Posts

Showing posts from March, 2022

What Is Affiliate Marketing?

Image
அப்பிலியேட் ( Affiliate) மார்க்கெட்டிங் என்றால் என்ன?    அஃபிலியேட் மார்க்கெட்டிங் என்பது ஒரு துணை நிறுவனம் மற்றொரு நபரின் அல்லது நிறுவனத்தின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான கமிஷனைப் பெறும் செயல்முறையாகும். துணை நிறுவனம் அவர்கள் ரசிக்கும் ஒரு பொருளைத் தேடி, பிறகு அந்தத் தயாரிப்பை விளம்பரப்படுத்தி, அவர்கள் செய்யும் ஒவ்வொரு விற்பனையிலிருந்தும் லாபத்தில் ஒரு பகுதியைப் பெறுகிறது.  விற்பனையானது ஒரு இணையதளத்தில் இருந்து மற்றொன்றுக்கு இணைக்கப்பட்ட இணைப்புகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அஃபிலியேட் மார்க்கெட்டிங் எப்படி வேலை செய்கிறது? தயாரிப்பு சந்தைப்படுத்தல் மற்றும் உருவாக்கம் ஆகியவற்றின் பொறுப்புகளை கட்சிகள்( parties) முழுவதும் பரப்புவதன் மூலம் இணைந்த சந்தைப்படுத்தல் வேலை செய்வதால், பங்களிப்பாளர்களுக்கு லாபத்தில் ஒரு பங்கை வழங்கும் அதே வேளையில், பல்வேறு தனிநபர்களின் திறன்களை மிகவும் பயனுள்ள சந்தைப்படுத்தல் உத்திக்காக நிர்வகிக்கிறது. இந்த வேலையைச் செய்ய, மூன்று முக்கியமானவர்கள் ஈடுபட வேண்டும்: விற்பனையாளர் மற்றும் தயாரிப்பு படைப்பாளிகள். இணைப்பு அல்லது விளம்பரதாரர். நுகர்...

சிறந்த ஆலோசகர் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய பண்புகள்

Image
ஆலோசனை நாடிகளின் பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு மதிப்பிட்டு பொருத்தமான  பதில் மொழிகளை அளிப்பவராகவுள்வறே  ஆலோசகர் ஆவார். இவரது பணி, “ஆலோசனை நாடிகள், இவர்களை சந்திக்க வருகின்ற போது குழப்பமாக சுயமதிப்பீடு குறைந்து தங்களது ஆற்றல்களை புரியாமலேயே வருகின்றனர். இத்தகைய பிரச்சினை பற்றிய தெளிவையும் தீர்வுகள் பற்றிய அறிவும் இல்லாதவர்களாகவே வருகின்றனர். இவர்களுக்கான தீர்வுகளை எடுக்கக்கூடிய ஆற்றல்களை ஆலோசனை நாடியிடம் ஏற்படுத்துவதே ஆகும்”. இத்தகைய சேவையை வழங்கும் ஆலோசகர்கள் சிறந்த பண்புகளை கொண்டிருக்க வேண்டும். அவற்றைக் கீழே விரிவாக நோக்கலாம். ஆலோசனை வழங்கும் நபர் உண்மையில் முன்மாதிரியான தன்மைகளை கொண்டிருத்தல் வேண்டும். அறிவில் தெளிவு மிக்கவராகவும், சக்தி உடையவராகவும், நெகிழ்வானவராகவும் உதவி அளிப்பவராகவும் இருத்தல் வேண்டும். மனித உறவுகளை உறுதி செய்பவை மனநிலையாகும். நாம் கொண்டிருக்கும் எண்ணங்களை ஒருவரிடம் கொண்டுள்ள உறவின் தன்மையையே நிர்ணயிக்கின்றன. ஆலோசனையில் ஈடுபடும்போது உதவி பெறுபவர் குறித்து கொண்டுள்ள எண்ணங்கள் வழிகாட்டலில் வெற்றியை நிர்ணயிக்கின்றன. ஆலோசனை வழிகாட்டல் துறையில் புலமை பெற்றவர...

ஆலோசனை கூறல் சேவையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஆலோசகராக செயற்படும் ஒருவருக்கு உளவியல் அறிவு மிகவும் அவசியமாகும். இதற்கான காரணங்களை குறிப்பிடுதல்.

