Posts

Showing posts from 2022

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Image
  கற்றல் ( (Learning) ) என்பது அறிவை, பழக்கங்களை, செயற்திறனை புதிதாக பெற்றுக்கொள்ளல், அல்லது ஏற்கனவே பெற்றவற்றை மெருகூட்டல் அல்லது உறுதிப்படுத்தல் ஆகும். கற்கும் திறனானது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் சில இயந்திரங்களுக்கும் காணப்படுகின்றது. மனிதன் தோன்றியதிலிருந்து கற்றுக் கொண்டே இருக்கின்றான். இதுவே உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணமாகும்.     குறிப்பாக மனிதர்களைக் குறிப்பிடும்போது  கற்றல் என்பது ஆய்வு, அனுபவம், அறிவுறுத்தல், பகுத்தறிவு மற்றும் அவதானிப்பு செயல்முறைகளின் விளைவாகும். கற்றல் என்பது புதிய அறிவைப் பெறுவது மட்டுமல்லாமல், நாம் வாழும் சமுதாயத்துடன் தொடர்புடைய நடத்தைகள், அணுகுமுறைகள் மற்றும் மதிப்புகளை மாற்றியமைப்பதையும் உள்ளடக்குகிறது. கற்றல் என்பது மனிதர்களுக்கு இன்றியமையாதது. ஏனென்றால் நாம் வாழும் சூழலிலும், நம் வாழ்நாள் முழுவதும் நாம் எதிர்கொள்ள வேண்டிய வௌ;வேறு சூழ்நிலைகளிலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள இது உதவுகிறது.  கற்றல்(டுநயசniபெ) என்பதற்கு பல்வேறு அறிஞர்களும் பல்வேறு வரைவிலக்கணங்களை வழங்கியுள்ளனர். அந்த வகையில் ச...

Excuse letter for not attending the exam.

Assume that you are going to write a letter of excuse to the Head / Department of  English Language Teaching for not attending the mid semester examination.  Explain your reasons for that in 150 words.   B.Fathima , EU/IS/2016/AC/001 Faculty of arts and culture, Eastern University, Sri Lanka. 2022.07.28.   Head, Department of   English Language Teaching, Eastern University,   Dear sir,                                Explaining the excuse for missing mid semester exam I am submitting this letter to not only explain the excuse but also to apologize for missing the mid-semester exam. My name is Fathima(EU/IS/2016/AC/001). I am a student   in the 3rd year 2nd semester at the faculty of arts and culture . I had an accident and broke my left hand. Due to this reason, I was hospitalize...

தொழில்சார் ஆலோசனை வழங்கல் செயற்பாட்டில் ஈடுபடுவோர் தொழில்சார் ஆலோசனை தொடர்பில் பல்வேறு கோட்பாடுகளைப் பற்றிய தெளிவு பெற்றிருக்க வேண்டும். அத்தகைய கோட்பாடுகளை தொழில்சார் ஆலோசனைக்கு உதவுமாற்றை விளக்குக.

Image
தற்காலத்தில் உள்ள வழிகாட்டல் ஆலோசனை வழங்கல்   வகைகளில் தொழில்சார் ஆலோசனை வழங்கல் செயற்பாடு மிகவும் முக்கியமானதாகும். இருவருக்கு அல்லது இரண்டுக்கு மேற்பட்டோர் இடையே நிலவும் இயக்க ரீதியான பயனுறுதி மிக்க தொடர்புகளின் ஊடாக உருவாகின்ற உதவி வழங்கல் செயல் முறையே தொழில் வழிகாட்டல் ஆலோசனை வழங்கல் சேவை எனப்படுகின்றது. இத்தகைய தொழில் சார் ஆலோசனை தொடர்பில் ஈடுபடுவோர் பின்வரும் கோட்பாடுகளைப் பற்றிய தெளிவு பெற்றிருத்தல் வேண்டும்.   கிரின்ஸ்பேர்கின் தொழில் வழிகாட்டல் கொள்கை   றொபேட் ஹோபொக்கின் தொழில் வழிகாட்டல் கொள்கை ஆன்றோவின் தொழில்சார் ஆலோசனை வழங்கல் கொள்கை   ஹோலன்ட்டின் தொழில் வழிகாட்டல் கொள்கை  டொனால்ட் சுபரின் தொழில்  வழிகாட்டல் கொள்கை இக் கோட்பாடுகளில் கிரின்ஸ்பேர்கின் தொழில் வழிகாட்டல் கொள்கை,  ஆன்றோவின் தொழில்சார் ஆலோசனை வழங்கல் கொள்கை ஆகிய இரண்டினை பற்றியும் அவை தொழில் வழிகாட்டல் ஆலோசனைக்கு உதவுமாற்றையும் கீழே விரிவாக நோக்குவோம். கிரின்ஸ்பேர்கின் தொழில் வழிகாட்டல் கொள்கை ஒருவர் ஒரு குறித்த சந்தர்ப்பத்தில் எடுத்த முடிவுக்கு அமையவே தனது தொழிலை ...

விசேட தேவையுடைய பிள்ளைகளும் மனிதர்கள் என்ற வகையில் கல்வி ஊடாக முன்னேற்றம் பெறுவதற்கு உரித்துக் கொண்டவர்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்கல் சேவை மிக அவசியமாகும். அவர்களின் எதிர்கால வளர்ச்சி தொடர்பில் இதன் அவசியப்பாட்டை பொருத்தமான ஆதாரங்களை காட்டி விபரிக்குக.

Image
  சாதாரண பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது உடல், உள மற்றும் மனவளர்ச்சி ரீதியில் இயலாமை கொண்டோரும் மீத்திறன் கொண்ட பிள்ளைகளுமே விசேட தேவையுடைய பிள்ளைகள் ஆகும். இத்தகைய பிள்ளைகள் சாதாரண பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது கற்றல் செயற்பாடுகளில் குறைவாகவே செயற்படுவர். இவர்களுக்கு வழங்கப்படும் கல்வியே விசேட தேவைகள் சார் கல்வியாகும். இது அனைவருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணக்கருவின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு, அவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என்பது நிரூபிக்கப்படுகிறது.  விசேட தேவைகள் சார் பிள்ளைகள் எனும்போது மீத்திறன் உடைய பிள்ளைகள்  பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகள்  கேட்டல் குறைபாடுடைய பிள்ளைகள்  கற்றல் இயலாமை உடைய பிள்ளைகள்  மொழி பேச்சு குறைபாடுடைய பிள்ளைகள்  உடல் குறைபாடு உடைய குழந்தைகள்  ஓட்டிசம் போன்ற வகையான  பிள்ளைகள் உள்ளடங்குகின்றனர். இவர்களுக்கு கல்வி வழங்கப்படும் போது, அவர்களுக்கு ஆலோசனை வழங்கல் சேவையை வழங்குவது மிக அவசியமான ஒன்றாகும். இச்சேவை அவர்களின் எதிர்கால வாழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக அமைகிறது என்பதை கீழே விரிவ...