ஆசிரியர் அபிவிருத்தி
ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தை தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களான ஆசிரியர்களே மாணவர்களிடையே என்றும் இணக்கத்தை ஏற்படத்துபவர்கள். ஒரு ஆசிரியர் மாணவர்களிடையே காட்டும் உன்னதமான கவனிப்பே அந்த மாணவனை பின்னாளில் சிறந்து விளங்கச் செய்கிறது. களிமண்ணாய்க் கிடந்த மாணவனை இணைத்து அவனுக்கு உருக்கொடுத்து அவனை பக்குவப்படுத்தி இந்த உலகிற்கு நல்லதொரு குடிமகனாய் வழங்கும் பெருமை ஆசிரியர்களுக்கே உரியதாகும். ஆசிரியர் இல்லாத மனித வாழ்வு என்பது இருக்க இயலாது. படித்து பட்டம் பெற்றவனுக்கும், படிக்காமல் பட்டறவு பெற்றவனுக்கும் என்றும் மூலதனம் அவன் பெற்ற ஆசிரியர்கள் தான். ஆசிரியர்களுக்கு மட்டும் என்றும் அந்த தனித்தன்மை உண்டு. ஆசிரியரின் முக்கியத்துவம் மற்;றும் பெருமை பற்றி பல்வேறு அறிஞர்களும் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். அந்த வகையில், ஜிக்ஜேக்ளர் - “கல்விக்கூடம் ஒரு தோட்டம்: மாணவர்கள் செடிகள்: ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள்.” வில்லியம் ஆல்பர்ட் - “சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர் உயிரோட்டத்த...