Image
  தனியாள் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் அனைத்து தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பங்களிலும், உரிய முறையில் அவற்றிற்கு முகங்கொடுக்கும் சக்தியை அவரிடம் கட்டியெழுப்ப உதவும் ஒரு செயல்முறையை ஆலோசனை கூறலாம். இத்தகைய ஆலோசனை கூறல் சேவையினை மேற்கொள்வோர் சாதாரணமானவர்களாக இருக்க முடியாது. அவர்கள் பல்வேறு தகுதிகளையும், பல்வேறு விடயங்கள் பற்றிய அறிவினையும் கொண்டவர்களாக காணப்பட வேண்டும். அந்த வகையில், உளவியல் அறிவு தொடர்பாக  கட்டாயம்         அறிந்திருக்க வேண்டும். உளவியல் அறிவு எனும்போது, மனதை ஆய்வு செய்வதையும், புரிந்து கொள்வதையும், பகுப்பாய்வு செய்வதையும் நோக்கமாகக் கொண்ட துறையே உளவியலாகும். இத்தகைய உளவியலானது, பல வகைகளைக் கொண்டது. இத்தகைய உளவியல் அறிவினை ஆலோசனை மேற்கொள்ளும் ஆலோசகர் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். இதற்கான காரணங்களை கீழே சுருக்கமாகக் குறிப்பிடலாம். ஆலோசனைக்காக நாடி ஆலோசகரிடம் வரும்போது, பல்வேறு பிரச்சினைகளை மனதில் வைத்துக் கொண்டு வருவார். அவ்வாறு வருகின்றவர்கள் பொருளியலாளர், வைத்தியர், மாணவர் என வித்தியாசமான தொழிலை செய்பவர்களாக காணப்படுகின்றனர். இவர...

பாடசாலைகளில் ஆலோசனை வழங்கல் சேவையினை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு நீர் முன்வைக்கும் உபாயங்களைக் குறிப்பிட்டு ஆலோசனை வழங்கல் சேவையினை பயனுறுதியோடு நிறைவேற்றுவதில் உள்ள சவால்களை நடைமுறை உதாரணங்களைக் கொண்டு விபரித்தல்

Image
  ஆலோசனை வழங்கல் சேவையானது பல்வேறு காரணிகளால் தற்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இச்சேவை இல்லாது இருந்திருந்தால் உளரீதியாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது மிகவும் அதிகளவிலேயே காணப்பட்டிருக்கும் இத்தகைய ஆலோசனை வழங்கல் சேவையின் அவசியம் உணரப்பட்டு சகல பாடசாலைகளிலும்  இச்சேவை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இச்சேவை வெற்றிகரமாக மேற்கொள்வதற்குரிய உபாயங்களையும் இச்சேவை பயனுறுதியோடு நிறைவேற்றுவதில் சவாலாக உள்ள விடயங்களையும் கீழே விரிவாக நோக்குவோம். பாடசாலைகளில் ஆலோசனை வழங்கல் சேவையானது வெற்றிகரமாக மேற்கொள்வதற்குரிய உபாயங்களாக கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம். அதிபர் ஆலோசனை வழங்கல் சேவை தொடர்பான அறிவும் தெளிவும் பொறுப்பும் கொண்டவராக தனது கடமைகளைச் செய்தல். ஆலோசகராகச் செயற்படும் ஆசிரியர்கள் தங்களது ஆலோசனை வழங்கல் சேவை தொடர்பான கடமைகள் பொறுப்புக்களை சரிவர செய்தல். ஆலோசனைக்குரிய பயிற்சிகளைப் பெற்றவர்களாக ஆசிரியர்கள் காணப்படல். பெற்றோர்களும் பாடசாலை ஆலோசனை வழிகாட்டல் சேவை தொடர்பான முழுமையான விளக்கங்களைப் பெற்று தங்களது முழுமையான பங்களிப்புக்களை வழங்குதல். மாணவர்களும் தங்களது பிரச்சின...

இடைநிலைப் பாடசாலைகளின் ஆலோசனை வழங்கல் சேவையின் தன்மைகள், நோக்கங்கள்

Image
ஆரம்பப் பாடசாலை மாணவர்களைப் பார்க்கிலும் இடைநிலைப் பாடசாலை மாணவர்களே அதிகளவான பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்கின்றனர். இவர்களே அவர்களது கல்வி வாழ்க்கையை முடித்து சமூகத்துக்கு செல்பவர்கள். இவ்வாறு சமூகத்திற்குள் நுழையும் இம்மாணவர்கள் சிறந்த நற்பிரஜைகளாக நல்லதொரு தொழிழை செய்யக்கூடியவர்களாக திகழ வேண்டும். இதற்காக அவர்களுக்கு பாடசாலையிலே ஆலோசனை வழிகாட்டல் சேவை கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். இந்தவகையில் இடைநிலைப் பாடசாலைகளின் ஆலோசனை வழங்கல் சேவையின் தன்மைகள், நோக்கங்களை கீழே விரிவாக நோக்குவோம். இடை நிலைப் பாடசாலைகளில் ஆலோசனை வழிகாட்டல் சேவையின் தேவையினை உருவாக்கிய காரணிகளாக கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம். குடும்ப சூழ் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் விரும்பத்தக்க பொருத்தமான நடத்தையை விருத்தி செய்வதற்கு பாரம்பரியமாக சமுதாயத்தினால் வழங்கப்பட்டு வந்த ஆதரவு இல்லாத போனமை  கட்டிளைப் பருவ விருத்தியுடன் ஏற்படும் விரைவான மாற்றங்கள் பாடசாலையில் சிக்கல்கள் அதிகரித்துள்ளமை குடும்பத்தகராறு, பெற்றோர் பிரிதல், பெற்றோர் வேலை தேடி வெளிநாடு செல்லுதல், குடும்பத்தின் குறைந்த பொருளாதார நிலை,  க...