண பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது கற்றல் செயற்பாடுகளில் குறைவாகவே செயற்படுவர். இவர்களுக்கு வழங்கப்படும் கல்வியே விசேட தேவைகள் சார் கல்வியாகும். இது அனைவருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணக்கருவின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு, அவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என்பது நிரூபிக்கப்படுகிறது. விசேட தேவைகள் சார் பிள்ளைகள் எனும்போது மீத்திறன் உடைய பிள்ளைகள் பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகள் கேட்டல் குறைபாடுடைய பிள்ளைகள் கற்றல் இயலாமை உடைய பிள்ளைகள் மொழி பேச்சு குறைபாடுடைய பிள்ளைகள் உடல் குறைபாடு உடைய குழந்தைகள் ஓட்டிசம் போன்ற வகையான பிள்ளைகள் உள்ளடங்குகின்றனர். இவர்களுக்கு கல்வி வழங்கப்படும் போது, அவர்களுக்கு ஆலோசனை வழங்கல் சேவையை வழங்குவது மிக அவசியமான ஒன்றாகும். இச்சேவை அவர்களின் எதிர்கால வாழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக அமைகிறது என்பதை கீழே விரிவ...